சனிப் பெயர்ச்சி பலன்கள் – 15.12.2017 முதல் 15.12.2020 வரை ஜோதிடர் – மு.திருஞானம்


இதுவரை விருச்சிக ராசியில் சஞ்சரித்து வந்த சனி 2017 டிசம்பர் 16ம் தேதி முதல் தனுசு ராசிக்குள் பெயர்ச்சியாகி அங்கு மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் ஆகிய நட்சத்திர சாரம் பெற்று சஞ்சரிக்க உள்ளார்.

15.12.2017 முதல் 08.07.2019 வரை மூலம் நட்சத்திரம் கேது சாரம் பெற்று சஞ்சரிக்கும் அதன் பிறகு 08.07.2019 முதல் 12.02.2020 வரை பூராட நட்சத்திரம் சுக்ரன் சாரம் பெற்று சஞ்சரிக்கும். அதன் பிறகு 12.02.2020 முதல் 15.12.2020 வரை உத்ராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் சூரியச் சாரம் பெற்று சஞ்சரிக்கிறார் சனி பகவான். இந்த காலகட்டத்தில் 12 ராசிகளுக்கும் சனிஸ்வரரின் பலன்கள் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொண்டு சூழ்நிலையை அனுசரித்து செயல்படுவது உத்தமம். கடகம், துலாம், கும்பம் ஆகிய மூன்று ராசிக்காரர்களுக்கு உத்தமமாக உள்ளது. இந்த சனிப்பெயர்ச்சி விருச்சிக ராசிக்கு பாதசனி கடைசி இரண்டரை வருடம் துலாம் ராசிக்கு ஏழரை சனி முடிவு பெறுகிறது. தனுசு ராசிக்கு ஜென்ம சனி – மகர ராசிக்கு ஏழரை சனி ஆரம்பம்.

எனவே விருச்சிகம், தனுசு, மகர ராசிக்காரர்கள் சனிக்கிழமை – சனீஸ்வரருக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவது உத்தமம். தினமும் காக்கைக்கு அன்னம் வைத்து உண்ணுவது உத்தமம். இனி 12 ராசிக்களுக்குரிய பலன்களை பார்ப்போம்.

மேஷம் – தொழில் மேன்மை

இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு சிரமங்களை குறைத்து தொழில் ரீதியான முன்னேற்றத்தை கொடுக்கும். இதுவரை 8ம் இடத்தில் இருந்து சிரமங்களை கொடுத்த சனி இனி 9ம் இடம் சென்று வேறுவிதமான சிரமங்களைக் கொடுப்பார். ஆனால் குறைவாகவே இருக்கும்.

பொதுப்பலன்கள் : சனிசஞ்சாரம் உங்களுக்கு காரியத்தடை, எதிரித்தொல்லை என சிரமங்கள் கொடுத்தாலும் மூலம் நட்சத்திரம் சாரம் பெற்று சஞ்சரிக்கும் பொழுது தொழில் ரீதியான முன்னேற்றங்கள் சிறப்பாக இருக்கும். பலவழிகளில் வருமானம் கூடும். 8.7.2019 வரை கேது சாரம் பலன்கள் சிறப்பாக இருக்கும். அதன் பிறகு சுக்ரன் சார பலன்கள் குடும்ப மகிழ்ச்சி, தனவிருத்தி, உறவினர்களுடன் ஒன்றுபடும் மகிழ்ச்சி, வசதி வாய்ப்புகள் கூடுதல், பணவரவு கூடுதல் என நற்பலன்கள் 12.02.2020 வரை தொடரும். அதன் பிறகு சூரியச்சாரம் பெறும். சனி எதிர்பாராத சிரமங்களை தருவார். இந்த காலகட்டத்தில் மனச்சோர்வு, உடற்சோர்வு என சிரமங்கள் இருக்கும். இந்த நிலை 15.12.2020 வரை நீடிக்கும்.

சனியின் பார்வை பலன்கள் கும்பம், மிதுனம், கன்னி ஆகிய ராசிகளை சனி பார்ப்பதால் லாப வரவுகள், பதவி உயர்வு, சுகவிருத்தி, மகிழ்ச்சி, கடன் தீருதல், வழக்கில் வெற்றி, எதிர்ப்பு விலகல், தனலாபம், சகோதர உதவி, மனோதிடம், கடன் சுமை குறைதல் என நற்பலன்கள் மிகுந்திருக்கும். மேஷ ராசிக்கு சனி பார்வை பலன் நன்மை தரும்.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு: தொழில் ரீதி­யான சூழ்­நி­லை­கள் முன்னேற்றமாக இருக்கும். உற்பத்தி திறன் அதிகரிக்கும். லாபகரமான சூழ்நிலை நிலவும். வியாபாரத்தில் முன்னேற்றம் லாபகரமாக இருக்கும். வியாபாரத்தில் உண்டாகும் புதிய முயற்சிகள் அனுகூலம் தரும். திட்டமிட்டு செயல்படுவது உத்தமம்.

கல்வியாளர்கள், மாணவர்களுக்கு : கல்வியில் முன்னேற்றம் மிகுந்திருக்கும். கலை இலக்கியம் மேன்மை தரும். விளையாட்டு போட்டிகளில் உற்சாகம் மிகுந்திருக்கும். புதிய முயற்சிகள் அனுகூலம் பெறும். திட்டமிட்டு செயல்படுவது உத்தமம்.

விவசாயிகளுக்கு: விவசாயம் சார்ந்த பணிகளில் கடின உழைப்பு இருக்கும். தனதான்ய விருத்தி, கால்நடை விருத்தி என முன்னேற்றம் பெரும். நிதி நிலைமை சீராகும். பிரயாண அலைச்சல் மிகுந்திருந்தாலும் அனுகூலம் தரும்.

பெண்களுக்கு : குடும்ப பணிகளில் சிரமம் கூடும். அத்தியாவசியத் தேவைகள் பூர்த்தியாகும். புதியபொருள் சேர்க்கை மகிழ்ச்சி தரும். அக்கம் பக்கத்தில் கவனம் தேவை. குடும்பப் பணிகளில் முன்னெச்சரிக்கை அவசியம் தேவைப்படும். சுபகாரிய ஈடுபாடு முன்னேற்றமாக இருக்கும். ஆன்மிக சிந்தனை சிரமங்களுக்கு பரிகாரமாகும்.

சனியின் சஞ்சார காலகட்டம் முழுவதும் உங்களுக்கு விநாயகர், மகாலெட்சுமி, சிவபெருமான் போன்ற தெய்வ வழிபாடு சிரமங்களுக்கு பரிகாரமாகும். நன்மை பயக்கும்.

ரிஷபம் – தன்னம்பிக்கை முன்னேற்றம் தரும்

இந்த சனிப்பெயர்ச்சி உங்களக்கு 8ம் இடம் சஞ்சாரம் சிரமங்களை கொடுத்தாலும் இறைவன் திருவருளால் உங்கள் சிரமங்கள் குறையும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். முன்னெச்சரிக்கை அவசியம் தேவை.

