தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் 14-.4.2018 முதல் 13.4.2019 வரை. ஜோதிடர்: மு.திருஞானம்

தமிழ் புத்தாண்டு – விளம்பி ஆண்டு 14.04.2018 சனிக்கிழமை சித்திரை மாதம் 1–ம் தேதி தொடங்குகிறது. உத்திரட்டாதி நட்சத்திரம் – தேய்பிறை – திரயோதசி திதியில் – மீன ராசியில் – விளம்பி ஆண்டு துவங்குகிறது. விளம்பி ஆண்டில் பிரதான கிரகங்களில் குரு மட்டுமே புரட்டாசி மாதம் 18–ம் தேதி விருட்சகத்திற்கு வக்ர நிவர்த்தி பெயர்ச்சி ஆகிறார். அதன் பிறகு மாசி மாதம் 29–ம் தேதி தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகிறார். பிரதானமற்ற கிரகங்கள் பெயர்ச்சி ஆக வில்லை.

மேஷம்

இந்த தமிழ் புத்­தாண்டு உங்­க­ளுக்கு புத்­து­ணர்ச்­சி­யு­டன் துவ்­கு­கி­றது! ராசி­யில் சுக்­கி­ரன், சூரி­யன் சேர்க்கை 7ம் இடத்­தி­லி­ருந்து குரு பார்த்து உங்­க­ளுக்கு குரு சந்­தி­ர­யோ­கம் உள்­ளது. சுக­போ­கம், சுக சவுக்­கி­யம், பாராட்டு, கவு­ர­வம் என நற்­ப­லன்­கள் இருந்­தா­லும் தேக ஆரோக்­யக்­குறை, உடற் சோர்வு, மனச்­சோர்வு என சிர­மங்­க­ளும் இருக்­கும் குடும்ப சூழ்­நி­லை­கள் சுக­போ­க­மாக இருக்­கும். தொழில் ரீதி­யான சூழ்­நி­லை­கள் மேன்­மை­யாக இருக்­கும். தொழில் ரீதி­யான வரு­மா­னங்­கள் கூடும். கொடுக்­கல் வாங்­க­ளில் கவ­னம் தேவைப்­ப­டும். இந்த சூழ்­நிலை ஆனி மாதம் வரை தொட­ரும். ஆவ­ணி­யி­லி­ருந்து உங்­கள் தொழில் ரீதி­யான வரு­மா­னம் பெரு­கும். பல வழி­க­ளி­லும் தொழில் சார்ந்த வரு­மா­னம் வரும். வீடு, மனை சார்ந்த விஷ­யங்­கள் அனு­கூ­ல­மா­கும். நீண்ட நாள் திட்­டங்­கள் கை கூடும். ஆவணி, புரட்­டாசி, ஐப்­பசி மாதம் வரை இந்த நிலை நீடிக்­கும். ஆனா­லும், செவ்­வாய் 10ம் இடத்­தில் உச்­சம் பெறு­வ­தால் தொழில் ரீதி­யான சூழ்­நிலை முன்­னேற்­றம் வரும். ஐப்­பசி மாதம் தொடங்கி மார்­கழி மாதம் வரை குரு­வின் சஞ்­சா­ரம் ஆரம்­பத்­தில் சிர­ம­மான சூழ்­நி­லை­களை கொடுத்­தா­லும் மாசி மாதம் குரு­வின் தனுசு ராசி பெயர்ச்சி உங்­க­ளுக்கு நல்ல முன்­னேற்­றத்தை கொடுக்­கும். குடும்ப மேன்மை, மனைவி, மக்­கள், உற­வி­னர்­க­ளு­டன் சந்­தோ­ஷ­மான சூழ்­நி­லை ­யில் இருப்­பீர்­கள். செவ்­வாய் லாபஸ்­தான சஞ்­சா­ரம் லாப­க­ர­மான விஷ­யங்­க­ளுக்கு அடி­கோ­லும். சுக­செ­ளக்­யம் மிகுந்­தி­ருக்­கும். பிர­தான கிர­கங்­க­ளில் கேது 10ம் இடத்­தில் சஞ்­சா­ரம் சிறப்­பாக இருக்­கும். ராகு சஞ்­சா­ரம் வெளி­யூர் பயண அலைச்­சல் – தாயின் தேக ஆரோக்­யக்­குறை போக்­கு­வ­ரத்­தில் முன்­னெச்­ச­ரிக்கை என சிரம சூழ்­நி­லை­கள் இருக்­கும். சனி சஞ்­சா­ரம் எதி­ரி­கள் தொல்லை என சூழ்­நிலை இருக்­கும். இந்த ஆண்­டில் பிர­தான கிர­கத்­தில் குரு மட்­டுமே பெயர்ச்சி ஆவ­தால் மற்ற கிரக சூழ்­நிலை வழக்­கம் போவே இருக்­கும். ஆன்­மிக சிந்­தனை உங்­கள் சிர­மங்­க­ளுக்கு பரி­கா­ர­மாக இருக்­கும். சுப்­பி­ர­ம­ணி­யர், ஆஞ்­ச­நே­யர், ஸ்ரீ தட்­ச­ணா­மூர்த்தி வழி­பாடு உங்­கள் சிர­மங்­களை குறைக்­கும். சூழ்­நி­லையை அனு­ச­ரித்து திட்­ட­மிட்டு செயல்­ப­டு­வது உத்­த­ம­மாக இருக்­கும்.

தொழி­ல­தி­பர்­கள், வியா­பா­ரி­க­ளுக்கு: தொழில் ரீதி­யான சூழ்­நி­லை­கள் கொஞ்­சம் கடி­ன­மாக இருக்­கும். வீண் அலைச்­சல் இருக்­கும். திட்­ட­மிட்டு செயல்­ப­டு­வது உத்­த­மம். நிதி நிலைமை வர­வுக்கு ஏற்ப செலவு இருக்­கும். வியா­பா­ரத்­தில் போட்­டி­கள் கடின உழைப்பு இருக்­கும். ஆனா­லும் லாப­க­ர­மான சூழ்­நிலை இருக்­கும்.

கல்­வி­யா­ளர்­கள், மாண­வர்­க­ளுக்கு: விடா­மு­யற்சி வெற்றி தரும். கடின உழைப்­புக்கு ஏற்ற நற்­ப­லன்­கள் இருக்­கும். வீண் அலைச்­சல் சிர­மப்­ப­டுத்­தும். கலை, இலக்­கி­யம் முன்­னேற்­றம் பெறும். விளை­யாட்டு போட்­டி­க­ளில் விடா­மு­யற்சி பலன் தரும். திட்­ட­மிட்டு செயல்­ப­டு­வது உத்­த­மம்.

விவ­சா­யி­க­ளுக்கு: விவ­சா­யப் பணி­க­ளில் சிர­மம் கூடி­னா­லும் அதற்­கு­ரிய பலன்­கள் மிகுந்து இருக்­கும். கால்­நடை பரா­ம­ரிப்பு சிர­மங்­கள் இருந்­தா­லும், கால்­நடை விருத்தி, நிதி நிலைமை சீரா­கும். கொடுக்­கல் வாங்­க­லில் கவ­னம் தேவை. சூழ்­நி­லையை அனு­ச­ரிப்­பது உத்­த­மம்.

பெண்­க­ளுக்கு : குடும்ப பணி­க­ளில் சிர­மம் அதி­க­ரிக்­கும். எதிர்­பா­ராத செல­வி­னங்­கள் சிர­மம் தரும். அக்­கம் பக்­கத்­தில் கவ­னம் தேவை. அண்­டின் முற்­ப­கு­தியை விட பிற்­ப­குதி சிறப்­பாக இருக்­கும்.

ரிஷபம்

இந்த புத்­தாண்டு உங்­க­ளுக்கு புதுப்­தே­பொ­லி­வு­டன் பிறக்­கி­றது. ராசி­யா­தி­பன் சுக்­கி­ரன் 12ல் சஞ்­சா­ரம் செய்­வ­தால் புத்­தாடை, ஆப­ரண சேர்க்கை இருக்­கும். அயன சயன போகம் மிகுந்­தி­ருக்­கும். பண­வ­ர­வு­கள் திருப்­தி­க­ர­மாக இருக்­கும். சில­ருக்கு இட­மாற்­றம் இருக்­கும். குரு­வின் ஆறா­மிட சஞ்­சா­ரம் குடும்­பத்­தில் சிறு சிறு பிரச்­னை­கள் மன­வ­ருத்­தம் தரும். அவ­சர காரிய நிமித்­தம் கடன் வாங்­கும் சூழ்­நிலை வரும். நாற்­கால் பிரா­ணி­க­ளால் லாபம், வளர்ப்பு பிரா­ணி­கள் விருத்தி சுக ஜீவ­னம், கடன் சுமை குறை­தல், தேக ஆரோக்ய மேன்மை, முயற்­சி­க­ளில் வெற்றி என சூழ்­நி­லை­கள் சாத­க­மாக இருக்­கும். 9ல் கேது சஞ்­சா­ரம் காரி­யத்­தடை, கைப்­பொ­ருள் தவற விடு­தல் தேக ஆரோக்­யக்­குறை என சிர­மங்­கள் இருக்­கும். அஷ்­டம சனி சஞ்­சார சிமங்­கள் அலைச்­சல், கடன் வாங்­கு­தல் சில­ருக்கு காதல் சம்­பந்­தப்­பட்ட பிரச்­னை­கள் கூட்­டா­ளி­க­ளு­டன் மனக்­க­சப்பு என சூழ்­நிலை இருக்­கும். தொழில் ரீதி­யான சூழ்­நிலை முன்­னேற்­ற­மாக இருக்­கும். இந்த சூழ்­நிலை ஆவணி, புரட்­டாசி, ஐப்­பசி மாதம் வரை இந்த நிலை நீடிக்­கும். ஐப்­பசி மாதம் தொடங்கி மார்­கழி மாதம்­வரை குரு சஞ்­சா­ரம் உங்­க­ளுக்கு தன தான்ய விருத்தி, சுப­கா­ரிய அனு­கூ­லம், குடும்ப மேன்மை என நற்­ப­லன்­களை வழங்­கு­வார். மாசி மாதம் குரு­வின் தனுசு ராசி பெயர்ச்சி எட்­டா­மி­டம் என்­ப­தால் சிர பலன்­களை தரு­வார். யருக்­கும் ஜாமீன் பொறுப்பு ஏற்க வேண்­டாம். கொடுக்­கல் வாங்­க­லில் கவ­னம் தேவை. சனி, குரு சேர்க்கை என்­ப­தால் ஆண்­டின் பிற்­ப­கு­தி­யில் கொஞ்­சம் கவ­ன­மா­கவே இருக்­கும் சூழ்­நி­லை­களை அணுக வேண்­டும். பிர­தான கிர­கங்­க­ளில் குரு மட்­டுமே பெயர்ச்சி ஆவ­தால் மற்ற கிரக சூழ்­நி­லை­கள் வழக்­கம் போலவே இருக்­கும். ஆண்­டின் மத்­திய பகு­தி­யில் செவ்­வா­யின் பத்­தா­மிட சஞ்­சா­ரம் உங்­க­ளுக்கு தொழில் ரீதி­யான முன்­னேற்­ற ங்­களை கொடுக்­கும். பெரும்­பா­லான கிர­கங்­கள் சாத­க­மற்ற நிலை­யில் நீடிப்­ப­தால் ஆன்­மிக சிந்­தனை, ஈடு­பாடு உங்­கள் சிர­மங்­க­ளுக்கு பரி­கா­ர­மா­கும். வியா­ழக்­கி­ழமை தட்­சி­ணா­மூர்த்தி வழி­பாடு சனிக்­கி­ழமை வெங்­க­டேச பெரு­மாள் வழி­பாடு உங்­கள் சிர­மங்­களை குறைக்­கும். துர்க்­கை­யம்­மன் வழி­பாடு உங்­கள் சிர­மங்­களை குறைத்து நன்­மை­ய­ளிக்­கும். விநா­ய­கர் வழி­பாடு கேது­வின் சிர­மங்­களை குறைத்து நன்­மை­ய­ளிக்­கும். சூழ்­நி­லையை அனு­ச­ரித்து திட்­ட­மிட்டு செயல்­ப­டுங்­கள். உத்­த­ம­மாக இருக்­கும்.

