வார ராசி பலன் (19-01-2020 to 25-01-2020)
மேஷம்

புத்திசாலியான மேஷ ராசி அன்பர்களே...

இந்த வாரம் பொரு­ளா­தார சூழ்­நி­லை­கள் வர­வுக்கு ஏற்ப செல­வு­கள் இருக்­கும். சுப­கா­ரிய முயற்சி முன்­னேற்­றம் தரும். புதிய முயற்­சி­கள் அனு­கூ­ல­மா­கும்.  உற­வு­கள் மேம்­ப­டும். கடன்­சுமை குறை­யும்.  தொழி­ல­தி­பர்­கள், வியா­பா­ரி­க­ளுக்கு தொழில்  ரீதி­யான சூழ்­நிலை முன்­னேற்­றம் தரும். நிதி நிலைமை சீரா­கும்.  வியா­பா­ரத்­தில் கடின உழைப்பு, போட்­டி­கள் இருக்­கும். ஆனா­லும் வியா­பா­ரம் விருத்­தி­யா­கும்.  

கல்­வி­யா­ளர்­கள், மாண­வர்­க­ளுக்குள கல்­வி­யில் நல்ல முன்­னேற்­றம் மிகுந்­தி­ருக்­கும். கலை, இலக்­கி­யம் மேன்மை தரும். போட்டி விளை­யாட்­டு­க­ளில் வெற்­றி­கிட்­டும். விவ­சா­யப் பணி­க­ளில் நல்ல முன்­னேற்­றமாக இருக்­கும். தான்யவிருத்தி, கால்நடை விருத்தி லாபம் தரும். 

குடும்பப் பணிகளில் சிறப்பு கூடும். சுபகாரிய ஈடுபாடு மகிழ்ச்சி தரும். அக்கம் பக்கத்தில் கவனம் தேவை.

கவன நாள் : ஜன – 19,20,21 – சந்திராஷ்டமம்

ரிஷபம்

நண்பர்களை மதிக்கும் ரிஷபராசி அன்பர்களே...

இந்த வாரம் பொருளாதார சூழ்நிலைகள் லாபகரமாக இருக்கும். உங்கள் புத்திசாதுார்யமான செயல்பாடு பாராட்டு பெறும் வகையில் இருக்கும். புதிய வியாபார தொடர்பு அனுகூலமாகும். தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு முன்னேற்றம் மிகுந்திருக்கும். லாபம் கூடும். உற்பத்தி திறன் அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகள் மிகுந்திருக்கும். கல்வியாளர்கள், மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கலை, இலக்கியம் மேன்மை தரும். விளையாட்டு போட்டிகள் உற்சாகம் மிகுந்திருக்கும். விவசாயிகளுக்குப் பணிகளில் கடின உழைப்பு இருக்கும். பணிகளில் முன்னேற்றம் இருக்கும். லாபகரமான சூழ்நிலை இருக்கும். கால்நடை விருத்தியாகும். 

பெண்களுக்கு குடும்பப்பணியில் சிரமம் கூடும். புதிய பொறுப்புகள் கூடும். குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும்.

கவன நாள் : ஜன – 22,23  – சந்திராஷ்டமம்



மிதுனம்

சிந்தித்து செயல்படும் மிதுன ராசி அன்பர்களே...

இந்த வாரம் உங்­கள் பொரு­ளா­தார சூழ்­நி­லை­கள் மேன்­மை­யாக இருக்­கும். தன தான்ய சேர்க்கை பக்தி பெருக்கு குடும்ப மகிழ்ச்சி என மன நிறை­வாக இருக்­கும். செய்­யும் தொழி­லில் நல்ல முன்­னேற்­றம் இருக்­கும். எதிர்­பா­ராத செலவு வரும். தொழி­ல­தி­பர்­கள் வியா­பா­ரி­க­ளுக்கு தொழில் ரீதி­யான முன்­னேற்­றம் நிதி நிலைமை உயர்த்­தும். வியா­பா­ரத்­தில் போட்­டி­கள் இருந்­தா­லும் லாபம் பெரு­கும். 

கல்­வி­யா­ளர்­கள் மாண­வர்­க­ளுக்கு கல்­வி­யில் முன்­னேற்­ற­மாக இருக்­கும். கலை இலக்­கி­யம் மேன்மை தரும். விளை­யாட்டு போட்­டி­கள் வெற்றி யாகும். விவ­சா­யி­க­ளுக்கு விவ­சா­யப்­ப­ணி­க­ளில் முன்­னேற்­ற­மாக இருக்­கும். 

பெண்­க­ளுக்கு குடும்­பப்­ பணிகளில் முன்­னேற்­றம் வரும். புதிய பொருள் சேர்க்கை மகிழ்ச்சி தரும். கடன்­சுமை குறை­யும். பக்­திப்­பெ­ருக்கு இறை­ய­ருள் தரும்.

