கேள்வி : எப்பொழுது திருமணம் ஆகும் ? எப்பொழுது அரசு வேலை கிடைக்கும் ?

மது ஸ்ரீ

பதில் :

லக்னம் – மீனம்

நட்சத்திரம் – ஹஸ்தம் 1ம் பாதம்

நடப்புதிசை – ராகு திசையில் சுக்கிரன் புத்தி (21.4.2020) வரை

 

இந்த ஜாதகருக்கு லக்னத்தில் செவ்வாய்.

ஆனால் கன்னி ராசிக்கு 7ல் செவ்வாய் இருப்பது செவ்வாய் தோஷம். லக்னத்திற்கு 5ல் கேது, ராசிக்கு 5ல் ராகு. இந்த அமைப்பு சர்ப்ப தோஷம் ஆகும்.

திருமணம் 25 வயதுக்கு மேல் செய்வது உத்தமம். வரன் பார்க்கும் பொழுது இதே போல் செவ்வாய் தோஷம், சர்ப்ப தோஷம் உள்ள வரனைப் பார்ப்பது உத்தமம்.

ராசிக்குப் பத்தில் சூரியன், புதன், வியாழன் சேர்க்கை எனவே அரசு உத்தியோகத்திற்கு முயற்சி செய்தால் கிடைக்கும்.

ராகு திசை என்பதால் செவ்வாய்கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சை பழ விளக்கில் நெய் தீபம் ஏற்றி   வழிபட வேண்டும்.

நான்கு வாரம் தொடர்ந்து செய்தால் தடைகள் நீங்கி காரிய அனுகூலம் கிட்டும்.

சர்ப்ப தோஷத்திற்கு வெள்ளிக்கிழமைகளில் விநாயகர் கோயிலில் அரசமரத்தடி நாகர் சிலைகளுக்கு பாலாபிஷேகம் செய்து, நெய் தீபம் ஏற்ற வேண்டும். அதே போல் கருமாரியம்மன் கோயிலில் உள்ள நாகர் சிலைகளுக்கும் பாலூற்றி நெய் தீபம் ஏற்ற வேண்டும்.

முடிந்தால் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவி செய்வதும் தோஷ பரிகாரமாகும்.    

கேள்வி : எப்பொழுது திருமணம் நடக்கும் ? எப்போது சொந்த தொழில் அமையும் ?

சகாய ஜெஸ்வின்

பதில் :

லக்னம் ரிஷபம்

ராசி துலாம்

நட்சத்திரம்விசாகம் 3ம் பாதம்

நடப்புதிசை புதன்திசையில் புதன் புத்தி (சுயபுத்தி) 26.11.2017 வரை

 

ஜாதகருக்கு செவ்வாய் தோஷம் மற்றும் சர்ப்பதோஷம் எதுவும் இல்லை. குரு சந்திர யோகம், குரு மங்கள யோகம் உள்ளது.

2018 பிப்ரவரி மாதம் வரும் குருப்பெயர்ச்சிராசிக்கு இரண்டாமிடம் செல்லும் பொழுது திருமண யோகம் வரும்.

நீங்கள் வெள்ளிக்கிழமை மகாலெட்சுமிகோயிலுக்குச் சென்று நெய்தீபம் ஏற்றி வழிபடுவது உத்தமம். அதே போல் வியாழக்கிழமைதட்சிணாமூர்த்தி கோயிலுக்குச் சென்று நெய்தீபம் ஏற்றுவது உத்தமம். அல்லது நீங்கள்உங்கள் குலத்தெய்வம் வழிபாடு செய்து வந்தால் உத்தமம்.

உங்களுக்கு 10ல் செவ்வாய் இருப்பதுநிர்வாகத்துறை, காவல்துறை, மற்றும் மருந்து, பூமி, வீடு, மனை போன்ற துறைகளும்சிறப்பாக இருக்கும்.

அடுத்து வரும் சனிப்பெயர்ச்சிக்குப் பிறகுதொழில் ரீதியான முன்னேற்றம் வரும். எனவே சூழ்நிலை அனுசரித்து செயல்படுங்கள்.