தொழி­ல­தி­பர்­கள், வியா­பா­ரி­க­ளுக்கு: தொழில் ரீதி­யான முன்­லை­னேற்­றத்­திற்கு குரு இந்த ஆண்டு சிறப்பு அனு­கூ­லம் சேர்ப்­பார். உற்­பத்தி திறன் அதி­க­ரிக்­கும். லாபம் பெரு­கும். வியா­பா­ரத்­தில் முத­லீடு பெரு­கும். கடின உழைப்பு இருந்­தா­லும் லாப­க­ர­மான சூழ்­நிலை நில­வும்.

கல்­வி­யா­ளர்­கள், மாண­வர்­க­ளுக்கு : கல்­வி­யில் நல்ல முன்­னேற்­றம் இருக்­கும். மேற்­கல்வி வசதி வாய்ப்­பு­கள் கூடும். புதிய முயற்சி அனு­கூ­ல­மா­கும். கலை, இலக்­கி­யம், மேன்மை பெறும். விளை­யாட்டு போட்­டி­க­ளில் வெற்றி கிட்­டும்.

விவ­சா­யி­க­ளுக்கு: விவ­சாய பணி­க­ளில் கடின உழைப்பு இருக்­கும். பயன அலைச்­சல் இருக்­கும். கால்­நடை விருத்தி லாபம் தரும். பரா­ம­ரிப்பு சிர­மங்­கள் இருக்­கும். சுபச்­செ­ல­வி­னங்­கள் வரும். கொடுக்­கல், வாங்­க­லில் கவ­னம் தேவை.

பெண்­க­ளுக்கு : குடும்ப பணி­க­ளில் சிறப்பு கூடும். உங்­கள் பேச்­சுக்கு மதிப்பு கூடும். குடும்­பத்­தில் புதிய பொருள் சேரக்கை, சுப­கா­ரிய ஈடு­பாடு மகிழ்ச்சி தரும். இட­மாற்­றம் நன்மை தரும். உற­வு­கள் மேம்­ப­டும். ஆன்­மிக ஈடு­பாடு நன்மை தரும். குழந்­தை­க­ளால் மகி­ழச்­சி­யான சூழ்­நிலை வரும். குழந்­தை­கள் கல்வி முன்­னேற்­றம் தரும்.

மிதுனம்

தமிழ் புத்­தாண்டு உங்­க­ளுக்கு லாப­க­ர­மாக இருக்­கும். ராசி­நா­தன் புதன் சஞ்­சா­ரம் உங்­க­ளுக்கு தொழில் ரீதி­யான முன்­னேற் றங்­களை கொடுக்­கும். சூரிய, சுக்­ரன் லாபஸ்­தான சஞ்­சா­ரம் உங்­க­ளுக்கு பதவி உயர்வு, வீடு, மனை போன்ற விஷ­யளங்­க­ளில் லாபம், பூமி லாபம், அரசு அனு கூ­லம், தொழில் மேன்மை என நற்­ப­லன்­க­ளு­டன் துவங்­கும். ஆனி மாதம் வரை நீடிக்­கும். அதன் பிறகு பண வர­வு­கள் கூடும். உற­வு­கள் மேம்­ப­டும். குரு சஞ்­சா­ரம் உங்­க­ளுக்கு சுப­கா­ரிய அனு­கூ­லம், புத்­தி­ர­ பாக்­யம், செல்­வாக்கு பெரு­கு­தல் என நற்­ப­லன்­கள் இருக்­கும். தேக ஆரோக்­யத்­தில் அவ்­வப்­போது குறை வரும். குடும்­பத்­தில் சிறு சிறு பிரச்­னை­கள், விரோ­தி­க­ளால் தொல்லை, வெளி­யூர் பயண அலைச்­சல் மிகுந்­தி­ருக்­கும். இந்த சூழ்­நிலை புரட்டாசி, ஐப்­பசி மாதம் வரை தொட­ரும். அதன் பிறகு ஐப்­பசி மாதம் தொடங்கி மார்­கழி மாதம் வரை குரு சஞ்­சா­ரம் உங்­க­ளுக்கு சிர­ம­மான சூழ்­நி­லை­களை கொடுக்­கும். கடன் வாங்­கு­தல் குடும்­பத்­தில் வீண் வாக்­கு­வா­தம் என சிர­ம­மான சூழ்­நி­லை­கள் இருக்­கும். செவ்­வாய் எட்­டா­மிட சஞ்­சா­ரம் எதிர்­பா­ராத செல­வி­னங்­கள், சிர­மங்­கள் என சூழ்­நிலை இருக்­கும். ஆனால் மாசி மாதம் குரு தனுசு ராசிக்கு பெயர்ச்­சி­யா­கும் சம­யம் உங்­க­ளுக்கு தன­தான்ய விருத்தி, சுப­கா­ரிய அனு­கூ­லம், குடும்ப மேன்மை என நற்­ப­லன்­கள் மிகுந்­தி­ருக்­கும். செவ்­வாய் பத்­தா­மிட சஞ்­சா­ரம் உங்­கள் தொழில் ரீதி­யான முன்­னேற்­றங்­களை கொடுக்­கும். பிர­தான கிர­கங்­க­ளில் கேது ஒன்­ப­தா­மி­டத்­தில் சஞ்­சா­ரம் உங்­க­ளுக்கு கைப்­பொ­ருளை தொலை த்­தல் என சிர­ம­மான சூழ்­நிலை ஆண்டு முழு­வ­துமே இருக்­கும். விநா­ய­கர் வழி­பாடு இதற்கு பரி­கா­ர­மா­கும். அதே போல் சனி சஞ்­சா­ரம் குடும்­பத்­தில் சிறு சிறு பிரச்­னை­கள், கூட்டா­ளி­க­ளு­டன் மனக்­க­சப்பு, வெளி­யூர் பயண அலைச்­சல் சில­ருக்கு காதல் விவ­கா­ரங்­க­ளில் பிரச்னை என ஆண்டு முழு­வ­துமே இருக்­கும். அதே போல் ராகு சஞ்­சா­ரம் குடும்­பத்தை விட்டு வெளி­யூர் பயண அலைச்­சல், முன்­கோ­பம், பிர­தான கிர­கங்­க­ளில் குரு மட்­டுமே பெயர்ச்சி ஆவ­தால் மற்ற கிரக சூழ்­நிலை வழக்­கம் போல இருக்­கும். ஆன்­மிக சிந்­தனை உங்­கள் சிர­மங்­க­ளுக்கு பரி­கா­ர­மா­கும். விநா­ய­கர், துர்க்கை, பெருமாள் ஆகிய மூன்று தெய்வ வழி­பாடு, தட்சி­ணா­மூர்த்தி வழி­பாடு நன்மை தரும்.

தொழி­ல­தி­பர்­கள், வியா­பா­ரி­க­ளுக்கு: தொழில் ரீதி­யான சூழ்­நி­லை­கள் கடின உழைப்பு இருக்­கும். பயண அலைச்­சல் மிகுந்­தி­ருக்­கும். வியா­பா­ரத்­தில் கடின உழைப்பு, சிர­மப்­ப­டுத்­தும் போட்­டி­கள் மிகுந்­தி­ருக்­கும்.

கல்­வி­யா­ளர்­கள், மாண­வர்­க­ளுக்கு : கல்­வி­யில் முன்­னேற்­ற­மான சூழ்­நிலை இருக்­கும். புதிய முயற்­சி­கள் அனு­கூ­ல­மா­கும். கலை, இலக்­கி­யம் முன்­னேற்­ற­மாக இருக்­கும். விளை­யாட்டு போட்­டி­க­ளில் விடா­மு­யற்சி நற்­ப­லன்­களை தரும்.

விவ­சா­யி­க­ளுக்கு: விவ­சா­யப் பணி­க­ளில் முன்­ய­னேற்­ற­மாக இருக்­கும். கடின உழைப்பு அலைச்­சல் மிகுந்­தி­ருந்­தா­லும் நிதி­நி­லைமை சீராக இருக்­கும். கால்­நடை பரா­ம­ரிப்பு சிர­மங்­கள் இருக்­கும்.