பொதுப்பலன்கள் : சனியின் 8ம் இடம் சஞ்சாரம் உங்களுக்கு முயற்சியில் காரியத்தடை, சுற்றத்தார் பிரிவு, மனவருத்தம், குடும்பத்தை விட்டு வெளியூர் செல்ல வேண்டிய சூழ்நிலை – வீண் அலைச்சல், மனச்சோர்வு, நல்லது செய்ய போய் கெட்ட பெயர் என சிரமங்கள் பொதுப் பலனாக இருந்தாலும் சனியின் சார பலன்களாக முதலில் கேது சாரம் பெற்று உங்களுக்கு தேக ஆரோக்யக்குறை, முயற்சியில் தடை கைப்பொருளை தொலைத்தல் என சிரம பலன்களை 8.7.2019 வரை வழங்குவார். அதன் பிறகு சுக்கிரசாரம் பெற்று உங்களக்கு பொருளாதார முன்னேற்றம், தனலாபம், உறவுகள் மேம்படுதல் என நற்பலன்களை கொடுத்தாலும் கொடுக்கல் வாங்கலில் சிரமத்தை தருவார் கவனம் தேவை. இந்த சாரபலன்கள் 12.02.2020 வரை நீடிக்கும். அதன் பிறகு சனி சூரியச்சாரம் பெற்று சஞ்சரிக்கும் காலகட்டத்தில் தேகஆரோக்யத்தில் கவனம் தேவை. பெண்களிடத்தில் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது உத்தமம். வீண் பிரச்னைகள் மனக்கவலை தரும். அந்த சூழ்நிலை 15.12.2020 வரை நீடிக்கும்.

சனியின் பார்வை பலன்கள் உங்களுக்கு சாதகமாக இல்லாவிட்டாலும் சிரமங்கள் குறைவாகவே இருக்கும். குடும்பத்தில் பிரச்னை, சேமிப்பு குறைவு குழப்பம், செயல் தடுமாற்றம், இடப்பெயர்ச்சி கடின உழைப்பு, உழைப்புக்கு ஏற்ற ஊதியமின்மை, உத்தியோகப் பயம், என சூழ்நிலைகள் உங்களை சிரமப்படுத்தும். எனவே தன்னம்பிக்கையுடன் திட்டமிட்டு செயல்படுங்கள் சிரமங்கள் குறையும்.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு : தொழில் ரீதியான சூழ்நிலைகள் கடின உழைப்பு இருக்கும். எதிர்பார்க்கும் விஷயங்கள் தள்ளிப்போகும். எதிர்பாராத செலவினங்கள் வரும். அதிக உழைப்பு, குறைந்த லாபம் என சிரமங்கள் இருக்கும். வியாபாரத்தில் போட்டிகள் கடினமாக இருக்கும். கடின உழைப்பு அலைச்சல் மனச்சோர்வு தரும். முன்னேற்றத்தடை வரும். எனவே தன்னம்பிக்கையுடன் திட்டமிட்டு செயல்படுவது உத்தமம்.

கல்வியாளர்கள், மாணவர்களுக்கு : கல்வியில் முழு ஈடுபாடு தேவை. கவனச் சிதறல் சிரமம் தரும். வீண் பிரச்னைகளில் தலையிட வேண்டாம். கலை, இலக்கியம் முன்னேற்றமாக இருக்கும். விளையாட்டு போட்டிகளில் விடாமுயற்சி, கடின உழைப்பு தேவைப்படும்.

விவசாயிகளுக்கு: விவசாயப் பணிகளில் கடின உழைப்பு, வீண் அலைச்சல், செலவினங்கள் என சிரமங்கள் இருக்கும். கால்நடை விருத்தி லாபம் தரும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

பெண்களுக்கு : குடும்ப பணிக­ளில் அதிக உழைப்பு இருக்கும். புதிய பொறப்புகள் சிரமம் தரும். குடும்பத் தேவைகள் அதிகரிக்கும். ஆன்மிக ஈடுபாடு ஆறுதல் தரும். சுபகாரிய முயற்சி முன்னேற்றமாகும். சனியின் சஞ்சார காலகட்டம் முழுவதும் உங்களுக்கு விநாயகர், மகாலெட்சுமி, சிவபெருமான் வழிபாடு சிரமங்களுக்கு பரிகாரமாகும்.

மிதுனம் – சுபகாரிய அனுகூலம்

இதுவரை 6ம் இடத்தில் இருந்த சனி நற்பலன்களை வழங்கினார். இந்த சனிப்பெயர்ச்சி 7ம் இடத்திற்கு செல்வதால் குடும்பத்தில் சிறு சிறு பிரச்னைகள் வரும். பொறுமையுடன் சூழ்நிலையை அனுசரித்தால் சிரமங்கள் குறையும்.

பொதுப்பலன்கள் : குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் வரும். காதல் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் சிரமம் தரும். சனியின் சாரபலன் மூல நட்சத்திரம் சாரம் பெற்று – கேதுவின் சார பலன்களாக தேக ஆேராக்யக்குறை, குடும்பத்தில் சிறு சிறு பிரச்னைகள் தொல்லை, வீண் சச்சரவு என சூழ்நிலை 8.7.2019 வரை இந்த சூழ்நிலை நீடிக்கும். சூழ்நிலையை அனுசரித்து செயல்படுவது உத்தமம். அதன் பிறகு சுக்ரன் சாரம் பெற்று தனலாபம், பணவரவு, திருமணம் போன்ற சுபகாரிய அனுகூலம், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம், செல்வாக்கு பெருகுதல் என நற்பலன்களை வழங்குவார். இந்த சூழ்நிலை 12.02.2020 வரை நீடிக்கும். அதன்பிறகு சனி சஞ்சாரம் பெற்று உத்ராட நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் பொழுது தொழில் ரீதியான முன்னேற்றங்களை வழங்குவார். கவுரவப்பதவி, தனலாபம், எதிரிகளை வெல்லுதல் முயற்சியில் முன்னேற்றம் என நற்பலன்கள் 15.12.2020 வரை நீடிக்கும்.

சனியின் பார்வை பலன்கள் – கும்பம், மிதுனம், கன்னி ஆகிய ராசிகளை சனி பார்ப்பதால் தந்தைக்கு தேக ஆரோக்யக்குறை முதலீட்டுக்கு தட்டுபாடு, சுகமின்மை, வீண் செலவினங்கள் – தாய்க்கு தேக ஆரோக்யக்குறை – கல்வியில் பின்னடைவு – வாகனங்களில் செல்லும் போது கவனமாக செல்ல வேண்டிய கட்டாயம், முன்னெச்சரிக்கை அவசியம் தேவை. பார்வை பலன் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் – முன்னெச்சரிக்கையுடன் திட்டமிட்டு செயல்படுங்கள் சிரமம் குறையும்.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு : ஆரம்பத்தில் தொழில் ரீதியான சூழ்நிலை சுமாராகவே இருக்கும். சனி சுக்ரசாரம் பெறும் பொழுது தொழிலில் நல்ல முன்னேற்றம் வரும். லாபகரமான சூழ்நிலை வரும். பிற்பகுதியில் இந்த நிலை நீடிக்கும். வியாபாரத்திலும் முற்பகுதியில் கடின உழைப்பு, அலைச்சல், போட்டி என சிரமம் இருந்தாலும் பிற்பகுதியில் லாபகரமான சூழ்நிலை, வியாபாரவிருத்தி என நற்பலன்கள் இருக்கும்.

கல்வியாளர்கள், மாணவர்களுக்கு : கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கலை, இலக்கியம் மேன்மை தரும். விளையாட்டு போட்டிகளில் முன்னேற்றமாக இருக்கும். முழு ஈடுபாடு நற்பலன்கள் தரும்.

விவசாயிகளுக்கு: விவசாயப் பணிகளில் கடின உழைப்பு இருக்கும். எதிர்பாராத செலவினங்கள் சிரமம் தரும். கால்நடை விருத்தியாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பிற்பகுதியில் சூழ்நிலைகள் மாற்றம் பெறும். நிதி நிலைமை சீராகும். தனதான்ய விருத்தி உண்டாகும். திட்டமிட்டு செயல்பட்டால் சிரமம் குறையும்.