டிசம்பர் மாதத்திற்கு பிறகு சூழ்நிலைசிறப்பாகும். 

கேள்வி : எப்பொழுது கல்யாணம் ஆகும் ? வேலை வாய்ப்பு எப்படி இருக்கும் ?

கணேஷ் பாபு

பதில் :

 மீனம்

ராசி மகரம்

நட்சத்திரம்அவிட்டம் 1ம் பாதம்

நடப்புதிசை குருதிசையில்சனி புத்தி (04.09.2019) வரை

 

உங்கள்ஜாதகத்தின் சிறப்பு லக்னாதிபன் குரு ஐந்தாமிடத்தில் உச்சம்பெற்று கேது சேர்க்கை இருப்பதுடன் ஏழாம் பார்வையாக குரு சந்திரன், சனி, ராகுவைபார்க்கிறார். குரு சந்திர யோகம் உள்ளது.

நடப்புகுரு மாகதிசை உங்கள் பொளாதார மேம்பாட்டுக்கு வழிவகுக்கும். அடுத்த ஆண்டு குருப்பெயர்ச்சிபிப்ரவரி மாதத்திற்கு பிறகு திருமண யோகம். நல்ல தொழில் அமையும்.

திருமணத்திற்குபிறகு வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் வரும். லக்னத்திற்கு 4ல் செவ்வாய் இருப்பதால்செவ்வாய் தோஷம் உள்ளது.

5ல் கேது சர்ப்ப தோஷம் உள்ளது.

எனவே வரன்பார்க்கும் பொழுது செவ்வாய் தோஷம், சர்ப்ப தோஷம் உள்ள வரனையே பார்ப்பது உத்தமம்.

தோஷத்திற்குதோஷம் யோகமாகும்.

வியாழக்கிழமைதட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். சனிக்கிழமை வெங்கடேசபெருமாளுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

எதிர்காலம்சிறப்பாக இருக்கும்.

தினமும்காக்கைக்கு உணவு வையுங்கள் உங்களுக்கு முன்னால் இருக்கும் தடை நீங்கும். 

கேள்வி : மன்னிக்கவும் பிறந்தநேரம் தவறாக்குறிப்பிட்டுவிட்டேன் தங்களது பொன்னான நேரத்தை வீணாக்கியமைக்கு வருந்துகிறேன்.தயைகூர்ந்து என்மகள் திருமணம் எப்போது நடக்கும் என சொல்லுங்கள் ஐயா

ரஞ்சனி

பதில் :

லக்னம் – மீன ம்

ராசி – சிம்மம்

நட்சத்திரம் –உத்திரம் 1ம் பாதம்


ஜாதகப்படி  தற்பொழுது ராகு திசையில் சனிபுத்தி நடக்கிறது. ராசிக்கு 8ல் செவ்வாய் இருப்பது, செவ்வாய் தோஷம். சந்திரன் கேது சேர்க்கை சர்ப்ப தோஷம் அதனால் தான் திருமணம் காலதாமதம் ஆகிறது. இந்த ஆண்டு வியாழநோக்கு வரவில்லை. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு மேல் வரும் குருப் பெயர்ச்சிக்கு பிறகு திருமண வாய்ப்பு வரும். அத்துடன் ராகு திசையில் சனிபுத்தி முடிந்து அடுத்த ஆண்டு புதன்புத்தி வரும்பொழுது திருமண வாய்ப்பு வரும். வரன் பார்க்கும் போது செவ்வாய் தோஷம் உள்ள வரன் பார்ப்பது உத்தமம். தாய் அல்லது தந்தை வழி உறவில் அமைய வாய்ப்பு உள்ளது. எனவே செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கில் நெய் தீபம் ஏற்றி துர்க்கையம்மன் வழிபாடு செய்தால் தோஷ பரிகாரமாக இருக்கும். தடை நீங்கும். நான்கு வாரம் தொடர்ந்து செய்தால் உத்தமம். பிரதோஷம் அல்லது சிவன் வழிபாடு நன்மை தரும். ராசிக்கு லட்சுமி நரசிம்மர் வழிபாடு நன்மை பயக்கும்.