பெண்­க­ளுக்கு: குடும்­பப் பணி­க­ளில் பெண்­க­ளுக்கு சிர­மம் அதி­க­ரிக்­கும். உடல்­சோர்வு மனச்­சோர்வு இருக்­கும். சுப­கா­ரிய ஈடு­பாடு மகிழ்ச்சி தரும். அக்­கம் பக்­கத்­தில் கவ­னம் தேவை. முற்­ப­கு­தியை விட பிற்­ப­குதி சிறப்­பாக இருக்­கும்.

கடகம்

இந்த தமிழ் புத்­தாண்டு உங்­க­ளுக்கு வெற்­றி­க­ர­மான ஆண்­டாக இருக்­கும். ஆண்­டின் துவக்­கத்­தி­லேயே உங்­க­ளுக்கு தொழில் முன்­னேற்­றம், எடுக்­கும் அனைத்து முயற்­சி­க­ளில் வெற்றி, எதிர்ப்­பு­கள் வில­கும், கடன் சுமை குறை­யும், பூமி சார்ந்த விஷ­யங்­கள் லாபம் தரும், பொருள் சேர்க்கை உண்டு, விழக்கு வியாஜ்­ஜி­யங்­க ­ளில் வெற்றி என நற்­ப­லன்­களை இருந்­தா­லும் கேது­வின் எட்­டா­மிட சஞ்­சா­ரம் தேக ஆசூ­ராக்­யக்­குறை, வாக­னத்­தில் செல்­லும்­போது முன்­னெச்­ச­ரிக்கை தேவை. குரு நாலா­மிட சஞ்­சா­ரம் உற­வி­னர்­க­ளி­டையே மனக்­க­சப்பு, அவ­சி­ய­மற்ற பய­ணங்­கள், தேக ஆரோக்­யக்­குறை, சுக­மின்பை என சிரம சூழ்­நி­லை­கள் இருக்­கும். இந்த சூழ்­நி­லை­கள் ஆனி மாதம் வரை தொட­ரும். அதன் பிறகு ஆவணி மாதம் தொடங்கி ஐப்­பசி மாதம் வரை தொழில் மேன்மை, எதிர்ப்பு வில­கல், தேக ஆரோ­கய்க்­குறை, பண­வ­ரவு கூடு­தல், உடல் சோர்வு, மனச்­சோர்வு என சிர­மங்­கள் இருக்­கும். உற­வு­கள் மேன்மை, எதிர்­பா­ராத பண­வ­ரவு, வாக்கு மேன்மை, உங்­கள் பேச்­சுக்கு மரி­யாதை, கண்­ணில் சிற உபாதை என சூழ்­நி­லை­கள் தொட­ரும். ஐப்­பசி மாதம் தொடங்கி மார்­கழி மாதம் வரை குரு­வின் சஞ்­சா­ரம் உங்­க­ளுக்கு பண­வ­ர­வு­கள் அதி­க­ரித்­தல் திரு­ம­ணம் போன்ற சுப­கா­ரிய அனு­கூ­லம் புத்­தி­ர­பாக்­யம், பூர்­வீக சொத்து சார்ந்த விஷ­யங்­கள் அனு­கூ­லம், தேக ஆரோக்­ய­வி­ருத்தி, மற்­று­மு் செல்­வம் செல்­வாக்கு பெரு­கும் வகை­யில் சூழ்­நி­லை­கள் சாத­க­மாக இருக்­கும். மாசி மாதம் குரு­வின் தனசு ராசி பெயர்ச்சி உங்­க­ளுக்கு சிர­ம­மான பலன்­கைள வழங்­கு­வார். பிர­தான கிர­கங்­க­ளில் கேது­வின் எட்­டா­மிட சஞ்­சா­ரம் உங்­க­ளுக்கு சாத­க­மில்லை, குடும்­பத்­தில் வாக்­கு­வா­தம், தேக ஆரோக்­யக்­குறை, போக்­கு­வ­ரத்­தில் முன்­னெச்­ச­ரிக்கை தேவை என ஆண்டு முழு­வ­தும் சிரம பலன்­களை தரு­வார். விநா­ய­கர் வழி­பாடு சிர­மங்­களை போக்­கும். ராகு சஞ்­கா­ரம் அக்னி பயம், வெளி­யூர் பயண அலைச்­சல், உற­வி­ன­ரு­டன் மனஸ்­தா­பம் தேக ஆரோக்­யக்­குறை என ஆண்டு முழு­வ­தும் சிரம பலன்­கள் இருக்­கும். துர்­ககை வழி­பாடு இந்த சர­மங்­களை குறைக்­கும். சனி சஞ்­சா­ரம் சாத­க­மான சூழ்­நி­லை­யில் உள்­ளது. விரோ­தியை வெல்­லு­தல், நீண்­ட­கால கடன் தீரு­தல், வழக்­கில் வெற்றி, தேக­ஆ­ரோக்­யம் என நற்­ப­லன்­களை ஆண்டு முழு­வ­தும் வழங்­கு­பு­வார். பெரு­மாள் வழி­பாடு நன்மை தரும். இந்த ஆண்­டில் பிர­தான கிர­கங்­க­ளில் குரு மட்­டுமே பெயர்ச்சி ஆவ­தால் மற்ற கிரக சூழ்­நிலை வழக்­கம் போல இருக்­கும்.

தொழி­ல­தி­பர்­கள், வியா­பா­ரி­க­ளுக்கு: தொழில் ரீதி­யான விஷ­யங்­க­ளில் கடின உழைப்பு, அலைச்­சல் என சிர­மங்­கள் இருந்­தா­லும் தொழி­லில் நல்ல முன்­னேற்­றம் வரும். முத­லீடு பெருக்­கம், உற்­ப­ததி திறன் கூடு­தல், புதிய தொழில் முயற்சி அனு­கூ­லம் என நற்­ப­லன்­கள் இருக்­கும். வியா­பா­ரத்­தில் சிர­மங்­கள் அதி­கம் இருந்­தா­லும் லாபம் பெரு­கும். வியா­பா­ரம் விருத்­தி­யா­கும்.

கல்­வி­யா­ளர்­கள், மாண­வர்­க­ளுக்கு : கல்­வி­யில் நல்ல முன்­னேற்­றம் வரும். லாப­க­ர­மான விஷ­யங்­கள் அனு­கூ­ல­மா­கும். கலை, இலக்­கி­யம் மேன்மை தரும். விளை­யாட்டு போட்­டி­க­ளில் வெற்றி கிட்­டும். புதிய முயற்­சி­க­ளில் அனு­கூ­லம் கிட்­டும்.

விவ­சா­யி­க­ளுக்கு: விவ­சாயப் பணி­க­ளில் கடின உழைப்பு இருக்­கும். அலைச்­சல், மனச்­சோர்வு இருந்­தா­லும் நிதி­நி­லைமை சீரா­கும். புதிய முயற்­சி­கள் கைகூ­டும். கால்­நடை விருத்­தி­யா­கும். கொடுக்­கல் வாங்­க­லில் கவ­னம் தேவை.

பெண்­க­ளுக்கு: குடும்­பப் பணி­க­ளில் சிர­மம் கூடும். அத்­தி­யா­வ­சி­யத் தேவை­கள் பூர்த்­தி­யா­கும். புதிய பொருள் சேர்க்கை மகிழ்ச்சி தரும். சுப­கா­ரிய ஈடு­பாடு நற்­ப­லன் தரும். ஆன்­மிக ஈடு­பாடு நன்மை தரும். சேமிப்பு உய­ரும். குடும்ப பணி­க­ளில் முன்­னெச்­ச­ரிக்கை தேவை.

சிம்மம்

இந்த தமிழ் புத்­தாண்டு உங்­க­ளுக்கு தொழில் ரீதி­யான முன்­னேற்­றங்­க­ளு­டன் துவங்­கும். சூரி­யன், சுக்­கி­ரன் சேர்க்கை ஒன்­ப­தா­மி­டத்­தில் இருந்து தன­வி­ருத்தி சுக­போ­கம், மகிழ்ச்சி என இருந்­தா­லும் எதிர்­பா­ராத ஆபத்து, தாழ்வு மனப்­பான்மை சிர­மம் தரும். புதன் சஞ்­சா­ரம் புத்­தி­ரர்­க­ளால் மகிழ்ச்சி, புத்­தாடை, ஆப­ரண சேர்க்கை முயற்­சி­க­ளில் வெற்றி. எதிர்ப்பு வில­கல், கடன் தீரு­தல் என நற்­ப­லன்­கள் இருக்­கும். குடும்­பத்தை விட்டு வெளி­யூர் பய­ணம், வீண் செலவு, தூக்­க­மின்மை என ஆடி­மா­தம் வரை உங்­கள் சூழ்­நிலை இருக்­கும். அதன்­பி­றகு ஆவணி மாதம் தொடங்கி ஐப்­பசி மாதம் வரை குரு­வின் சஞ்­சா­ரம் உங்­க­ளுக்கு உற­வி­னர்­க­ளி­டையே மனக்­க­சப்பு, அவ­சி­ய­மற்ற பய­ணம், சுக­மின்மை என சிரம பலன்­க­ளையே தரு­வார். ஆனா­லும் சூரிய, சுக்­ரன் புதன் சஞ்­சா­ரங்­கள் தொழில் ரீதி­யான முன்­னேற்­றங்­க­ளை­யும், லபங்­க­ளை­யும் வழங்­கு­வார்­கள். செவ்­வாய் சஞ்­சா­ரம் உங்­க­ளுக்கு நீண்­ட­நாள் திட்­டங்­கள் கை கூடும் வகை­யில் பலன்­கள் தரு­வார். சனி சஞ்­சா­ரம் குழந்­தை­கள் பரா­ம­ரிப்பு சிர­மங்­கள், தேக ஆரோக்­ய­குறை என பலன்­கள் இருக்­கும். மார்­கழி மாதம் வரை நற்­ப­லன்­க­ளும், சிரம பலன்­க­ளும் மாறி மாறி வரும். ஐப்­பசி மாதம் தொடங்கி மார்­கழி மாதம் வரை குரு­வின் சஞ்­சா­ரம் உங்­க­ளுக்கு சிரம பலன்­க­ளையே தொட­ரு­வார். ஆனா­லும் ஆண்­டின் பிற்­ப­கு­தி­யில் தை மாதம் தொடங்கி குரு­வின் தனுசு ராசி பெயர்ச்சி உங்­க­ளுக்கு நற்­ப­லன்­களை வழங்­கு­வார். குரு­வின் பார்வை, 9ம் இடம், 11ம் இடம் ராசி­யில் பதி­வ­தால் உங்­க­ளுக்கு நற்­ப­லன்­கள் மிகுந்­தி­ருக்­கும். பூர்­வீக சொத்து பிரச்­னை­கள் அனு­கூ­ல­மா­கும். சில­ருக்கு திரு­மண வாய்ப்பு அமை­யும். பிர­தான கிர­கங்­க­ளில் கேது ஆறா­மி­டம் இருந்து நற்­ப­லன்­களை ஆண்டு முழு­வ­தும் வழங்­கு­வார். கடன் தீரு­தல், பூமி லாபம், பொன், பொருள் சேர்க்கை என ஆண்டு முழு­வ­தும் இருக்­கும். ராகு­வின் 12ம் இடம் சஞ்­சா­ரம் தூக்­க­மின்மை, வெளி­யூர் பய­ணம், எதிர்­பா­ராத சிர­மங்­கள், செல­வு­கள் என ஆண்டு முழு­வ­தும் சிரம பலன்­கள் தரு­வார். துர்க்கை ­யம்­மன் வழி­பாடு இந்த சிர­மங்­கள் குறைய வழி­வகை செய்­யும். சனி 5ம் இட சஞ்­சா­ரம் குடும்­பத்தை விட்டு வெளி­யூர் செல்­லு­தல், பயண அலைச்­சல், மனச்­சோர்வு, உடல்­சோர்வு என ஆண்டு முழு­வ­தும் சிர­மங்­களை தரு­வார். பெரு­மாள் வழி­பாடு இந்த சிர­மங்­க­ளுக்கு பரி­கா­ர­மாக இருக்­கும். துர்க்கை,பரு­மாள், தட்­சி­ணா­மூர்த்தி, விநா­ய­கர் வழி­பாடு சிர­மங்­களை குறைக்­கும்.