பெண்களுக்கு : குடும்ப பணி­க­ளில் சிர­மம் அதிகரிக்கும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்னைகள் சிரமம் தரும். சுபகாரிய முயற்சி அனுகூலமாகும். பிற்பகுதியில் குடும்ப சூழ்நிலை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அக்கம்பக்கத்தில் கவனம் தேவை. குடும்பப் பணிகளில் முன்னெச்சரிக்கை தேவை. சூழ்நிலையை அனுசரித்து செயல்படுவது உத்தமம்.

விநாயகர் வழிபாடு உங்கள் சிரமங்களுக்கு பரிகாரமாகும். மகாலெட்சுமி சிவபெருமான் வழிபாடு நன்மை தரும்.

கடகம் – வழக்கில் வெற்றி – எதிர்ப்பு விலகும்

இதுவரை சிரம பலன்களை தந்த சனி இனி 6–ம் இடம் பெயர்ச்சியாகி உங்களுக்கு நற்பலன்களை வழங்கவுள்ளார். பொதுப்பலன்கள் நன்றாக உள்ளது. சார பலன்கள் மத்திமமாக இருக்கும். பார்வை பலன்கள் சிரம கதியில் இருக்கும். சூழ்நிலையை அனுசரித்து திட்டமிட்டு புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். பொதுப்பலன்கள் : சனியின் தனுசு ராசி சஞ்சாரம் உங்களுக்கு விரோதியை வெல்லுதல், எதிர்ப்பு விலகல், நீண்டகால கடன் தீருதல் – தேக ஆரோக்ய முன்னேற்றம், வழக்குகளில் வெற்றி என நற்பலன்களை வழங்குவார்.

சார பலன்களாக சனி தனுசு ராசி சென்று கேது சாரம் பெற்று மூலம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும் பொழுது வாழ்க்கை துணையுடன் பிணக்கு, வீண் சச்சரவு, எதிரித்தொல்லை – கூட்டாளிகளின் இணக்கிமின்மை என சிரம பலன்கள் 15.12.2017 முதல் 8.07.2019 வரை இருக்கும். இதன் பிறகு சனி, சுக்ரன் சாரம் பெற்று பூராட நட்சத்திரம் சஞ்சாரம் செய்யும்பொழுது உறவுகள் மேன்மை பந்து ஜன சேர்க்கை தனலாபம், பணவரவு என நற்பலன் வழங்குவார் – உறவினர் மத்தியில் உங்கள் மதிப்பு மரியாதை உயரும். விருந்தினர் வருகை என மகிழச்சியான சூழ்நிலை இருக்கும். இந்த சூழ்நிலை 12.02.2020ம் ஆண்டு வரை நீடிக்கும். அதன் பிறகு சனி சூரியச்சாரம் பெற்று உத்திராடம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் பொழுது அப்பொழுது கண் சம்பந்தப்பட்ட சிறுசிறு பிரச்னைகள் தொல்லை தரும். எதிர்பாராத செலவினங்கள் சிரமம் தரும். இந்த நிலை 15.12.2020ம் ஆண்டு வரை நீடிக்கும்.

சனியின் பார்வை கும்ப ராசிக்கு, மிதுன ராசிக்கு, கன்னி ராசிக்கும் இருக்கும். அந்த வகையில் புத்திரர்கள் பற்றிய கவலை, காரியத்தடை, மனக்குழப்பம் – அதிக உழைப்பு, பிரயாணம், வீண் விரயம், நித்திரையின்மை என சிரமங்கள் பார்வை பலனாக இருந்தாலும், மனோதிடம், தன்னம்பிக்கை, சகோதர உதவி, கடன் தீருதல் என நற்பலன்களும் இருக்கும்.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு: தொழில் ரீதியான சூழ்நிலைகள் குருவின் பார்வை 10ம் இடத்தில் இருப்பதால் பணிச்சுமை அதிகரிக்கும். உற்பத்தி திறன் அதிகரிக்கும். லாபகரமான சூழ்நிலை இருக்கும். வியாபாரத்தில் கடின உழைப்பு அலைச்சல் போட்டி மிகுந்திருக்கும். ஆனால் வியாபாரம் சிறப்பாக முன்னேற்றம் பெறும். லாபகரமான சூழ்நிலை இருக்கும்.

கல்வியாளர்கள், மாணவர்களுக்கு : கல்வியில் காரியத்தடை வீண் அலைச்சல் என கவனச்சிதறல் ஏற்படும். விடாமயற்சியும் தன்னம்பிக்கையும் முன்னேற்றம் தரும். கலை, இலக்கியம் சுமாராக இருக்கும். விளையாட்டு போட்டிகளில் முழு ஈடுபாடு தேவைப்படும். மத்தியில் ஓரளவு முன்னேற்றமான சூழ்நிலை வரும்.

விவசாயிகளுக்கு: விவசாயப் பணிகளில் நல்ல முன்னேற்றம் நிலவும். தனதான்ய விருத்தி – கால்நடை விருத்தி என முன்னேற்றமான சூழ்நிலை இருக்கும். ஆனாலும் பராமரிப்பு சிரமங்கள், பயண அலைச்சல் வீண் செலவினங்கள் என சிரமமான சூழ்நிலைகளும் இருக்கும்.

பெண்களுக்கு : குடும்ப பணிகளில் சிறப்பு கூடும். அத்தியாவசிய தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரிய ஈடுபாடு விருந்தினர் வருகை என குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலைகள் அடிக்கடி இருக்கும். குடும்ப பணிகளில் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது உத்தமம்.

விநாயகர், மகாலெட்சுமி, சிவபெருமான் வழிபாடு சிரமங்களுக்கு பரிகாரமாக இருக்கும்.

சிம்மம் – பொன், பொருள்சேர்க்கை

இந்த சனிப்பெயர்ச்சி உங்களக்கு சுமாராகவே இருக்கும். தொழில் ரீதியான முன்னேற்றங்களை கொடுத்தாலும் சிரம பலன்கள் அதிகமாகவே இருக்கும்.

பொதுப்பலன்கள் : சனி சஞ்சாரம் தனுசு ராசியில் வருவது உங்களுக்கு 5ம் இடம் என்பதால் புத்திரர்கள் பற்றிய கவலை அதிகம் இருக்கும். பராமரிப்பு சிரமங்கள் இருக்கும். குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் வரும். பூர்வீக சொத்து பிரச்னைகள் இருந்தால் சிரமமாக இருக்கும். மூலம் நட்சத்திரம் சாரம் பெற்று சஞ்சரிக்கும் பொழுது உங்களுக்கு பூமி சம்பந்தப்பட்ட விஷயங்கள் லாபம் தரும். கடன்கள் தீரும். பொன்பொருள் சேர்க்கை இருக்கும். இந்த சூழ்நிலை 15.11.2017 முதல் 08.07.2019 வரை இருக்கும். அதன் பிறகு சுக்ரன் சாரம் பெற்று சஞ்சரிக்கும் பொழுது பெண்கள் மூலம் வீண் பிரச்னைகள் வரும். செய்யும் தொழிலில் கூட பெண்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நல்லது செய்தாலும் கெட்டதாக மாறும். இந்த சூழ்நிலை 12.02.2020 வரை நீடிக்கும். அதன் பிறகு சனி சூரியன் சாரம் பெற்று சஞ்சரிக்கும் பொழுது உடற்சோர்வு, எந்த ஒரு விஷயத்திற்கும் அலைச்சல் செல்வாக்கு குறைவு என சிரம பலன்கள் இருக்கும். விடாமுயற்சியுடன் செயல்பட்டால் சிரமங்கள் குறையும்.