கேள்வி : என் எதிர் காலம் ஏப்படி இருக்கிறது ? என் பிள்ளை நான் செல்லும் க௫த்தை எற்று கொள்வானா

உஷா

பதில் :

உங்கள் ஜாதகப்படி

லக்கினம் – விருச்சிகம்

ராசி – ரிஷபம்

நட்சத்திரம் –கார்த்திகை 4ம் பாதம்

நடப்புதிசை – குருதிசையில், சுக்ரன் புத்தி

ஜாதகப்படி உங்களுக்குநடப்பு குரு திசையில் சுக்ரன் புத்தி. உங்கள் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.

லக்னத்தில் குரு– ஏழில் சந்திரன். நீங்கள் பிறக்கும்போதே ஏழரை சனியில் பிறந்ததால் உழைப்பு அதிகம்இருக்கும்.

புத்திர ஸ்தானத்துஅதிபதி குரு லக்னத்தில். எனவே, பிள்ளைகள் உங்களுக்கு அடங்கி இருப்பார்கள்.

மூன்றில் செவ்வாய்உச்சம் – உறவுகள் மேம்படும். கவலை வேண்டாம்.

நடப்பு குரு துலாத்தில்இருப்பதால், சுபச் செலவினங்கள் இருக்கும்.

குரு திசை என்பதால்– வியாழக்கிழமைகளில் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி வழிபாடு – நவகிரகத்தில் குரு வழிபாடு செய்துவருவது உத்தமம்.

தினமும் காக்கைக்குஅன்னம் வைத்து வாருங்கள். உங்கள் சிரமம் குறையும்.

கேள்வி : எப்பொழுது நல்ல தொழில் அமையும், எந்த தொழில் செய்யலாம்?

Manikandan.J

பதில் :

உங்கள் ஜாதகப்படி

லக்கினம் – விருச்சிகம்

ராசி – கடகம்

நட்சத்திரம் –ஆயில்யம் 3ம் பாதம்

நடப்புதிசை – சுக்ரதிசை, ராகு புத்தி

ஜாதகருக்கு நடப்புசுக்ர திசை ராகு புத்தி – அரசு சார்ந்த உத்தியோகம், காவல்துறை, எழுத்துத்துறை, மருத்துவத்துறை– என பல துறைகள் உங்கள் திறமைக்கு வரும். புத்திசாலித்தனமான செயல்பாடுகள் மிகுந்த கணினிதுறையும்இருக்கலாம். இவற்றில் உங்களுக்கு பிடித்த துறையில் முயற்சி செய்யுங்கள்.

இந்த ஆண்டு இறுதிக்குள்தொழில் அமையும். ராகு புத்தி முடிவில் அல்லது குரு புத்தி ஆரம்பத்தில் தொழில் அமையும்.

மாத சிவராத்திரிஅல்லது பிரதோஷ வழிபாடு செய்யுங்கள். சிவ வழிபாடு உங்களுக்கு காரிய அனுகூலம் தரும்.

கேள்வி : என்னோட கடன் எப்போது முடிவு பெறும் ?

syedfaizullah s

பதில் :

உங்கள் ஜாதகப்படி

லக்கினம் – தனுசு

ராசி – கடகம்

நட்சத்திரம் –பூசம் 1ம் பாதம்

நடப்புதிசை – புதன்திசை, சுக்கிரன் புத்தி

ஜாதகருக்கு நடப்புபுதன் திசையில் சுக்ரன் புத்தி – கடன் எப்படி முடிவு பெறும்

கடல் என்றால் அலைகள்இல்லாமலா இருக்கும். சுனாமி அலை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

நடப்பு குருப்பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக உள்ளது.

லக்னத்திற்கு லாபஸ்தானத்தில்நடப்பு குரு இருப்பதால், கடன் சுமை குறையும். இந்த ஆண்டு முடிவுக்குள் உங்கள் கடன்சிரமங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவிடும்.