தொழி­ல­தி­பர்­கள், வியா­பா­ரி­க­ளுக்கு: தொழில் ரீதி­யான சூழ்­நி­லை­கள் கடின உழைப்பு, அலைச்­சல் இருக்­கும். உங்­கள் புதிய முயற்­சி­கள் அனு­கூ­ல­மா­கும். உற்­பத்தி திறன் கூடும். பரா­ம­ரிப்பு செல­வு­கள் வரும். வியா­பா­ரத்­தில் கடின உழைப்பு அலைச்­சல் இருந்­தா­லும் உங்­கள் பேச்சு சாதூர்­யத்­தால் லாபம் பெரு­கும்.

கல்­வி­யா­ளர்­கள், மாண­வர்­க­ளுக்கு : கல்­வி­யில் மேன்மை கூடும். உங்­கள் பேச்­சுத்­தி­றன் கூடும். கலை, இலக்­கி­யம் மேன்மை தரும். விளை­யாட்டு போட்­டி­க­ளில் வெற்றி கிட்­டும். உங்­கள் முயற்­சி­கள் அனு­கூ­ல­மா­கும். திட்­ட­மிட்டு செயல்ப­­டு­வது உத்­த­மம்.

விவ­சா­யி­க­ளுக்கு: விவ­சா­யப் பணி­க­ளில் கடின உழைப்பு இருக்­கும். பூமி சார்ந்த விஷ­யங்­கள் லாபம் தரும். நிதி நி­லைமை சீரா­கும். கால்­நடை விருத்­தி­ யா­கும். கொடுக்­கல் வாங்­க­லில் கவ­னம் தேவை. திட்­ட­மிட்டு செயல்­ப­டு­வது உத்­த­மம்.

பெண்­க­ளுக்கு: குடும்ப சூழ்­நி­லை­கள் சிறப்­பாக இருக்­கும். உங்­கள் குடும்ப பணி பாராட்டு பெறும் வகை­யில் இருக்­கும். புதிய பொருள் சேர்­ககை, நினைத்த காரி­யம் கை கூடு­தல் என நற்­ப­லன்­கள் இருக்­கும். தேக ஆரோக்­யத்­தில் கவ­னம் தேவை.

கன்னி

இந்த தமிழ் புத்­தாண்டு உங்­க­ளுக்கு புத்­து­ணர்ச்­சி­யு­டன் துவங்­கும். குரு­வின் சஞ்­சா­ரம் உங்­கள் வாக்கு, தனம், குடும்ப விஷ­யங்­க­ளில் அனு­கூ­லம் தரும். எதிர்ப்­பு­கள் வில­கும். வாக்­கி­னால் வளம் பெரு­கும். பண வர­வு­கள் கூடும். வாழ்க்­கைத்­துணை சேமிப்பு உய­ரும். வாழ்க்கை வசதி வாய்ப்­பு­கள் பெரு­கும். சுக­போ­கம் மிகுந்­தி­ருக்­கும். மகிழ்ச்­சி­யான சூழ்­நிலை இருக்­கும். நினைத்த காரி­யம் கை கூடும். ஆனா­லும், அரசு சார்ந்த விஷ­யங்­க­ளில் பயம், தேக ஆரோக்ய குறை, புத்­தி­ரர்­க­ ளால் சிர­மம், வீண் விர­யம், அவ­சி­ய­மற்ற பய­ணம், உற­வி­னர் பகை என சிர­மங்­க­ளும் இருக்­கும். பண­வ­ர­வு­கள் தரா­ள­மாக இருக்­கும். இந்த சூழ்­நிலை ஆடி மாதம் வரை நீடிக்­கும். அதன் பிறகு ஆவணி தொடங்கி ஐப்­பசி மாதம் வரை தொழில் ரீதி­யான முன்­னேற்­றங்­கள் கூடும். வரு­மா­னம் கூடும். செல்­வச் செழிப்பு மிகுந்­தி­ருக்­கும். சில விஷ­யங்­கள் காரி­யத்­த­டை­யா­கும். குடும்ப விஷ­யங்க ­ளில் அதிக அக்­கறை காட்­டு­வீர்­கள். புதிய பொருள் சேர்க்கை என சூழ்­நி­லை­கள் ஓர­ளவு அனு­கூ­ல­மாக இருக்­கும். ஐப்­பசி மாதத்­திற்கு பிறகு குரு­வின் சஞ்­சா­ரம் சற்று சிர­ம­மான சூழ்­நி­லை­களை உரு­வாக்­கும். குடும்­பத்­தில் தேவ­யைற்ற பிரச்­னை­க­ளால் மனக்­க­வலை வரும். மார்­கழி மாதம் வரை இந்த சூழ்­நிலை நீடிக்­கும். அதன் பிறகு குரு­வின் தனுசு ராசி பெயர்ச்சி உங்­க­ளுக்கு சாத­க­மற்ற சூழ்­நி­லை­யா­கும். நாலா­மிட சஞ்­சா­ரம் உற­வி­னர்­க­ளி­டையே மனக்­க­சப்பை ஏற்­ப­டுத்­தும், சுக­மின்மை போக்­கு­வ­ரத்­தில் சிர­மம் என சூழ்­நி­லை­கள் சிர­ம­மாக இருக்­கும். ஆண்­டின் முற்­ப­கு­தி­யில் நற்­ப­லன்­கள் மிகு­தி­யாக இருந்­தா­லும் பிற்­ப­கு­தி­யில் சிரம பலன்­கள் கூடும். இறை­ய­ருள் துணை நிற்­கும். பிர­தான கிர­கங்­க­ளில் ராகு மட்­டுமே லாபஸ்­தா­னத்­தில் சாத­க­மாக இருக்­கி­றார். சுக­செ­ளக்­யம், பண­வ­ரவு, தன­லா­பம் என நற்­ப­லன்­களை ஆண்டு முழு­வ­தும் வழங்­கு­வார். குரு­மட்­டுமே பெயர்ச்சி ஆவது ஆண்­டின் முற்­ப­குதி சுபிட்­சம் பிற்­ப­குதி சிர­மம் கேது சஞ்­சா­ரம் புத்­தி­ரர்­க­ளால் சிர­மம், விநா­ய­கர் வழி­பாடு சிர­மப் பரி­கா­ர­மா­கும். சனி­யின் நாலா­மிட சஞ்­சா­ரம், பிறந்த இடம் விட்டு வெளி­யூர் செல்­லு­தல்,தாயார் சுக­மின்மை, வேண்­டத்­தக்­க­வர் கல­கம் செய்­தல் என சிர­மங்­கள் ஆண்டு முழு­வ­தும் இருக்­கும். பெரு­மாள் வழி­பாடு சிர­மங்­க ­ளுக்கு பரி­கா­ர­மா­கும். குரு­விற்கு தட்­சிணா­ மூர்த்தி வழி­பாடு, சிர­மங்­களை குறைக்­கும்.

தொழி­ல­தி­பர்­கள், வியா­பா­ரி­க­ளுக்கு: தொழில் ரீதி­யான சூழ்­நி­லை­கள் விருத்­தி­ யா­கும். லாபம் பெரு­கும். உற்­பத்தி திறன் அதி­க­ரிக்­கும். நிதி­நி­லைமை கூடும். வியா­பா­ரத்­தில் நல்ல முன்­னேற்­றம் இருக்­கும். இட­மாற்­றம், வியா­பார விரு­து்தி மூல­த­னப் பெருக்­கும் என நற்­ப­லன்­கள் மிகுந்­தி­ருக்­கும்.

கல்­வி­யா­ளர்­கள், மாண­வர்­க­ளுக்கு : கல்­வி­யில் சிறப்பு கவ­னம் தேவைப்­ப­டும். விடா­மு­யற்சி முன்­னேற்­றம் தரும். கலை, இலக்­கி­யம் முன்­னேற்­ற­மாக இருக்­கும். விளை­யாட்டு போட்­டி­க­ளில் கடின உழைப்பு, விடா­மு­யற்சி நற்­ப­லன் தரும். சூழ்­நிலை அனு­ச­ரித்து திட்­ட­மிட்டு செயல்­ப­டு­வது உத்­த­மம்.