சனியின் பார்வை பலன்கள் கும்பம், மிதுனம், கன்னி ஆகிய ராசிகளை சனி பார்ப்பதால் உங்களுக்கு பார்வை பலன்களாக சுகமின்மை, வாழ்க்கை துணை உடல் நலக்குறைவு, வீடு, மனை போன்ற விஷயங்களில் அனுகூலமின்மை அக்கம் பக்கத்தில் விண் பிரச்னைகள், கூட்டாளிகளுடன் பிணக்கு என சிரமங்கள் இருந்தாலும் லாபஸ்தானத்தை பார்ப்பதால் லாப வரவுகள் பதவி உயர்வு, சுகவிருத்தி, மகிழ்ச்சி என நற்பலன்களும் இருக்கும். சூழ்நிலையை அனுசரித்து செயல்படுங்கள்.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு : தொழிலில் நல்ல முன்னேற்றம் இருந்தாலும் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு குறையும். வீண் செலவுகள் வரும். உற்பத்தி திறன் கூடும். வியாபாரத்தில் அலைச்சல் போட்டி, கடின உழைப்பு இருக்கும். லாபகரமான சூழ்நிலை நிலவு।ம். வியாபார விருத்தியாகும். கூட்டாளிகள் மனக்கசப்பு சிரமம் தரும்.

கல்வியாளர்கள், மாணவர்களுக்கு : கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆனாலும் வீண் பிரச்னைகள் காரியத்தடையாகும். முழு ஈடுபாடு தேவை. கலை, இலக்கியம் மேன்மை பெறும். விளையாட்டு போட்டிகளில் முன்னேற்றமாக இருக்கும். ஆன்மிக சிந்தனை சிரமங்களுக்கு பரிகாரமாகும்.

விவசாயிகளுக்கு: விவசாயப் பணிகளில் கடின உழைப்பு இருக்கும். பயண அலைச்சல் மிகுந்திருக்கும். முற்பாதியில் நிதிநிலைமை சீராக இருக்கும். கால்நடை விருத்தியாகும். ஆனாலும் பராமரிப்பு செலவுகள் கூடும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பூமி சம்பந்தப்பட்ட விஷயங்கள் அனுகூலமாகும்.

பெண்களுக்கு: குடும்ப பணிகளில் சிரமம் அதிகரிக்கும். அத்தியாவசிய தேவைகள் நெருக்கடி தரும். சேமிப்பு குறையும். பிற்பகுதியல் பொருளாதார முன்னேற்றம் வரும். பொன் பொருள் சேர்க்கை இருக்கும். ஆன்மிக ஈடுபாடு ஆறுதல் தரும். அக்கம்பக்கத்தில் முன்னெச்சரிக்கை தேவை. குடும்ப பிரச்னைகளில் பொறுமையுடன் சூழ்நிலையை அனுசரிப்பது உத்தமம்.

விநாயகர், மகாலெட்சுமி, சிவபெருமான் வழிபாடு சிரமங்களுக்கு பரிகாரமாகும்.

கன்னி – குடும்பத்தில் மகிழ்ச்சி

இதுவரை 3ம் இடத்தில் இருந்து நற்பலன்களை வழங்கிய சனி தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகி சிரம பலன்களை தருவார். சார பலன்கள் மற்றும் பார்வை பலன்கள் ஓரளவு சமாளிக்கும் வகையில் இருக்கும். குரு, ராகு நற்பலன்கள் இருப்பதால் சிரமங்களை சமாளிக்கும் வகையில் இருக்கும்.

பொதுப்பலன்கள் : சனியின் 4ம் இடம் சஞ்சாரம் உங்களுக்கு பயண அலைச்சல், தாயார் உடல் நலக்குறைவு, நம்பிக்கைக்கு உரியவரே எதிர்ப்பாக செயல்படுதல் போக்குவரத்தில் முன்னெச்சரிக்கை தேவை என சிரம பலன்கள் இருக்கும். பொறுமையுடன் சூழ்நிலையை அனுசரிப்பது உத்தமம். சனி மூலம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலகட்டம் 15.12.2017 முதல் 8.07.2017 வரை எதிரிகள் தொல்லை, தேக ஆரோக்யக்குறை, புத்திரர்கள் கவலை என சிரமங்கள் இருக்கும். 8.07.2017 தொடங்கி 12.02.2020 வரை சனி சுக்ரன் சாரம் பெற்று பூராட நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் பொழுது தனலாபம், கண்ணில் சிறு சிறு உபாதைகள், அரச மரியாதை, சுகசெளக்யம், மகிழ்ச்சியான சூழ்நிலை என நற்பலன்கள் இருக்கும். அதன் பிறகு 12.02.2020 முதல் 15.12.2020 வரை சனி சூரியச் சாரம் பெற்று உத்திராடம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் பொழுது இடமாற்றம், வீண் செலவுகள் என சிரம பலன்களை தருவார். சூழ்நிலையை அனுசரித்து திட்டமிட்டு செயல்படுவது உத்தமம்.

சனியின் பார்வை பலன்களாக சனி பார்க்கும் கும்பம், மிதுனம், கன்னி ராசிகள் அடிப்படையில் உங்களுக்கு கடன்கள் தீரும், வழக்குகளில் வெற்றி எதிர்ப்புகளை வெல்லுதல், தனலாபம் என நற்பலன்களும் தொழில் ரீதியாக கடின உழைப்பு, உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இன்மை, உத்தியோக பயம், காரியத்தடை, சுகமின்மை, வீண் விரயங்கள் என சிரம பலன்கள் இருக்கும். எனவே சூழ்நிலையை அனுசரித்து திட்டமிட்டு செயல்படுங்கள்.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு : தொழில் ரீதியான சூழ்நிலைகள் கடின உழைப்பு, உழைப்புக்கு ஏற்ற பலன் இல்லாமை, எதிர்பாராத செலவினங்கள் என இருக்கும். ஆனாலும், எதிர்பாராத முன்னேற்றம் வரும். வியாபாரத்தில் கடின உழைப்பு, அலைச்சல், போட்டி என சிரமங்கள் இருக்கும். சூழ்நிலையை அனுசரித்து விடாமுயற்சியுடன் செயல்படுவது நற்பலன் தரும்.

கல்வியாளர்கள், மாணவர்களுக்கு : கல்வியில் முன்னேற்றத்தடை இருக்கும். தன்னம்பிக்கையுடன் முழு ஈடுபாடு காட்டுவது உத்தமம். கலை, இலக்கியம் சுமாராகவே இருக்கும். விளையாட்டு போட்டிகளில் விடாமுயற்சி கடின உழைப்பு தேவை. குரு, ராகுவின் உத்தம பலன் இருப்பதால் ஓரளவு சிரமங்கள் குறையும்.

விவசாயிகளுக்கு: விவசாயப் பணிகளில் கடின உழைப்பு இருக்கும். நிதி நிலைமை ஓரளவு ஏற்ற இறக்கமாக இருக்கும். கால்நடை பராமரிப்பு சிரமங்கள் இருக்கும். வெளியூர் பயண அலைச்சல் உண்டு. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தேக ஆரோக்யத்தில் கவனம் தேவை. சூழ்நிலையை அனுசரித்து திட்டமிட்டு செயல்படுங்கள் சிரமம் குறையும்.

பெண்களுக்கு: குடும்ப பணிகளில் சிறப்பு கூடும். குடும்பத்தில் அத்தியாவசிய தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரிய முயற்சிகள் முன்னேற்றம் பெறும். உறவுகள் மேம்படும். குடும்ப பணிகளில் முன்னெச்சரிக்கை தேவை. பொன் பொருள் சேர்க்கை மகிழ்ச்சி தரும். திட்டமிட்டு செயல்படுவது உத்தமம்

விநாயகர், மகாலெட்சுமி, சிவபெருமான் தெய்வ வழிபாடு சிரமங்களுக்கு பரிகாரமாகும்.