வியாழக்கிழமை தோறும்ஸ்ரீதட்சிணாமூர்த்தி வழிபாடு செய்யுங்கள், நெய்தீபம் ஏற்றுங்கள். உங்கள் சிரமங்களுக்குஏற்ப பரிகாரம் இது.  அப்படி முடியாத பட்சத்தில்வியாழக்கிழமை தோறும் நாகூர் ஆண்டவரை மனதில் நினைத்து வழிபாடு செய்யுங்கள்

கேள்வி : என்னோட திருமணம் எபோது நடக்கும்

Nandakumar

பதில் :

உங்கள்ஜாதகப்படி


லக்னம் ரிஷபம்

ராசி மீனம்

நட்சத்திரம்உத்திரட்டாதி 3ம் பாதம்

நடப்புதிசை - சுக்ர திசை

 

ஜாதகருக்குநடப்பு சுக்ர திசையில் ராகுபுத்தி. இவருக்கு சர்ப்பதோஷம் மட்டும் உள்ளது. அதனால்தான்திருமணத்திற்கு காலதாமதம் ஆகிறது.

2018பிப்ரவரி மாதத்திற்கு மேல் திருமணம் நடக்கும்.

இருந்தாலும்செய்வாய்கிழமை ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சை பழ விளக்கில்நெய்தீபம் ஏற்றி, துர்க்கையம்மன் வழிபாடு செய்ய வேண்டும். தொடர்ந்து நான்கு வாரம்செய்தால் காரியத் தடை விலகும்.

 வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி வழிபாடு உத்தமம். 

கேள்வி : வணக்கம்.எனது மூத்த மகளுக்கு 2013 தை மாதம் முதல் வரன் பார்த்து வருகிறேன்.திருமணம் எப்போது நடைபெறும்? மாப்பிள்ளை எப்படி அமைவார்?

ரஞ்சனி

பதில் :

உங்கள் ஜாதகப்படி

லக்கினம் – கும்பம்

ராசி – சிம்மம்

நட்சத்திரம் –உத்திரம் 1ம் பாதம்

நடப்புதிசை – ராகுதிசை, சனி புத்தி

ஜனன ஜாதகப்படிலக்னத்திற்கு 2இல், ராசிக்கு 8இல் செவ்வாய் இருப்பது கடுமையான செவ்வாய் தோஷம்.

1, 7இல் ராகு,கேது சர்ப்ப தோஷம் உள்ளது. அதனால்தான் தங்களுக்கு திருமணத் தடை ஏற்பட்டுள்ளது. தாங்கள்காளஹஸ்தி கோயிலுக்கு சென்று தோஷ நிவர்த்தி செய்துகொள்வது தோஷ பரிகாரமாகும்.

தோஷ பரிகாரம்செய்தால் – இந்த ஆண்டு துலாத்திலிருக்கும் குரு பார்வை திருமண வாய்ப்பை கொடுக்கும்.

செவ்வாய் கிழமைராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சை விளக்கில் நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

அதே போல் வெள்ளிக்கிழமைவிநாயகர் கோயிலில் அரசமரத்தடி நாகர் சிலைகளுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவது உத்தமம்.

தோஷ பரிகாரம்செய்யுங்கள், கண்டிப்பாக இந்த ஆண்டுக்குள் திருமணம் நடக்கும்.

கேள்வி : வணக்கம் திருமணம் எப்போது?அரசு பணி அமையுமா?

Dநளினா

பதில் :

லக்னம் – மிதுனம்

 ராசி – சிம்மம்

 நட்சத்திரம் - பூரம்3ம் பாதம்

நடப்புதிசை - ராகுதிசையில் கேது புத்தி


இந்த ஜாதகத்தில் கால சர்ப்பதோஷம் உள்ளது.

ராகு, கேதுவிற்குள் அனைத்து கிரகங்களும் அடக்கம். 2ல்செவ்வாய். இதனால் இந்த ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளது. சர்ப்ப தோஷம் உள்ளது. பிறக்கும்போதேஏழரை சனி அமைப்பில் உள்ளது.

இந்த ஜாதகருக்கு திருமணம் தாமதமாகும். எனவே, காளஹஸ்திதிருக்கோயிலுக்கு சென்று ராகு, கேது தோஷ பரிகாரம் செய்வது உத்தமம். வரன்பார்க்கும்பொழுது காலசர்ப்ப தோஷ அமைப்பு, செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகம் - இருந்தால் உத்தமம்.