விவ­சா­யி­க­ளுக்கு: விவ­சா­யப் பணி­கள் முன்­னேற்­ற­மாக இருக்­கும். பூமி சம்­பந்­தப்­பட்ட விஷ­யங்­கள் லாபம் தரும். கால்­நடை விருத்தி லாபம் தரும். பொரு­ளா­தார முன்­னேற்­ற­மாக இருக்­கும். கொடுக்­கல் வாங்­க­லில் கவ­னம் தேவை.

பெண்­க­ளுக்கு: குடும்­பப்­ப­ணி­க­ளில் சிர­மம் அதி­க­ரிக்­கும். சுப­கா­ரிய முயற்சி அனு­கூ­லம் தரும். புதி­ய­பொ­ருள் சேர்க்கை, வீடு, மனை யோகம் தரும். அக்­கம் பக்­கத்­தில் கவ­னம் தேவை. திட்­ட­மிட்டு செயல்­ப­டு­வது உத்­த­மம்.

துலாம்

இந்த தமிழ் புத்­தாண்டு உங்­க­ளுக்கு புதுப்­பொ­லி­வு­டன் துவங்­கு­கி­றது! சனி, செவ்­வாய் மூன்­றா­மி­டத்­தில் சேர்க்கை சிறப்பு இறை­ய­ருள் உங்­க­ளுக்கு துணை நிற்­கும். பண­வ­ர­வு­கள் தாரா­ள­மாக இருக்­கும். விரோ­தி­களை வெல்­லும் வகை­யில் செயல்­ப­டு­வீர்­கள். கால்­நடை விருத்தி, வளர்ப்பு பிரா­ணி­கள் அதி­க­ரித்­தல் – சுக­ஜீ­வ­னம், கடன் தீரு­தல், தேக ஆசூ­ராக்­யம், முயற்­சி­க­ளில் வெற்றி என நற்­ப­லன்­கள் இருந்­தா­லும் சூரி­யன், சுக்­கி­ரன் 7ம் இட சேர்க்கை உங்­க­ளுக்கு வெளி­யூர் பய­ணம், வாழ்க்கை துணை மற்­றும் அலு­வ­ல­கத்­தில் பெண்­கள் மூலம் இன்­னல்­கள் வரும். தாயார் தேக ஆரோக்­யத்­தில் கவ­னம் தேவைப்­ப­டும். புதன் சஞ்­சா­ரம், வெற்றி, காரிய அனு­கூ­லம், சுப­கா­ரி­யம், தொழில்­மேன்மை என நற்­ப­லன்­கள் தரும். மேற்­கு­றிப்­பிட்ட நிலை ஆடி மாதம் வரை நீடிக்­கும். அதன் பிறகு ஆவணி மாதம தொடங்கி ஐப்­பசி மாதம் வரை உங்­கள் தொழில் ரீதி­யான முன்­னேற்­றம் இருக்­கும். பூமி சார்ந்த விஷ­யங்­கள் லாபம் தரும். வீடு, மனை யோகம் வரும். அரசு அனு­கூ­லம் வரும். செவ்­வாய் சஞ்­சா­ரம் உங்­க­ளுக்கு பொன் பொருள் சேர்க்கை, கடன் சுமை குறை­தல் என நற்­ப­லன்­கள் தரும். குரு துக்ர நிவர்த்தி உங்­க­ளுக்கு நற்­ப­லன்­களை தரும். வாக்­கி­னால் வளம் பெரு­கும். குடும்­ப­மேன்மை என நற்­ப­லன்­கள் இருக்­கும். இந்த நிலை ஐப்­பசி மாதம் வரை நீடிக்­கும். அதன் பிறகு ஐப்­பசி தொடங்கி தை மாதம வரை குரு உங்­க­ளுக்கு 2ம் இட நற்­ப­லன்­களை வழங்­கு­வார். பண வர­வு­கள் தாரா­ள­மாக இருக்­கும். எதிர்ப்பு வில­கும் உங்­கள் பேச்சு மரி­யாதை கூடும். ஆண்­டின் இறுதி கட்­டத்­தில் மாசி மாதம் குரு­பெ­யர்ச்­சி­யாகி தனுசு ராசி­யில் சஞ்­ச­ரிக்­கும் பொழுது சிரம பலன்­களை தரு­வார். குடும்ப சிர­மம் வேலை பளு, காரி­யத்­தடை என சிர­மங்­கள் இருக்­கும். இந்த விளம்பி ஆண்­டில் பிர­தான கிர­கங்­க­ளில் குரு மட்­டுமே பெயர்ச்சி வரு­கி­றார். சனி­யின் மூன்­றா­மிட சஞ்­சா­ரம் ஆண்டு முழு­வ­தும் நற்­ப­லன்­கள் வழங்­கு­வார். ராகு 10 இடம் சஞ்­சா­ரம் தொழில் ரீதி­யான சிர­மங்­களை ஆண்டு முழு­வ­தும் வழங்­கு­வார். எனவே துர்க்­கை­யம்­மன் வழி­பாடு உங்­கள் சிர­மங்­க­ளக்கு பரி­கா­ர­மா­கும். கேது­வின் நாலா­மிட சஞ்­சா­ரம் வயிற்று உபாதை போக்­கு­வ­ரத்­தில் சிர­மம், தாயார் தேக ஆரோக்­யக்­குறை என சிர­மங்­களை ஆண்டு முழு­வ­தும் தரு­வார். விநா­ய­கர் வழி­பாடு இந்த சிர­மங்­க­ளுக்கு பரி­கா­ர­மா­கும். மொத்­தத்­தில் இந்த ஆண்டு உங்­க­ளுக்கு முற்­ப­குதி சிறப்­பாக இருக்­கும். பிற்­ப­கு­த­யில் சிர­மங்­கள் அதி­கம் இருக்­கும்.

தொழி­ல­தி­பர்­கள், வியா­பா­ரி­க­ளுக்கு: தொழில் ரீதி­யான சூழ்­நி­லை­க­ளில் கடின உழைப்பு, பரா­ம­ரிப்பு சிர­மங்­கள் ரிப்­பேர் செல­வி­னங்­கள் என இருக்­கும் வர­வுக்கு ஏற்ப செல­வு­கள் இருக்­கும். வியா­பார விருத்­தி­யா­கும். கொடுக்­கல் வாங்­க­லில் கவ­னம் தேவை.

கல்­வி­யா­ளர்­கள், மாண­வர்­க­ளுக்கு : கல்­வி­யில் நல்ல முன்­னேற்­றம் வரும். கலை இலக்­கி­யம் மேன்மை தரும். விளை­யாட்டு போட்­டி­க­ளில் வெற்றி கிட்­டும். உங்­கள் செயல்­பாடு புத்­தி­சா­லித்­த­ன­மாக இருக்­கும். திட்­ட­மிட்டு செயல்­ப­டு­வது உத்­த­மம்.

விவ­சா­யி­க­ளுக்கு: விவ­சா­யப் பணி­க­ளில் கூடு­தல் சிர­மம் இருந்­தா­லும் பலன்­கள் சிறப்­பாக இருக்­கும். நிதி நிலைமை முன்­னேற்­ற­மாக இருக்­கும். கால்­நடை பரா­ம­ரிப்பு செல­வு­கள் கூடும். வெளி­யூர் பயண அலைச்­சல் மிகுந்­தி­ருக்­கும். முன்­னெச்­ச­ரிக்­கை­யு­டன் திட்­ட­மிட்டு செயல்­ப­டு­வது உத்­த­மம்.

பெண்­க­ளுக்கு: குடும்ப பணி­யில் சிர­மங்­கள் கூடும். புதிய பொறுப்­பு­கள் அதி­க­மா­கும். குடும்­பத்­தில் புதிய பொருள் சேர்க்கை கூடும். ஆடம்­ப­ர­மான விஷ­யங்­க­ளில் இடு­பாடு அதி­க­மா­கும். வெளி­யூர் பயண அலைச்­சல் எதிர்­பா­ராத செல­வி­னங்­கள் சிர­மம் தரும். தேக ஆரோக்­யத்­தில் கவ­னம் தேவை.