துலாம் – அயன சயன போகம்

இதுவரை 2ம் இடத்தில் இருந்து சிரமங்களை கொடுத்த சனி – தனுசு ராசி பெயர்ச்சியாகி நற்பலன்களை வழங்குவார். சார பலன்கள் பார்வை பலன்கள் சுமாராகவே இருக்கும்.

பொதுப்பலன்கள் : தனுசு ராசியில் சனி சஞ்சாரம் உங்களுக்கு நாற்கால் பிராணிகள் வகையில் லாபம், வளர்ப்பு பிராணிகள் சேர்க்கை சுகஜீவனம், கடன் தீருதல், தேக ஆரோக்யம் விருத்தி, முயற்சிகளில் வெற்றி என நற்பலன்கள் இரண்டரை ஆண்டுகளுக்கு இருக்கும். தொழில் ரீதியான சூழ்நிலைகள் கடின உழைப்பு இருக்கும். சனி மூலம் நட்சத்திர சஞ்சாரம் 15.12.2017 முதல் 8.7.2019 வரை கேது சாரம் பெற்று சஞ்சரிக்கும் பொழுது, தேக ஆரோக்யக்குறை, தீயோர் நட்பு என சிரமங்களை தருவார். அதன் பிறகு 8.7.2019 முதல் 12.02.2020 வரை சனி பூராட நட்சத்திரத்தில் சுக்ரன் சாரம் பெற்று சஞ்சரிக்கும் பொழுது சுகம் பெறல், நல்ல விருந்து, அயன சயன போகம் – புத்தாடை ஆபரணச் சேர்க்கை, தனலாபம் பணவரவுகள் கூடுதல் என நற்பலன்களை வழங்குவார். 12.02.2020 முதல் 15.12.2020 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சூரிய சாரம் பெற்று சஞ்சரிக்கும் பொழுது தொழில் ரீதியான முன்னேற்றம், பதவி உயர்வு, வீடு மனை, பூமி போன்ற விஷயங்கள் அனுகூலமாகுதல், தனலாபம், பணவரவு எதிர்ப்பு விலகல் – தேக ஆரோக்யம் என நற்பலன்களை வழங்குவார்.

சனி கும்பம், மிதுனம், கன்னி ஆகிய ராசிகளை பார்ப்பதால் பார்வைப் பலன்கள் மதிமயக்கம், செயல் தடுமாற்றம், பூர்வீகம் விட்டு இடப்பெயர்ச்சி, மூதலீட்டில் தட்டுப்பாடு, தந்தைக்கு தேக ஆரோக்யக்குறை, கடின உழைப்பு, வீண் விரயம், பயண அலைச்சல், தூக்கமின்மை என சிரம பலன்கள் தொடர்ந்து இருக்கும். எனவே சூழ்நிலையை அனுசரித்து திட்டமிட்டு செயல்படுவது உத்தமம்.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு : தொழில் ரீதியான சூழ்நிலைகள் முற்பகுதியில் சுமாராக இருக்கும். பிற்பகுதியில் முன்னேற்றமாக இருக்கும். நிதி நிலைமை சீராகும். உற்பத்தி திறன் அதிகரிக்கும். வியாபாரத்தில் முற்பகுதி கடின உழைப்பு போட்டி சிரமம் தரும். பிற்பகுதியில் நல்ல முன்னேற்றம் வரும். லாபகரமான சூழ்நிலைகள் வியாபார விருத்திக்கு வழி வகுக்கும்.

கல்வியாளர்கள், மாணவர்களுக்கு : கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆனாலும் முழு ஈடுபாடு தேவை. கலை, இலக்கியம் முன்னேற்றம் பெறும். விளையாட்டு போட்டிகளில் உற்சாகம் மிகுந்திருக்கும். ஞாபகமறதி தொல்லை இருக்கும். திட்டமிட்டு செயல்படுவது உத்தமம்.

விவசாயிகளுக்கு: விவசாயப் பணிகளில் சிறப்பு கூடும். முன்னேற்றம் இருக்கும். பூமி சார்ந்த விஷயங்கள் லாபம் தரும். கால்நடை விருத்தியாகும். நிதிநிலைமை சீராகும். பயண அலைச்சல் மிகுந்திருக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

பெண்களுக்கு : குடும்ப பணி­க­ளில் சிறப்பு கூடும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். பொன் பொருள் சேர்க்கை மகிழ்ச்சி தரும். குடும்பத்தில் சந்தோச சூழ்நிலை இருக்கும். சுகபோகம், சுகசெளக்யம், சுகஜீவனம் மிகுந்திருக்கும். ஆன்மிக ஈடுபாடு மன நிம்மதி தரும். சுபகாரிய முயற்சி அனுகூலமாகும்.

விநாயகர், மகாலெட்சுமி, சிவபெருமான் வழிபாடு சிரமங்களுக்கு பரிகாரமாக இருக்கும்.

விருச்சிகம் – இறையருள் கிட்டும்

இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு ஜென்ம ராசியிலிருந்து 2ம் இடம் செல்வதால் உங்களுக்கு 7½ சனியில் கடைசி 2½ வருடம் பாத சனி – ஜென்மத்திலிருந்து சிரமங்களை கொடுத்தவர். சிரமங்களை குறைத்து பயண அலைச்சலை கொடுப்பார்.

பொதுப்பலன்கள் : சனியின் சஞ்சாரம் உங்களுக்கு குடும்பத்தை விட்டு வெளியூர் செல்லுதல், பணவிரயம், வீண் செலவு, திருட்டு பயம் என சிரமங்கள் இருக்கும். முன்னெச்சரிக்கையுடன் இருப்பது உத்தமம். சனி மூலம் நட்சத்திரத்தில் கேது சாரம் பெற்று சஞ்சரிக்கும் காலகட்டம். தன லாபம், விரோதிகளை வெல்லுதல், இறையருள் கிட்டுதல் என நற்பலன்களை 8.7.2019 வரை வழங்குவார். அதன் பிறகு பூராட நட்சத்திரத்தில் சுக்ரன் சாரம் பெற்று சஞ்சரிக்கும் பொழுது பெண்களால் சிரமம், தொல்லை என்று சிரமங்கள் இருந்தாலும் அயன சயன போகம் இருக்கும். புத்தாடை, ஆபரணச் சேர்க்கை இருக்கும். இந்த சூழ்நிலை 8.7.2019 முதல் 12.02.2020 வரை இருக்கும். அதன் பிறகு உத்திராடம் நட்சத்திரத்தில் சூரியச் சாரம் பெற்ற உங்கள் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். தந்தையின் உதவி கிட்டும். தொழில் முன்னேற்றம் என நற்பலன்கள் 15.12.2020 வரை நீடிக்கும்.

சனியின் பார்வை கும்பம், மிதுனம், கன்னி ராசிகளுக்கு இருப்பதால் பிறந்த இடம் விட்டு வெளியூர் செல்லுதல், வேண்டத்தக்கவரே எதிர்ப்பாக இருத்தல், தாயார் தேக ஆரோக்யக்குறை என சிரமங்கள் இருக்கும். உறவினர் பகை பிரிவு, காரியத்தடை, மற்றும் கடின உழைப்பு என சிரமங்கள் இருக்கும். கன்னி ராசியை பார்ப்பது லாப வரவுகள், பதவி உயர்வு, தனவிருத்தி சுகவிருத்தி, சந்தோஷம் என நற்பலன்கள் இருக்கும். சூழ்நிலையை அனுசரித்து திட்டமிட்டு செயல்படுங்கள் சிரமங்கள் குறையும்.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு : தொழில் சார்ந்த விஷயங்கள் முன்னேற்றமாக இருக்கும். கடின உழைப்பு, அலைச்சல், வீண் விரயம் இருக்கும். நிதி நிலைமை சீராக இருக்கும். வியாபாரங்களில் கடின உழைப்பு அலைச்சல் மிகுந்திருக்கும். ஆனாலும் வியாபாரம் முன்னேற்றம் பெறும். லாபகரமான சூழ்நிலை இருக்கும். வியாபார விருத்தியாகும். தினமும் காக்கைக்கு அன்னம் வைத்துவிட்டு சாப்பிடுவது உத்தமம்.