தோஷத்திற்கு தோஷம் சரியாகும். காலசர்ப்ப தோஷம் 30 வயதுக்குமேல் யோகமாகும்.  நடப்பு குருதுலாத்திலிருந்து ஜந்தாம் பார்வையாக ராசிக்கு 7ஆம் இடத்தை பார்ப்பதால் தோஷபரிகாரம் செய்தால் இந்த ஆண்டுக்குள் திருமணம் கைக்கூடும்.

லக்கனத்தில் குரு, சுக்கிரன் சேர்க்கை சிறப்பு - அரசுஉத்தியோகம் முயற்சித்தால் கிடைக்கும். பூரம் - சுக்ரன் நட்சத்திரம் என்பதால் வெள்ளிக்கிழமைமகாலெட்சுமி வழிபாடு உத்தமம்.

ராகு காலத்தில் தூர்க்கைக்கு எலுமிச்சை விளக்கில் நெய்தீபம்ஏற்றி துர்கை வழிபாடு செய்தால் தடையின்றி நன்மை பயக்கும். அதேபோல் கேதுவிற்கு வெள்ளிக்கிழமை விநாயகர் கோயிலில்,அரசமரத்தடி நாகர் சிலைகளுக்கு பாலாபிஷேகம் செய்தால் சிரமங்கள் விலகும்.  

கேள்வி : எனது மகன் ஆனழகன் உலக பட்டம் ,தொழிலில் முன்னேற்றம் பெறுவாரா?திருமணம் உறவில் அசலில் எப்போது அமையும்?

பூரணசந்திரன்

பதில் :


உங்கள்ஜாதகப்படி


லக்னம் – கும்பம்

ராசி – கன்னி

நட்சத்திரம் – ஹஸ்தம் 3ம் பாதம்


ஜாதகருக்கு நடப்பு ராகு திசையில் சுக்ரபுத்தி. லக்னத்திற்கு எட்டில் ஆறாம் அதிபதி சந்திரன். எனவே உடற்பயிற்சி செய்து ஆணழகனாக இருப்பார். இந்த ஜாதகத்தின் சிறப்பு 7,8,9 ஆம் அதிபதிகள் ஒன்பதாமிடத்தில் இணைந்திருப்பதுடன் குருவும் இணைந்திருப்பதால் 9 ஆம் இட யோக பலன்கள் சிறப்பாக இருக்கும். சிறப்பான சாதனைகள் புரிவார். தொழில் முன்னேற்றம் உண்டு. லக்னத்திற்கு பத்தாம் அதிபதி செவ்வாய் பத்தில் ஆட்சி, நிர்வாகத்துறை, காவல்துறை, எலக்ட்ரானிக்துறை என நல்ல தொழில் அமையும். ரியல் எஸ்டேட் கன்ஸ்ட்ரக்ஷன் துறையும் சிறப்பாக இருக்கும். இவரது ஜாதகம் தோஷமில்லாத ஜாதகம். தந்தை வழி உறவில் திருமணம் நடக்கும். தாய் வழியில் அமையவும் வாய்ப்பு உள்ளது. கிழக்கு திசை, வடக்கு திசையிலிருந்து வரன் அமையும். இவர் ஜயப்பன, தன்வந்திரி பகவான் வழிபாடு செய்வது உத்தமம். கருமாரியம்மன் வழிபாடு சிரமங்களுக்குப் பரிகாரமாக இருக்கும். நடப்பு குருவும், ராகுவும், சனியும் கன்னி ராசிக்கு சாதகமாக இருப்பதால் இவருக்கு இந்த ஆண்டுக்குள் தொழில் முன்னேற்றம் திருமணம் அகும். 


கேள்வி : உடல்நலம் தொடர்ந்து தொல்லை தருவதால் வங்கி பணியை ராஜினாமா செய்துவிட்டு குத்தகை நிலத்தில் விவசாயம் செய்யலாமா? 29, 25 வயதிலுள்ள மகள்களின் திருமணம் ஏன் தாமதமாகிறது?