விருச்சிகம்

இந்த புத்­தாண்டு உங்­க­ளக்கு கூடு­தல் சிறப்பு பலன்­க­ளு­டன் துவங்­கும். ராசிக்கு 6ம் இடத்­தில் சூரி­யன் சுக்­கி­ரன் சேர்க்கை உங்­க­ளுக்கு வீடு, மனை அமை­தல் பூமி லாபம் சில­ருக்கு பதவி உயர்வு, தன­லா­பம், பண­வ­ரவு, பகை­வரை அழித்­தல் எதிர்ப்பு வில­கல் என்று நற்­ப­லன்­கள் மிகுந்­தி­ருக்­கும். ஆனால் கொடுக்­கல் வாங்­க­லில் கவ­னம் தேவை. கடன் வாங்­கும ்பொழுது சிர­மம் என சிரம பலன்­க­ளும் இருக்­கும். குடும்­பத்­தில் சிறு சிறு பிரச்­னை­கள் சிர­மம் தரும். வீண் பழி, எதிர்­பா­ராத சிர­மங்­கள் என புத சஞ்­சா­ரம் சிர­மங்­கள் தரும். இந்த சூழ்­நி­லை­கள் ஆடி­மா­தம் வரை நீடிக்­கும். ஆவணி தொடங்கி ஐப்­பசி வரை உங்­க­ளுக்கு சூழ்­நலை மாற்­றம் சோம்­ப­லான சிந்­தனை முன்­கோ­பம் என சிர­மங்­கள் இருக்­கும். ஆனா­லும் மூன்­றா­மிட கேது உங்­க­ளுக்கு பக்­க­ப­ல­மாக இருந்து இறை­ய­ருள் தரு­வார். உஷ்ண சம்­பந்­தப்­பட்ட உபாதை அரசு வழி பயம் – பயண அலைச்­சல் என செவ்­வாய் சஞ்­சா­ரம் சிர­மம் தரும். ராகு சஞ்­சா­ரம் உங்­க­ளுக்கு எதிரி தொல்லை காரி­யத்­தடை என சிர­மம் தரும். ஐப்­பசி மாதம் தொடங்கி மார்­கழி மாதம் வரை உங்­க­ளுக்கு குரு நற்­ப­லன்­கள் வழங்­கும். பூர்­வீக சொத்து பிரச்­னை­க­ளில் அனு­கூ­லம் புத்­தி­ரர்­க­ளால் மகிழ்ச்சி – முத­லீடு பெரு­கும். தீர்த்த யாத்­திரை பய­ணம் என நற்­ப­லன்­கள் தொட­ரும். ஆண்­டின் இறு­தி­யில் குரு­வின் தனுசு ராசி பெயர்ச்சி பலன்­கள் சிறப்­பாக இருக்­கும். குடும்ப மேன்மை, வாக்­கி­னால் வள­ரும் நல­மும் வந்து சேரும். பொன்­பொ­ருள் சேர்க்கை என நற்­ப­லன்­கள் இருக்­கும். பிர­தான கிர­கங்­க­ளில் குரு மட்­டுமே இந்த விளம்பி ஆண்­டில் பெயர்ச்சி ஆகி­றார். அது முற்­ப­கு­தி­யில் சுபச் செல­வு­க­ளும் ராசி­யில் சூழ்­நிலை மாற்­றம் பிற்­ப­கு­தி­யில் வாக்கு தனம் குடும்ப மேன்மை தரு­வார். மற்ற பிர­தான கிர­கங்­க­ளில் மூன்­றா­மிட கேது சஞ்­சா­ரம் இறை­ய­ருள், தன­லா­பம் எதி­ரி­களை வெல்­லு­தல் வெற்றி என நற்­ப­லன்­களை ஆண்டு முழு­வ­தும் வழங்­கு­வார். ராகு சஞ்­சா­ரம் 9ம் இடத்­தில் சத்ரு விருத்தி பிற­ருக்கு கட்­டுப்­ப­டு­தல் காரி­யத்­தடை என சிரம பலன்­களை ஆண்டு முழு­வ­தும் தரு­வார். எனவே துர்க்கை வழி­பாடு உங்­கள் சிர­மங்­க­ளுக்கு பரி­கா­ர­மாக இருக்­கும். சனி சஞ்­சா­ரம் 2ம் இடத்­தில் உங்­க­ளுக்கு தூர தேச சஞ்­சா­ரம், திருட்டு பயம், குடும்­பத்தை விட்டு வெளி­யூர் பய­ணம் – பண விர­யம் என்று ஆண்டு முழு­வ­தும் சிரம பலன்­களை தரு­வார். இந்த சிர­மங்­க­ளுக்கு வெங்­க­டேச பெரு­மாள் வழி­பாடு சிரம பரி­கா­ர­மாக இருக்­கும்.

தொழி­ல­தி­பர்­கள், வியா­பா­ரி­க­ளுக்கு: தொழில் ரீதி­யான சூழ்­நி­லை­கள் லாப­க­ர­மாக இருக்­கும். உற்­பத்­தித் திறன் அதி­க­ரிக்­கும். நிதி­நி­லைமை உய­ரும். வியா­பா­ரத்­தில் கடின உழைப்பு, போட்டி சிர­மம் தந்­தா­லும் லாபம் பெரு­கும். வியா­பார விருத்­தி­யா­கும்.

கல்­வி­யா­ளர்­கள், மாண­வர்­க­ளுக்கு : கல்­வி­யில் முன்­னேற்­ற­மான சூழ்­நிலை நில­வும். கலை, இலக்­கி­யம் மேன்மை பெறும். விளை­யாட்டு போட்­டி­க­ளில் வெற்றி கிட்­டும். தன்­னம்­பிக்கை விடா­ய­மு­யற்சி அவ­சி­யம் தேவை.

விவ­சா­யி­க­ளுக்கு: விவ­சா­யப் பணி­க­ளில் நல்ல முன்­னேற்­றம் வரும். பூமி சார்ந்த விஷ­யங்­கள் லாபம் தரும். பொரு­ளா­தார மேன்மை, உற­வு­கள் மேன்மை, கால்­நடை விருத்தி என நற்­ப­லன்­கள் இருக்­கு­மு். வெளி­யூர் பயண அலைச்­சல், சிர­மம் தரும்.

பெண்­க­ளுக்கு: குடும்­பப் பணி­க­ளில் பெண்­க­ளுக்கு சிறப்பு கூடும். வீடு, மனை, யோகம் கிட்­டும். பொரு­ளா­தார முன்­னேற்­றம் இருக்­கும். சுப­கா­ரிய அனுகூ­லம் கிட்­டும். குடும்­பப் பணிகளில் முன்­னெச்­ச­ரிக்கை தேவை. தேக ஆரோக்­யத்­தில் கவ­னம் தேவை.

தனுசு

இந்த புத்­தாண்டு உங்­க­ளுக்கு புத்­து­ணர்ச்சி தரும் வகை­யில் துவங்­கும். லாபஸ்­தா­னத்­தில் குரு சஞ்­சா­ரம் உங்­க­ளுக்கு எண்ணி எண்­ணம் ஈடே­றும். தன­லா­பம், பொரு­ளா­தார முன்­னேற்­றம், வீடு, மனை, பூம் போன்ற விஷ­யங்­கள் லாப­க­ர­மாக இருக்­கும். ஐந்­தா­மி­டத்­தில் சுக்ர சஞ்­சா­ரம் குரு மகான் தரி­ச­னம், பகை பாராட்­டி­ய­வர்­கள் நட்பு பாராட்­டும் வகை­யில் சூழ்­நிலை மாறும். தன­லா­பம், பண­வ­ரவு என நற்­ப­லன்­கள் மிகுந்­தி­ருக்­கும். ஆனா­லும் சூரிய சஞ்­சா­ரம் எதி­ரி­கள் தொல்லை, தேக ஆரோக்­யக்­குறை என சிர­மம் தரும். இந்த சூழ்­நி­லை­கள் ஆடி மாதம் வரை நீடிக்­கும். அதன் பிறகு ஆவணி தொடங்கி ஐப்­பசி மாதம் வரை சுக்ர சஞ்­சா­ரம் சூரிய சஞ்­சா­ரம் சிரம பலன்­களை தரும். புத சஞ்­கா­ரம் எதிர்ப்­பு­களை வெல்­லு­தல், சுப­கா­ரிய அனு­கூ­லம் முயற்­சி­க­ளில் வெற்றி, திர­விய லாபம்,தாழில் முன்­னேற்­றம் என நற்­ப­லன்­க­ளைத் தரும். ராகு, கேது சிரம பலன்­க­ளும் இருக்­கும். மொத்­தத்­தில் ஆண்­டின் மத்­திய பகு­தி­யில் சிரம சூழ்­நி­லை­கள் அதி­க­மி­ருக்­கும். ஐப்­பசி மாதம் தொடங்கி தை மாதம் வரை குரு சஞ்­சா­ரம் சுபச் செல­வி­னங்­கள் நிலை மாற்­றம் , வெளி­யூர் பய­ணம், வீண் செல­வு­கள் என சிரம பலன்­களை தரு­வார். தொழில் ரீதி­யான சூழ்­நி­லை­கள் முன்­னேற்­ற­மாக இருக்­கும். கொடுக்­கல் வாங்­க­லில் கவ­னம் தேவை. இந்த சூழ்­நிலை தை மாதம் வரை தொட­ரும். அதன் பிறகு ஆண்டி இறு­தி­யில் குரு­வின் தனுசு ராசி பெயர்ச்சி உங்­க­ளுக்கு குரு சந்தி யோகத்தை கொடுக்­கும். 5,7,9 ஆகிய ஸ்தானங்­களை பார்ப்­ப­தால் சிர­மங்­கள் ஓர­ளவு குறை­யும். இந்த விளம்பி ஆண்­டில் பிர­தான கிர­கங்­கள் குரு மட்­டுமே பெயர்ச்சி ஆகி­றார். முற்­ப­கு­தி­யில் நன்மை செய்­வார். பிற்­ப­கு­தி­யில் சிர­மம் தரு­வார். தட்­சி­ணா­மூர்த்தி வழி­பாடு உங்­கள் சிர­மங்­க­ளுக்கு பரி­கா­ர­மா­கும். கேது இரண்­டா­மிட சஞ்­சா­ரம் அக்னி அபா­யம், எதிரி தொல்லை, முன்­கோ­பம் என சிரம பலன்­களே ஆண்டு முழு­வ­தும் இருப்­ப­தால் விநா­ய­கர் வழி­பாடு இந்த சிர­மங்­களை குறைத்து விடும். அதே போல் ராகு எட்­டாம் சஞ்­சா­ரம் உற­வி­னர் பகை, குடும்­பத்தை விட்டு வெளி­யூர் செல்­லு­தல், மனச்­சோர்வு என ஆண்டு முழு­வ­தும் சிர­மம் தரு­வார். இதற்கு துர்க்கை வழி­பாடு உங்­க­ளுக்கு சிரம பரி­கா­ர­மாக இருக்­கும். ராசி­யில் சனி சஞ்­சா­ரம் ஏழரை ஜென்ம சனி என்­ப­தால் அக்னி பயம், உற­வி­னர் பகை, தேக ஆரோக்­யக்­குறை என் சிர­மங்­கள் ஆண்டு முழு­வ­தும் இருக்­கும். வெங்­க­டேச பெரு­மாள் வழி­பாடு இந்த சிர­மங்­க­ளக்கு பரி­கா­ர­மா­கும்.

தொழி­ல­தி­பர்­கள், வியா­பா­ரி­க­ளுக்கு: தொழில் சார்ந்த விஷ­யங்­கள் சிர­மம் தரும். கூட்­டா­ளி­கள் மனக்­க­சப்பு வரும். எதிர்­பார்க்­கும் விஷ­யம் தள்­ளிப் போகும். பரா­ம­ரிப்பு செல­வு­கள் கூடும். வியா­பா­ ரத்­தில் கடின உழைப்பு, வீண் அலைச்­சல், பண நெருக்­கடி என சிர­மங்­கள் இருக்­கு­மு். சூழ்­நி­லையை அனு­ச­ரித்து முன்­னெச்­ச­ரிக்­கை­யு­டன் செயல்­ப­டு­வது உத்­த­மம்.