கல்வியாளர்கள், மாணவர்களுக்கு : கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அனுகூலமான சூழ்நிலை மிகுந்திருக்கும். கலை, இலக்கியம் மேன்மை தரும். விளையாட்டு போட்டிகளில் உற்சாகம் மிகுந்திருக்கும். வெற்றி கிட்டும்.

விவசாயிகளுக்கு: விவசாயிகளுக்கு விவசாயப் பணிகளில் கடின உழைப்பு இருந்தாலும் முன்னேற்றமாக இருக்கும். கால்நடை விருத்தியாகும். பராமரிப்பு மற்றும் மராமத்து செலவினங்கள் இருக்கும். பயண அலைச்சல் மிகுந்திருக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

பெண்களுக்கு: குடும்ப பணிகளில் கடின உழைப்பு, சிரமம் இருக்கும் எதிர்பாராத செலவினங்கள் சிரமம் தரும். சுபகாரிய ஈடுபாடு மகிழ்ச்சி தரும். அக்கம் பக்கத்தில் கவனம் தேவை. குடும்ப பணிகளில் முன்னெச்சரிக்கை தேவை. அத்தியாவசியத் தேவை நெருக்கடி தரும். தேக ஆரோக்யத்தில் அவ்வப்போது சிறு சிறு தொல்லை வரும்.

விநாயகர், மகாலெட்சுமி, சிவபெருமான் தெய்வ வழிபாடு விருச்சிக ராசிக்கு சிரமப் பரிகாரமாகும்.

தனுசு – சவாலை சமாளி

இதுவரை 12ம் இடத்தில் இருந்து சிரம பலன்களை தந்த சனி தற்பொழுது ராசிக்கு வருவது 7½ சனியின் ஜென்ம சனியாகும். எனவே சனியின் ஏற்ற இறக்க பலன்கள் இருக்கும். சூழ்நிலையை அனுசரித்து செயல்படுவது உத்தமம்.

பொதுப்பலன்கள் : சனி சஞ்சாரம் ராசியில் இருப்பது உடல் நலமின்மை, உறவினர் பகை, வெளியூர் பயண அலைச்சல், அக்னி அபாயம் என சிரம பலன்கள் பொதுவாக இருக்கும். சனிமூலம் நட்சத்திரத்தில் கேது சாரம் பெற்று சஞ்சரிக்கும் பொழுது திருட்டு பயம், அக்னி அபாயம், எதிரியினால் தொல்லை, கோபம், என சிரம பலன்கள் 8.7.2019 வரை நீடிக்கும். அதன் பிறகு சனி பூராடம் நட்சத்திரத்தில் சுக்ரன் சாரம் பெற்று சஞ்சரிக்கும் பொழுது கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. காரியத்தடை என சிரம பலன்கள் இருந்தாலும், உறவுகள் சுற்றம் ஒன்று கூடும் சுபநிகழ்ச்சி தனலாபம் பணவரவு என நற்பலன்களும் இந்த கால கட்டத்தில் இருக்கும். அதன் பிறகு உத்ராடம் நட்சத்திரத்தில் சூரியச் சாரம் பெற்று 12.02.2020 முதல் 15.12.2020 வரை எதிர்பாராத ஆபத்து, தாழ்வு மனப்பான்மை என சிரம பலன்கள் இருக்கும்.

சனியின் பார்வை கும்பம், மிதுனம், கன்னி ராசிக்கு இருப்பதால் பார்வை பலன்கள் சகோதர உதவி, மனோ திடம், கடன் தீரும் என நற்பலன்கள் இருக்கும். சுகமின்மை, வாழ்க்கை துணை தேக ஆரோக்யம் குறை, கூட்டாளிகளுடன் பிணக்கு அண்டை அயலாருடன் சண்டை, வீடு மனை போன்ற விஷயங்களில் குறைபாடு, கடின உழைப்பு, உழைப்புக்கு ஏற்ற ஊதியமின்மை என சிரம பலன்களும் இருக்கும். சவாலான சூழ்நிலைகளை தன்னம்பிக்கையுடன் சமாளிக்கலாம்!

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு : தொழில் ரீதியான சூழ்நிலை கடினமாக இருக்கும். வீண் அலைச்சல், காரியத்தடை என சிரமம் இருக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவைப்படும். வியாபாரத்தில் கடின உழைப்பு, பண நெருக்கடி, போட்டி என சிரமங்கள் இருக்கும். சூழ்நிலை அனுசரித்து பொறுமையுடன் செயல்படுவது உத்தமம்.

கல்வியாளர்கள், மாணவர்களுக்கு : கல்வியில் ஏற்ற இறக்கமாக இருக்கும். காரியத்தடை, கவனச் சிதறல் என சிரமங்கள் இருக்கும். கலை, இலக்கியம் விடாமுயற்சி, முழு ஈடுபாடு தேவைப்படும். விளையாட்டு போட்டிகளில் கடின உழைப்பு முழு ஈடுபாடு தேவைப்படும். பொறுமையுடன் நிதானமும் தேவை. சூழ்நிலையை அனுசரித்து செயல்படுவது உத்தமம்.

விவசாயிகளுக்கு: விவசாயப் பணிகளில் கடின உழைப்பு இருக்கும். எதிர்பாராத செலவினங்கள் சிரமம் தரும். உழைப்புக்கு ஏற்ற பலன் இல்லாமல் அவஸ்தை தரும். கால்நடை பராமரிப்பு சிரமங்கள் இருக்கும். வரவுக்கு ஏற்ப செலவுகள் இருக்கும். பயண அலைச்சல் மிகுந்திருக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

பெண்களுக்கு : குடும்ப பணி­க­ளில் சிரமம் கூடும். பொறுப்புகள் அதிகமாகும். அத்தியாவசிய தேவைகள் நெருக்கடி தரும். வரவுக்கு ஏற்ப செலவுகள் இருக்கும். குடும்ப பணிகளில் முன்னெச்சரிக்கை தேவை. சுபச் செலவினங்கள் இருக்கும். அக்கம் பக்கத்தில் கவனம் தேவை. ஆன்மிக சிந்தனை சிரமங்களை குறைக்கும்.

தனுசு ராசி நேயர்களுக்கு இது 7½ சனியின் ஜென்ம சனி என்பதால் சிரமங்கள் அதிகம் இருப்பதாக தோன்றும். எனவே தினமும் காக்கைக்கு அன்னமிட்டு, சனிக்கிழமை சனீஸ்வரருக்கு எள் தீபம் ஏற்றுங்கள். சிரமங்கள் குறையும். விநாயகர், மகாலெட்சுமி, சிவபெருமான் போன்ற தெய்வ வழிபாடு விருச்சிக ராசிக்கு சிரமப் பரிகாரமாகும்.