திருமதி் R மாலா

பதில் :

லக்னம்: கும்பம்

ராசி : மகரம்

நட்சத்திரம்: திருவோணம்4ம் பாதம்

தாங்கள் பிறக்கும்பொழுதேஏழரை சனி உள்ளது. அடுத்து வரும் டிசம்பர் மாதத்தில் சனிப்பெயர்ச்சி  தனுசு ராசிக்கு வரும்பொழுது உங்களுக்கு ஏழரை சனிமூன்றாவது சுற்று. இருந்தாலும் நன்மையே செய்வார்.

பூர்விக சொத்துஉங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

5ஆம் இடத்தை நடப்புகுரு பார்க்கிறார். குழந்தைகள் முன்னேற்றம் நன்றாக இருக்கும்.

2017 செப்டம்பருக்குப்பிறகு தேக ஆரோக்யம் முன்னேற்றம் பெறும்.

ராசிக்கு பத்தாமிடம்குரு வருவதால் பணி மாற்றம், இடமாற்றம் என உங்கள் சிந்தனை செல்கிறது! எதையும் தீர ஆலோசித்துபெருமாள் பாதத்தில் பூப்போட்டு – நல்ல முடிவாக தேர்வு செய்வது உத்தமம்.

நடப்பு திசை என்பதாலும்– திருவோணம் நட்சத்திரம் என்பதாலும் – வெங்கடேசப் பெருமாளை வழிபடுங்கள்.

சனிக்கிழமை வழிபாடுஉத்தமம். கவலை வேண்டாம். உங்களுக்கு எல்லாம் நல்லதே நடக்கும். பெண்கள் இருவரின் எதிர்காலம்பற்றி அவர்களது பிறந்த தேதி, நேரம், இடம் குறித்து – தனித்தனியாக கேள்வி கேளுங்கள்பதில் கிடைக்கும்

கேள்வி : இந்த வருட குரு பெயர்ச்சி எனக்கு எப்படி இருக்கும். வெளிநாடு செல்லும் யோகம் எனக்கு உள்ளதா

v.ஹரிகிருஷ்னமூர்த்தி

பதில் :

உங்கள் ஜாதகப்படி

லக்னம்: சிம்மம்

ராசி: கடகம்

நட்சத்திரம்: பூசம்2ம் பாதம்

குருப்பெயர்ச்சிபலன்கள் சுமாராகவே இருக்கும். தங்களுக்கு தற்பொழுது சனி திசை நடக்கிறது.

குருச்சந்திர யோகம்உள்ளது. குரு லக்னத்திற்கு பத்தாமிடத்தில் உள்ள புதனை பார்க்கிறார். எனவே, வெளிநாடுசெல்லும் வாய்ப்பு உள்ளது.

சனி திசை என்பதால்வெங்கடேசப் பெருமாளை சனிக்கிழமை தோறும் வழிபடுவது உத்தமம்

2017, அக்டோபர்மாதத்திற்கு மேல் வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும்.

கேள்வி : எனக்கு திருமணம் எப்போது நடக்கும் !!

செல்வகிருஷ்ணன்

பதில் :

உங்கள் ஜாதகப்படி

லக்கினம் – சிம்மம்

ராசி – மேஷம்

நட்சத்திரம் –அஸ்வினி 2ம் பாதம்

நடப்புதிசை – சூரியதிசை, சனி புத்தி

தங்கள் ஜாதகப்படி– இந்த ஆண்டு தங்களுக்கு திருமணம் நடைபெற வாய்ப்பு உண்டு.

நடப்பு குரு துலாராசி சஞ்சாரம் உங்கள் லக்னத்திற்கு ஏழாமிடமாகிய கும்ப ராசியை பார்க்கிறார். அடுத்து7ஆம் பார்வையாக மேஷ ராசியைப் பார்க்கிறார். எனவே, இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள்தங்களுக்கு திருமணம் முடியும்.

விநாயகர் வழிபாடுஉத்தமம்.

வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திவழிபாடு – உங்கள் சிரமங்களைப் போக்கும்.