கல்­வி­யா­ளர்­கள், மாண­வர்­க­ளுக்கு : கல்­வி­யா­ளர்­க­ளுக்கு முன்­னேற்­றம் மிகுந்­தி­ருக்­கும். வீண் பிரச்­னை­க­ளில் தலை­யிட வேண்­டாம். கலை, இலக்­கி­யம் முன்­னேற்­ற­மாக இருக்­கும். விளை­யாட்டு போட்­டி­க­ளில் தன்­னம்­பிக்கை விடா­மு­யற்சி வெற்றி தரும்.

விவ­சா­யி­க­ளுக்கு: விவ­சாய பணி­க­ளில் கடின உழைப்பு இருக்­கும். பரா­ம­ரிப்பு செல­வு­கள் அதி­க­ரிக்­கும். கால்­நடை விருத்­தி­யா­கும். கொடுக்­கல் வாங்­க­லில் கவ­னம் தேவை. வெளி­யூர் பயண அலைச்­சல், தேக ஆரோக்­யக்­குறை சிர­மம் தரும். திட்­ட­மி­டல் அவ­சி­யம் தேவை. பூமி சார்ந்த விஷ­யம் லாபம் தரும்.

பெண்­க­ளுக்கு: குடும்­பப்­ப­ணி­க­ளில் சிர­மம் கூடும். அத்­தி­யா­வ­சி­யத் தேவை­கள் நெருக்­கடி தரும். அக்­கம் பக்­கத்­தில் கவ­னம் தேவை. குடும்ப பணி­க­ளில் முன்­னெச்­ச­ரிக்கை தேவை. திட்­ட­மிட்டு குடும்ப பணி­க­ளில் ஈடு­­ப­டு­வது சிர­மம் குறை­யும்.

மகரம்

இந்த புத்­தாண்டின் துவக்கமே சவா­லான பிரச்­னை­களை எதிர்­கொள்­ளும் வகை­யில் இருக்­கும். ஏழரை சனி­யில் துவக்­கம் ஒரு பக்­கம் என்­றால் ராசி­யில் கேது, 7ல் ராகு 10ல் குரு, 12ல் சனி – பிர­தான கிர­கங்­கள் அனைத்­துமே சாத­க­மற்ற சூழ்­நி­லை­யில் இருக்­கின்­றன. 4ம் இடம் சுக்­ரன் உங்­க­ளுக்கு உற­வு­கள் ஒன்று கூடும் சூழ்­நி­லையை கொடுப்­பார். விருந்­தி­னர் வருகை இல்­லம் சிறக்­கும். உங்­கள் மதிப்பு, மரி­யாதை உய­ரும். நாலில் சூரிய சஞ்­சா­ரம் பெண்­க­ளின் பகை, உடல் நல­மின்மை என சிரம பலன்­களை தரு­வார். 3ம் இடம் புத சஞ்­சா­ரம் அரசு வழி பயம், விரோதி பயம், குழப்­பம் என சிரம பலன்­களை தரு­வார். செவ்­வாய் சஞ்­சா­ரம் தேக ஆரோக்­யக்­குறை என சிரம பலன்­களை தரு­வார். இந்த நிலை ஆடி மாதம் வரை நீடிக்­கும். அதன் பிறகு ஆவணி மாதம் தொடங்கி ஐப்­பசி மாதம் வரை.ை சூழ்­நி­லை­க­ளில் சிறிது மாற்­றம் ஏற்­ப­டும். மற்ற மாதப்­பெ­யர்ச்சி ஆகும் கிர­கங்­க­ளில் சஞ்­சா­ரம் ஐப்­பசி மாதம் வரை தொழில் ரீதி­யான முன்­னேற்­றங்­களை கொடுக்­கும். குடும்ப சூழ்­நி­லை­யில் ஏற்­றம் கொடுக்­கும். ஐப்­பசி தொடங்கி தை மாதம் வரை குருப் பெயர்ச்சி 11ம் இடம் வரு­வ­தால் லாப­க­ர­மான சூழ்­நிலை வரும். எண்­ணிய எண்­ணம் ஈடே­றும். தன­லா­பம் பெரு­கும். வீடு, மனை பூமி போன்ற விஷ­யங்­கள் லாப­க­ர­மாக இருக்­கும். ஓர­ளவு இந்த மத்­திய பகுதி உங்­க­ளுக்கு சிர­மங்­கள் குறை­வாக இருக்­கும். ஆண்­டின் இறு­தி­யில் குரு­வின் தனுசு ராசி பெயர்ச்சி உங்­க­ளுக்கு சுபச் செலவு, வீன் விர­யம், பயண அலைச்­சல் என சிரம பலன்­கள் இருக்­கும். குருவை பொறுத்­த­வரை மத்­திய பகுதி ஓர­ளவு நற்­ப­லன்­கள் இருக்­கும். மற்­ற­படி சிரம பலன்­தான் ஆண்டு முழு­வ­தும் அதே போல் சனி சஞ்­சா­ரம் 12ம் இடம் இருப்­பது தூக்­க­மின்மை, மனச்­சோர்வு உடல் சோர்வு என ஆண்டு முழு­வ­தும் சிர­மம் ராகு 7ம் இடம் சஞ்­சா­ரம் உற­வி­னர் பகை, கூட்­டாளி மனக்­க­சப்பு, காதல் விவ­கார சிக்­கல், குடும்ப கவலை என ஆண்டு முழு­வ­தும் சிரம பலன் தரு­வார். எனவே துர்க்கை­ யம்­மன் வழி­பாடு – சிரம பரி­கா­ர­மாக இருக்­கும். அதே போல் கேது ராசி­யில் இருப்­பது எதிரி தொல்லை, நோய் காரி­யத்­தடை என சிரம பலன் ஆண்டு முழு­வ­தும் இருக்­கும். விநா­ய­கர் வழி­பாடு இந்த சிர­மங்க­ ளுக்கு பரி­கா­ர­மா­கும். மேலும் தட்­சி­ணா­மூர்த்தி, பெரு­மாள் வழி­பாடு உங்­கள் சிர­மங்­க­ளுக்கு பரி­கா­ர­மா­கும். இருந்­தா­லும் சமா­ளித்து விடு­வீர்­கள்.

தொழி­ல­தி­பர்­கள், வியா­பா­ரி­க­ளுக்கு: தொழில் ரீதி­யான சூழ்­நி­லை­கள் சுமு­க­மா­கவே இருக்­கும். நிதி நிலமை முன்­னேற்­ற­மா­கும். பரா­ம­ரிப்பு செல­வி­னங்­கள் இருக்­கும். வியா­பா­ரத்­தில் நல்ல முன்­னேற்­றம் நில­வும். போட்­டி­கள் மிகுந்­தி­ருக்­கும். கூட்­டா­ளி­கள் இணக்­க­மின்மை என சிர­மம் இருக்­கும்.

கல்­வி­யா­ளர்­கள், மாண­வர்­க­ளுக்கு : கல்­வி­யில் கவ­னச் சித­றல் தடை­யா­கும். விடா­ய­மு­யற்சி மேன்மை தரும். கலை, இலக்­கி­யம் முன்­னேற்­ற­மாக இருக்­கும். விளை­யாட்டு போட்­டி­க­ளில் தீவிர கவ­னம் தேவைப்­ப­டும். பிற்­ப­கு­தி­யில் நல்ல முன்­னேற்­றம் வரும்.

விவ­சா­யி­க­ளுக்கு: விவ­சா­யப் பணி­க­ளில் முன்­னேற்­றம் மிகுந்­தி­ருக்­கும். நிதி­நி­லைமை உய­ரும். கால்­நடை விருத்தி லாபம் தரும். பரா­ம­ரிப்பு செல­வி­னங்­கள் சிர­மப்­ப­டுத்­தும். வெளி­யூர் பயண அலைச்­சல், ஆரோக்­யம் குறை சிர­மப்­ப­டுத்­தும்.

பெண்­க­ளுக்கு: குடும்ப பணி­க­ளில் சிறப்பு கூடும். குடும்­பத்­தில் ஒற்­று­ஐம நில­வும். குழந்­தை­கள் முன்­னேற்­றம் சுக­போ­கம் சுப­கா­ரிய இடு­பாடு என நற்­ப­லன்­கள் இருக்­கும். குடும்ப தேவை­கள் பூர்த்­தி­யா­கும். வெளி­யூர் பய­ணம் மகிழ்ச்சி தரும்.

கும்பம்

இந்த புத்­தாண்டு உங்­க­ளுக்கு புது பொலி­வு­டன் பிறக்­கி­றது. ராசிக்கு மூன்­றில் சூரி­யன் உச்­சம், 2ல் புதன், 6ல் ராகு, 9ல் குரு லாபஸ்­தா­னத்­தில் சனி, செவ்­வாய் சஞ்­சா­ரம் சிறப்­பாக யோக பலன்­களை வழங்­கும் சூழ்­நிலை. கவு­ர­வப் பதவி, தன­லா­பம்,புகை வெல்­லு­தல், தேக ஆரோக்­யம், தன­லா­பம், வாக்­கி­னால் வளம், மனைவி, மக்­கள், சுற்­றம் என உற­வு­கள் மேன்மை, சந்­தோ­ஷம், எதி­லும் வெற்றி, வெளி­யூர் – வெளி­நாடு பய­ணம் – சுக­போ­கம், பெண்­க­ளால் சந்­தோ­சம், சுக­ச­வுக்­யம், பொரு­ள­தார மேன்மை, பண­வ­ரவு தாரா­ள­மாக இருக்­கும். இந்த சூழ்­நிலை ஆடி மாதம ்வரை நீடிக்­கும். அதன் பிறகு ஆவணி தொடங்கி குரு 10ம் இடத்­தில் வரும் பொழுது தொழில் ரீதி­யான சிறு சிறு சிர­மங்­கள் இருக்­கும். போக்­கு­வ­ரத்­தில் முன்­னெச்­ச­ரிக்கை தேவை. சேமிப்பு கரை­தல் – வீண் மனக்­க­வலை என சிர­மங்­கள் இருக்­கும். ஐப்­பசி மாதம் தொடங்கி மார்­கழி மாதம் வரை கேது தவிர மற்ற பிர­தான கிர­கங்­க­ளின் சூழ்­நிலை சாத­க­மா­கவே இருக்­கும். கேது சஞ்­சா­ரம் பண விர­யம், கண் சம்­பந்­தப்­பட்ட சிறு சிர­மங்­கள், பித்த உபா­தை­கள் என சிர­மங்­கள் இருக்­கும். ஆண்­டின் இறு­திப் பகு­தி­யில் குரு­வின் தனுசு ராசி பெயர்ச்சி லாபஸ்­தா­னம் என்­ப­தால் எண்­ணம் ஈடே­றும். தன­லா­பம், வீடு, மனை போன்ற விஷ­யங்­கள் அனு­கூ­லம், பூமி லாபம் என நற்­ப­லன்­கள் இருக்­கும். பிர­தான கிர­கங்­க­ளில் கேதுவை தவிர மற்ற அனைத்து பிர­தான கிர­கங்­க­ளும் உங்­க­ளுக்கு சாத­க­மான நிலை­யில் உள்­ளன. ஆண்டு முழு­வ­தும் நற்­ப­லன்­கள் மிகுந்­தி­ருக்­கும். லாபம் பெரு­கும். எனவே விநா­ய­கர் வழி­பாடு, தட்­சி­ணா­மூர்த்தி வழி­பாடு, உங்­கள் சிர­மங்­க­ளுக்கு பரி­கா­ர­மாக இருக்­கும். விளம்பி ஆண்டு உங்­க­ளுக்கு லாபம் பெரு­கும் ஆண்­டாக இருக்­கும். சூழ்­நிலை அனு­ச­ரித்து செயல்­ப­டு­வது உத்­த­மம்.