மகரம் – குரு, மகான் தரிசனம்

இதுவரை லாபஸ்தானத்திலிருந்து நற்பலன்களை வழங்கிய சனி 15.12.2017 முதல் தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகி சிரம பலன்களை தருவார். அத்துடன் 7½ சனி உங்களுக்கு ஆரம்பமாகிறது! எனவே சூழ்நிலையை அனுசரித்து செயல்படுவது உத்தமம். சனி ராசியாதிபன் என்பதால் சிரமம் குறையும்.

பொதுப்பலன்கள் : சனியின் சஞ்சாரம் பொதுப்பலன்களாக பிரயாண அலைச்சல், தூக்கமின்மை, கவலை, பண விரயம், தூர தேச பயணம் என சிரம பலன்கள் பொதுப்பலன்களாக இருக்கும். சனி மூலம் நட்சத்திரத்தில் கேது சாரம் பெற்று சஞ்சரிக்கும் பொழுது 15.12.2017 முதல் 8.7.2019 வரை காலகட்டத்தில் சனியின் சார பலன்களாக நோய், காரியத்தடை, சத்துருவால் இன்னல் என சிரம பலன்கள் இருக்கும். அதன் பிறகு சனி பூராட நட்சத்திரத்தில் சுக்ரன் சாரம் பெற்று சஞ்சரிக்கும் பொழுது தனலாபம், பணவரவு, குரு, மகான் தரிசனம், உங்களிடம் பகைமை பாராட்டியவர்கள் நட்பு பாராட்டுவார்கள் என நற்பலன்களும், தொழில் ரீதியான சூழ்நிலையில் பெண்களால் கெட்ட பெயர் வரும். முன்னெச்சரிக்கை தேவை என சிரம பலன்களும் இருக்கும். இந்த சூழ்நிலை 12.02.2020 வரை நீடிக்கும். அதன் பிறகு சனி உத்திராட நட்சத்திரத்தில் சூரியச்சாரம் பெற்று சஞ்சரிக்கும் பொழுது, தேக ஆரோக்யக்குறை, வாழ்க்கைதுணையுடன் வாக்குவாதம், சிறு சிறு சச்சரவு அரசு சார்ந்த விஷயங்களில் நெருக்கடி என சிரம பலன்கள் 15.12.2020 வரை இருக்கும்.

சனியின் பார்வை கும்பம், மிதுனம், கன்னி ராசிகளுக்கு இருப்பதால் சேமிப்பு கரைதல், குடும்பத்தில் வாக்குவாதம், தந்தைக்கு தேக ஆரோக்யக்குறை, முதலீட்டுக்கு தட்டுப்பாடு என சிரமப் பலன்கள் இருந்தாலும், கடன் தீருதல், வழக்கில் வெற்றி, எதிர்ப்பு விலகல், தனலாபம், பணவரவு என நற்பலன்களும் இருக்கும். மொத்தத்தில் சூழ்நிலையை அனுசரித்து செயல்படுவது உத்தமம் 7½ சனி ஆரம்பம் என்பதால் சனிக்கிழமை சனீஸ்வரருக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவது உத்தமம்.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு : தொழில் ரீதியான சூழ்நிலைகளில் சற்று சிரமம் இருக்கும். நிதி நெருக்கடி இருக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உற்பத்தி நெருக்கடி என சிரமங்கள் இருக்கும். பிற்பகுதியில் நிதி நிலைமை சீராகும். உற்பத்தி திறன் அதிகரிக்கும். வியாபாரத்தில் கடின உழைப்பு, போட்டி, அலைச்சல் என சிரமங்கள் இருக்கும்.

கல்வியாளர்கள், மாணவர்களுக்கு : கல்வியில் முன்னேற்றம் இருக்கும். ஆனாலும், கவனச் சிதறல் – காரியத்தடை என முன்னேற்றத் தடைகள் அவ்வப்போது வரும். கலை, இலக்கியம் சுமாராக இருந்தாலும் பிற்பகுதியில் மேன்மை பெறும். விளையாட்டு போட்டிகளில் விடாமுயற்சி முழு ஈடுபாடு தேவைப்படும். முற்பகுதியை விட பிற்பகுதியில் நல்ல முன்னேற்றம் வரும். சூழ்நிலையை அனுசரித்து செயல்படுவது உத்தமம்.

விவசாயிகளுக்கு: விவசாய பணிகளில் கடின உழைப்பு இருக்கும். வெளியூர் பயண அலைச்சல் இருக்கும். தூக்கமின்மை உடற்சோர்வு இருக்கும். கால்நடை விருத்தி இருக்கும். நிதி நிலைமை ஏற்ற இறக்கமாக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

பெண்களுக்கு : குடும்ப பணிகளில் சிரமம் கூடும்.சோம்பல் சிந்தனைகள் சிரமம் தரும். அத்தியாவசியத் தேவை நெருக்கடி தரும். தேக ஆரோக்யத்தில் அவ்வப்போது சிரமம் வரும். முயற்சிகளில் காரியத்தடை வரும். அக்கம் பக்கத்தில் கவனம் தேவை. குடும்ப பணிகளில் முன்னெச்சரிக்கை தேவை.

விநாயகர், மகாலெட்சுமி, சிவபெருமான் வழிபாடு உங்கள் சிரமங்களுக்கு பரிகாரமாகும். காக்கைக்கு அன்னம் வைத்து விட்டு சாப்பிடுங்கள்.

கும்பம் – லாபம் பெருகும்

இதுவரை லாபஸ்தானத்தில் இருந்து உங்களுக்கு தொழில் ரீதியான சிரமங்களை கொடுத்த சனி இப்பொழுது தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகி உங்களுக்கு லாபகரமான விஷயங்களை அனுகூலம் செய்வார்.

பொதுப்பலன்கள் : சனியின் தனுசு ராசி சஞ்சாரம் உங்களுக்கு பணவரவு, பெண்களால் சந்தோஷம், மகிழ்ச்சி, தனலாபம் சுகசெளக்யம் மிகுந்திருக்கும். தொழில் ரீதியான சூழ்நிலைகள் லாபகரமாக இருக்கும். பொதுப் பலன்கள் நற்பலன்களாக இருக்கும்.

சனியின் மூல நட்சத்திர சஞ்சாரம் கேது சாரம் பெறுவதால் பண விரயம், கண் சம்பந்தப்பட்ட உபாதை, தேக ஆரோக்யம் குறை என சார பலன்கள் சிரமம் தரும். இது 15.12.2017 முதல் 8.7.2019 வரை நீடிக்கும். அதன் பிறகு பூராட நட்சத்திரத்தில் சுக்ரன் சாரம் பெறும் சனி விருந்து – சுற்றமும் நட்பும் ஒன்றுகூடும். சூழ்நிலை, மதிப்பு, மரியாதை உயர்தல் , தனவிருத்தி – மகிழ்ச்சியான சூழ்நிலை என நற்பலன்கள் 12.02.2020 வரை நீடிக்கும். அதன் பிறகு உத்திராடம் நட்சத்திரத்தில் சூரியசாரம் பெறும் சனி பயண அலைச்சல் தாழ்வு மனப்பான்மை, குடும்பக் கவலை என சிரம பலன்களை 15.12.2020 வரை தருவார். சனியின் பார்வை கும்பம், மிதுனம், கன்னி ராசியில் பதிவதால் பார்வை பலன்கள் சுகமின்மை சிரமங்கள், எதிர்பாராத செலவினங்கள், வீடு, மன.ை போன்ற விஷயங்களில் அனுகூலமின்மை, மனக்குழப்பம், புத்தி தடுமாற்றம், பூர்விக இடம் விட்டு பெயர்ச்சியாகுதல், காரியத்தடை, முயற்சியில் பின்னடைவு, புத்திரர்கள் பற்றிய கவலை என சிரம பலன்கள் இருக்கும். சூழ்நிலையை அனுசரித்து திட்டமிட்டு செயல்படுங்கள். சிரமங்கள் குறையும்.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு : தொழில் ரீதியான சூழ்நிலைகள் லாபகரமாக இருக்கும். எதிர்பாராத செலவினங்கள் சிரமப்படுத்தும். உற்பத்தி திறன் அதிகரிக்கும். வியாபாரத்தில் கடின உழைப்பு இருந்தாலும் லாபகரமான சூழ்நிலை நிலவும். வியாபார விருத்தியாகும். இடையிடையே அவ்வப்போது ஏற்ற இறக்கம் இருந்தாலும், லாபகரமான சூழ்நிலை நீடிக்கும்.