கேள்வி : ஐயா வணக்கம், எனக்கு எப்போது நான்கு சக்கர வாகனம் வாங்கும் யோகம் வரும்

கார்த்திக்கேயன்

பதில் : தங்கள் ஜாதகப்படி துலாம் லக்னம், ரிஷப ராசி, மிருகசீரிட நட்சத்திரம் 1ம் பாதம். நடப்பு – உங்களுக்கு குருமகா திசா – தங்கள் ஜனன ஜாதகத்தில் குரு நாலாமிடத்தில் அதாவது ராசிக்கு ஒன்பதாமிடத்தில் உள்ளார்.


குருநீசம் என்பதால் அடுத்து வரும் சனி திசா உங்களுக்கு சிறப்பாக உள்ளது. காரணம் நான்கு, ஐந்தாமிடத்து அதிபதி என்பதால் சனி திசாவின் ஆரம்பத்தில் நான்கு சக்கர வாகனம் வாங்கும் யோகம் வரும். 


நாலாம் அதிபதி என்பதால் வாகன வசதி வாய்ப்புகளைத் தருவார். குருப்பெயர்ச்சி ராசிக்கு 6ம்மிடம் வருவதால் சிரம பலன்களைத் தவிர்க்க வியாழக்கிழமை ஸ்ரீதட்சிணாமூர்த்தி வழிபாடு செய்யுங்கள். இது சிரமப் பரிகாரமாகும்.

கேள்வி : நான் என்ன தொழில் செய்தால் விரைவில் முன்னேறுவேன். கூடிய சீக்கிரம் பணக்காரனாக வேண்டும்

செந்தில்குமார். பெ

பதில் :

உங்கள் ஜாதகப்படி

லக்கினம் – துலாம்

ராசி – கன்னி

நட்சத்திரம் –உத்திரம் 4ம் பாதம்

நடப்பு – ராகுதிசை – செவ்வாய் புத்தி

தங்கள் ஜாதகப்படிகாலசர்ப்ப தோஷம் யோகம் உள்ளது. 30 வயதுக்கு மேல் திடீர் முன்னேற்றம் – பொருளாதார ரீதியாகஇருக்கும்.

ராகு திசையில்நன்றாக சம்பாதித்து இருப்பீர்கள். லக்னாதிபன் லாப ஸ்தானத்தில் சுயச்சாரம் பெற்று இருப்பதுசிறப்பு. 

உழைப்பால் நல்ல முன்னேற்றம் வரும்.

செப்டம்பர் 18ம்தேதிக்கு மேல் சனி திசை ஆரம்பமாகிறது. சனிதிசையில் வியாபாரம்சம்பந்தப்பட்ட தொழில் விருத்தியாகும். சனி திசைக்கு வெங்கடேச பெருமாள் வழிபாடு உத்தமம்.

குருப்பெயர்ச்சிசெப்டம்பர் 2ம் தேதிக்குமேல் ராசிக்கு 2ம் இடம் வருவதால் வாக்கு, தனம், குடும்பம் மேன்மையாகஇருக்கும்.

கேள்வி : நான் எப்போது வீடு கட்டுவேன்

ராமநாதன்

பதில் : உங்கள் : 

ஜாதகப்படிலக்கினம் – விருச்சிகம்,ராசி – மீனம்,நட்சத்திரம் – ரேவதி 3ம் பாதம்,நடப்பு – சந்திர திசை. ஒன்பதாம் அதிபதி சந்திரன் 5இல் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருப்பது சிறப்பு. பூர்விகச் சொத்து கிடைக்கும் வாய்ப்பு இந்த சந்திர திசையில் உள்ளது. உங்களுக்கு 50 வயது வரை இந்த திசை இருக்கும். எனவே, பூர்விக நிலத்தில் – கடன் வாங்கியாவது வீடுகட்டி முடிப்பீர்கள். அல்லது பூர்விகச் சொத்தாக ஒரு வீடு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.செப்டம்பர் 2ம் தேதி வருகின்ற குருப்பெயர்ச்சியில் குரு உங்களுக்கு சுபச் செலவுகளை வழங்குவார். வீடுகட்டுவதும் சுபச்செலவுதான்.வியாழக்கிழமை தோறும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி வழிபாடு உங்கள் சிரமங்களுக்குப் பரிகாரமாகும்.