தொழி­ல­தி­பர்­கள், வியா­பா­ரி­க­ளுக்கு: தொழில் ரீதி­யான சூழ்­நிலை கடின உழைப்பு இருக்­கும். நிதி நிலைமை சீரா­கும். பரா­ம­ரிப்பு செல­வு­கள் கூடும். திட்­ட­மி­டல் அவ­சி­யம் தேவை. வியா­பா­ரத்­தில் கடின உழைப்பு, அலைச்­சல் இருக்­கும். போட்­டி­கள் சிர­மப்­ப­டுத்­தும். உங்­கள் விடா­மு­யற்சி, தன்­னம்­பிக்கை முன்­னே ற்­றம் தரும். லாப­க­ர­மாக இருக்­கும்.

கல்­வி­யா­ளர்­கள், மாண­வர்­க­ளுக்கு : கல்­வி­யில் நல்ல முன்­னேற்­றம் வரும். செல­வு­கள் அதி­க­ரிக்­கும். கலை, இலக்­கி­யம் முன்­னேற்­ற­மாக இருக்­கும். விளை­யாட்டு போட்­டி­க­ளில் விடா­ய­மு­யற்சி முழு ஈடு­பாடு வெற்றி தரும்.

விவ­சா­யி­க­ளுக்கு: விவ­சா­யப் பணி­க­ளில் கடின உழைப்பு தேவைப்­ப­டும். காரி­யத்­தடை பரா­ம­ரிப்பு செல­வு­கள், பணத் தேவை என சிர­மங்­கள் இருக்­கும். கால்­நடை விருத்தி லாபம் தரும். பயண அலைச்­சல் சிர­மப்­ப­டுத்­தும். கொடுக்­கல் வாங்­க­லில் கவ­னம் தேவை.

பெண்­க­ளுக்கு: குடும்ப பணி­க­ளில் சிர­மம் அதி­க­ரிக்­கும். பணத் தேவை நெருக்­கடி தரும். சேமிப்பு குறை­யும். தேக ஆரோக்­யத்­தில் கவ­னம் தேவை. அக்­கம் பக்­கத்­தில் உற­வி­னர்­க­ளி­டம் கவ­னம் தேவை. ஆன்­மிக ஈடு­பாடு நன்மை தரும். சுப­கா­ரிய அனு­கூ­லம் இருக்­கும்.

மீனம்

இந்த புத்­தாண்டு உங்­க­ளுக்கு உற்­சா­க­மா­கத் துவங்­கு­கி­றது. 2ல் சுக்­ரன் பண­வ­ர­வு­கள் தாரா­ள­மாக இருக்­கும். அரசு மரி­யாதை, சுக­செ­ளக்­யம் (கண்­ணில் உபாதை), தன லாபம் என நற்­ப­லன்­கள் மிகுந்­தி­ருக்­கும். பத்­தில் செவ்­வாய் சஞ்­சா­ரம் பல வழி­க­ளி­லும் தொழில் சார்ந்த வரு­மா­னம் கூடும். தன­லா­பம் சுக­செ­ளக்­யம் என நற்­ப­லன்­கள் இருக்­கும். புத சஞ்­சா­ரம் உற­வி­னர் பகை, வேறு ஊர் பய­ணம், பண விர­யம் என சிர­மங்­கள் இருந்­தா­லும் பண­வ­ர­வு­கள், வாக்­கி­னால் வளம், நல்­ல­வாக்கு கிடைத்­தல் என நற்­ப­லன்­க­ளும் இருக்­கும். கேது­வின் லாபஸ்­தான சஞ்­சா­ரம் தனம், பொரு­ளா­தார மேன்மை, சுக­செ­ளக்­யம் என பலன்­கள் இருக்­கும். இந்த சூழ்­நிலை ஆடி மாதம் வரை நீடிக்­கும். ஆவணி தொடங்கி ஐப்­பசி மாதம் வரை குரு சஞ்­சா­ரம் பண நெருக்­கடி, கடன் வாங்­கு­தல், ஜாமீன் கொடுப்­ப­தில் சிக்­கல், சுக­மின்மை, சேமிப்பு கரை­தல் கொடுக்­கல் வாங்­க­லில் கவ­னம் தேவை. சூழ்­நி­லை­கள் சிர­ம­மாக இருக்­கும். ஐப்­பசி தொடங்கி மார்­கழி மாதம் முடிய குரு­வின் ஒன்­ப­தா­மிட சஞ்­சா­ரம் குடும்­பத்­தில் மனைவி, மக்­கள் உற­வி­னர்­க­ளு­டன் சந்­தோ­ஷ­மான சூழ்­நிலை இருத்­தல் – எடுக்­கு­மு் அனைத்து முயற்­சி­க­ளி­லும் வெற்றி, வெளி­யூர் பய­ணம் – உல்­லா­சப் பய­ணம் என மகிழ்ச்­சி­க­ர­மான சூழ்­நிலை இருக்­கும். ஆண்­டின் இறு­தி­யில் தை மாதத்­திற்கு பிறகு குரு தனுசு ராசி பெயர்ச்சி உங்­க­ளுக்கு பத்­தா­மி­டம் வரு­வ­தால் தொழில் சார்ந்த சிர­மங்­கள் வரும். தட்­சி­ணா­மூர்த்தி வழி­பாடு உங்­கள் சிர­மங்­க­ளுக்கு பரி­கா­ர­மா­கும். அதே போல் சனி ஆண்டு முழு­வ­தும் பத்­தா­மிட சஞ்­சார் தொழில் ரீதி­யான நெருக்­கடி தரும். எனவே வெங்­க­டே­சப் பெரு­மாள் வழி­பாடு சனி சிர­மங்­க­ளுக்கு பரி­கா­ர­மா­கும். அடுத்து ராகு­லின் ஐந்­தாமி சஞ்­சா­ரம் ஆண்டு முழு­வ­தும் குடும்ப கவலை குடும்­பத்தை பிரிந்து வெளி­யூர் செல்­லு­தல், மனச்­சோர்வு, உடற்­சோர்வு பூர்­வீக சொத்து விவ­கார பிரச்­னை­கள் என சிர­மங்­கள் இருக்­கும். இதற்கு துர்க்­கை­யம்­மன் வழி­பாடு சிரம பரி­கா­ர­மாக இருக்­கும். கேது மட்­டுமே லாபஸ்­தான சஞ்­சா­ரம் என்­ப­தால் ஆண்டு முழு­வ­தும் கேது நற்­ப­லன்­களை வழங்­கு­வார். எனவே சூழ்­நிலை அனு­ச­ரித்து திட்­ட­ மிட்டு செயல்­ப­டு­வது உத்­த­மம்.

தொழி­ல­தி­பர்­கள், வியா­பா­ரி­க­ளுக்கு: தொழில் ரீதி­யான சூழ்­நிலை முன்னேற்­ற ­மாக இருக்­கும். நிதி நிலைமை உற்­பத்தி திறன் கூடும். அனு­கூ­ல­மான சூழ்­நிலை நில­வும் வியா­பா­ரத்­தில் நல்ல முன் னேற்­றம் வரும். வியா­பார விருத்­தி­யா­கும். கொடுக்­கல் வாங்­க­லில் கவ­னம் தேவை. கடின உழைப்பு இருக்­கும்.

கல்­வி­யா­ளர்­கள், மாண­வர்­க­ளுக்கு : கல்­வி­யில் நல்ல முன்­ப­னேற்­றம் வரும். புத்­தி­சா­லித்­த­னம் கூடும். கலை, இலக்­கி­யம் மேன்மை தரும். விளை­யாட்டு போட்டி வெற்றி தரும். விடா முயற்­சி­யும், தன்­னம்­பிக்­கை­யும் அனு­கூல பலன் தரும்.

விவ­சா­யி­க­ளுக்கு: விவ­சா­யப் பணி முன்­னேற்­றம் பெறும். நிதி நிலைமை உய­ரும். புதிய பொருள் சேர்க்கை உண்­டா­கும். கால்­நடை விருத்தி லாபம் தரும். திட்­ட­மிட்டு செயல்­ப­டு­வது உத்­த­மம்.

பெண்­க­ளுக்கு: குடும்ப பணி­யில் சிறப்பு கூடும். புதிய பொன், பொருள் சேர்க்கை மகிழ்ச்சி தரும். சுப­கா­ரிய ஈடு­பாடு நன்மை தரும். சேமிப்பு உய­ரும். ஆன்­மிக ஈடு­பாடு நற்­ப­லன் தரும். கொடுக்­கல் வாங்­க­லில் கவ­னம் தேவை. திட்­ட­மிட்டு செயல்­ப­டு­வது அவ­சி­யம்.