கல்வியாளர்கள், மாணவர்களுக்கு : கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இடையில் ஏற்றம், இறக்கம் இருக்கும். அப்பொழுது முழு ஈடுபாடுகாட்ட வேண்டிய அவசியம் ஏற்படும். கலை, இலக்கியம் முன்னேற்றமாக இருக்கும். விளையாட்டு போட்டிகள் உற்சாகமாக இருக்கும். பிற்பகுதியில் கடின உழைப்பு தேவைப்படும். சூழ்நிலையை அனுசரித்து செயல்பட வேண்டும்.

விவசாயிகளுக்கு: விவசாய பணிகளில் முன்னேற்றம் மிகுந்திருக்கும். தன, தான்ய விருத்தி லாபம் தரும். கால்நடை விருத்தி லாபம் தரும். மராமத்து செலவினங்கள் இருக்கும். பயண அலைச்சல் மிகுந்திருக்கும். நிதி நிலைமை சீராகும். பூமி சார்ந்த விஷயங்கள் அனுகூலமாகும். திட்டமிடல் அவசியம் தேவை.

பெண்களுக்கு : குடும்ப பணிகளில் சிறப்பு கூடும். புதிய பொறுப்புகள் வரும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். புதிய பொருள் சேர்க்கை மகிழ்ச்சி தரும். சுபகாரிய முயற்சிகள் அனுகூலமாகும். சுபச்செலவுகள் அதிகரிக்கும். விருந்தினர் வருகை இருக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. குடும்பப் பணிகளில் முன்னெச்சரிக்கை தேவைப்படும்.

விநாயகர், மகாலெட்சுமி, சிவபெருமான் வழிபாடு உங்கள் சிரமங்களுக்கு பரிகாரமாகும்.

மீனம் – வசதி வாய்ப்புகள் கூடும்

இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு 10ம் இடம் வந்து தொழில் ரீதியான சிரமங்களை தருவார். 8ல் குரு இருப்பது சிரமம் எனவே மிகவும் பொறுமையுடன் செயல்படுவது உத்தமம்.

பொதுப்பலன்கள் : சனி தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகி உங்களுக்கு 10ம் இடம் சஞ்சார பலன்கள் வழங்குவார். செய்யும் தொழிலில் கடின உழைப்பு இருக்கும். மேலதிகாரிகளின் அனுசரணை இருக்காது! உங்கள் தொழில் சிரத்தைக்கு களங்கம் வரும். சனி மூலம் நட்சத்திரத்தில் கேது சாரம் பெற்று 15.12.2017 முதல் 8.7.2019 வரை சஞ்சரிக்கும் பொழுது சாரபலன்கள் பணவரவுகள், தனலாபம், சுகசெளக்யம் என நற்பலன்களை வழங்குவார். அதன் பிறகு பூராடம் நட்சத்திரத்தில் சுக்ரன் சாரம் பெற்று சஞ்சரிக்கும் பொழுது கெளரவக்குறைச்சல், சேமிப்பு கரைதல், பதவி இறக்கம் என சிரமங்கள் இருந்தாலும் – வாழ்க்கை துணை சேமிப்பு உயர்தல், வாழ்க்கையில் வசதி வாய்ப்புகள் கூடுதல் என நற்பலன்களும் 12.02.2020 வரை நீடிக்கும். அதன் பிறகு சனி உத்திராடம் நட்சத்திரத்தில் சூரிய சாரம் பெற்று சஞ்சரிக்கும் பொழுது பதவி உயர்வு, வீடு, மனை போன்ற விஷயங்களில் லாபம், தனலாபம், பணவரவு, எதிர்ப்புகள் விலகுதல், என நற்பலன்கள் 12.02.2020 முதல் 15.12.2020 வரை நீடிக்கும்.

சனியின் பார்வை கும்பம், மிதுனம், கன்னி ராசி ஆகிய மூன்று ராசிகளுக்கும் இருப்பதால் உங்களுக்கு பார்வை பலன்கள், சுகமின்மை, தாயார் உடல் நலக்குறை – கல்வியில் பின்னடைவு, வாகனவிபத்து, மனைவிக்கு உடல் நலக்குறை, வீடு, மனை போன்ற விஷயங்களில் பின்னடைவு, அக்கம் பக்கத்தில் சண்டை, கூட்டாளிகள் பிணக்கு அதிக உழைப்பு, பிரயானம், வீண்விரயம், தூக்கமின்மை என சிரமங்கள் இருக்கும். பொறுமையுடன் திட்டமிட்டு செயல்படுங்கள். சிரமங்கள் குறையும்.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு : தொழில் ரீதியான சூழ்நிலை சுமாராக இருக்கும். எதிர்பாராத செலவினங்கள் இருக்கும். கடின உழைப்பு – வீண் அலைச்சல் – கூட்டாளிகள் இணக்கமின்மை என சிரமங்கள் இருக்கும். வியாபாரத்தில் கடின உழைப்பு, போட்டிகள், அலைச்சல் என சிரமங்கள் இருக்கும். நிதி நெருக்கடி அவ்வப்போது வரும். பொறுமையுடன் சூழ்நிலையை அனுசரிப்பது உத்தமம்.

கல்வியாளர்கள், மாணவர்களுக்கு : கல்வியில் முன்னேற்றத்தடை வரும். கலை, இலக்கியம் முன்னேற்றமாக இருக்கும். விளையாட்டு, போட்டிகளில் சுமாராகவே இருக்கும். இந்த நிலை மத்தியில் கொஞ்சம் முன்னேற்றம் பெறும். விடாமுயற்சி, முழு ஈடுபாடு இருந்தால் கல்வியில் முன்னேற்றம் பெறலாம்!

விவசாயிகளுக்கு: விவசாய பணிகளில் கடின உழைப்பு இருக்கும். வீண் அலைச்சல், எதிர்பாராத செலவினங்கள் என சிரமங்கள் இருக்கும். கால்நடை விருத்தி இருக்கும். பராமரிப்பு சிரமங்களும் இருக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. 12.02.2020 முதல் 15.12.2020 வரை சூழ்நிலையில் மாற்றம் வரும். பூமி லாபம் தனதான்ய விருத்தி – நிதி நிலைமை சீராகும். எனவே சூழ்நிலையை அனுசரித்து திட்டமிட்டு செயல்படுங்கள்.

பெண்களுக்கு : குடும்ப பணிகளில் சிரமம் கூடும். அதிக உழைப்பு, தூக்கமின்மை, சுகமின்மை என சிரமங்கள் இருக்கும். குடும்பத்தில் அத்தியாவசியத் தேவைகள் நெருக்கடி தரும். எதிர்பார்க்கும் விஷயங்கள் தள்ளிப்போகும்.ஆன்மிக ஈடுபாடு சிரம பரிகாரமாக இருக்கும்.

விநாயகர், மகாலெட்சுமி, சிவபெருமான் போன்ற தொய்வங்களை வழிபடுவது உங்கள் சிரமங்களுக்கு பரிகாரமாகும்.