கவன நாள் : ஜன – 24,25 – சந்திராஷ்டமம்



கடகம்

உயர்ந்த எண்ணம் கொண்ட  கடக ராசி அன்பர்களே....

இந்த வாரம் உங்கள் பொருளாதார சூழ்நிலைகள் சுபிட்ஷமாக இருக்கும். பேச்சு சாதுார்யம் நன்மை பயக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். செய்யும் தொழிலில் கடின
உழைப்பு இருக்கும். தொழிலதிபர்கள், வியாபாரி களுக்கு தொழில் ரீதியான சூழ்நிலை கடினமாக இருக்கும். வியாபாரத்தில் கடின உழைப்பு போட்டிகள் சிரமப்படுத்தும். கல்வியாளர்கள், மாணவர்களுக்கு கல்வியில் காரியத்தடை வரும். கடினமான சூழ்நிலை இருக்கும். முழு ஈடுபாடு காட்ட வேண்டும். விடாமுயற்சி தேவை. விவசாயிகளுக்கு விவசாயப்பணிகளில் கடின உழைப்பு தேவைப்படும்.  

பெண்களுக்கு குடும்பப் பணிகளில் சிறப்பு கூடும். புதிய பொறுப்புகள் வரும். சுபகாரிய ஈடுபாடு நன்மை தரும். திட்டமிடல் அவசியம் தேவை.

சிம்மம்

விவேகமாக சிந்தித்து செயல்படும் சிம்ம ராசி அன்பர்களே...

இந்த வாரம் உங்கள் பொருளாதார சூழ்நிலைகள் சுமாராக இருக்கும். தொழில் ரீதியான சூழ்நிலை முன்னேற்றமாக இருக்கும். சிறப்பு சேர்க்கும். சுகபோகம் அயனசயனபோகம் மிகுந்திருக்கும். போக்குவரத்தில் முன்னெச்சரிக்கை தேவை. தொழிலதிபர்கள் வியாபாரிகளுக்கு தொழில் ரீதியான சூழ்நிலை முன்னேற்றமாக இருக்கும். வியாபாரத்தில் கடின உழைப்பு போட்டி இருந்தாலும் லாபம் பெருகும். கல்வியாளர்கள் மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் மிகுந்திரு க்கும். கலை இலக்கியம் மேன்மை பெறும். விளையாட்டு போட்டிகளில் வெற்றி கிட்டும். விவசாயிகளுக்கு பணிகளில் கடின உழைப்பு இருக்கும். வரவுக்கு ஏற்ற செலவுகள் இருக்கும். 

பெண்களுக்கு குடும்பப் பணிகளில் சிறப்பு கூடும். சூழ்நிலையை அனுசரித்து கோபப்படாமல் செயல்படவும். குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும்.

கன்னி

சூழ்நிலையை அனுசரித்து போகும் கன்னி ராசி அன்பர்களே...

இந்த வாரம் உங்கள் பொருளாதார சூழ்நிலைகள் வரவுக்கு ஏற்ப செலவுகள் இருக்கும். புதிய பொருள் சேர்க்கை, பணவரவுகள் மகிழ்ச்சி தரும். தேக ஆரோக்யக்குறை குடும்பத்தில் சிறுசிறு வாக்குவாதம் வரும். அனுசரிப்பது நன்மை.கடன் சுமை குறையும். கூட்டாளிகள் இணக்கமின்றி செயல்படுவார்கள்.  

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு தொழில் ரீதியான சூழ்நிலை சிரமம் தரும். வியாபாரத்தில் உங்கள் புத்திசாலித்தனம் லாபத்தை பெருக்கும். கல்வியாளர்கள், மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பாராத சிரமங்கள் நெருக்கடி தரும். கலை இலக்கியம் விளையாட்டு சுமாராகவே இருக்கும். விவசாயிகளுக்கு விவசாயப் பணிகளில் முன்னேற்றம் மிகுந்திருக்கும்.   

பெண்களுக்கு குடும்பப் பணிகளில் சிரமம் கூடும். புதிய பொருள் சேர்க்கை மகிழ்ச்சி தரும். சுபகாரிய ஈடுபாடு முன்னேற்றமாகும்.


துலாம்

நேர்மையான குணம் கொண்ட துலாம் ராசி அன்பர்களே....

இந்த வாரம் உங்கள் பொருளாதார சூழ்நிலைகள் லாபகரமாக இருக்கும். தேக ஆரோக்யம்,குடும்ப நலன், உறவுகள் மேன்மை, கடன் நிவாரணம் என நற்பலன்கள் கிடைக்கும். வீடு,மனை போன்ற விஷயங்கள் லாபம் தரும்.  கடன் சுமை குறையும். புதிய பொருள் சேர்க்கை மகிழ்ச்சி தரும். 

தொழிலதிபர்கள்,வியாபாரிகளுக்கு தொழில் ரீதியான சூழ்நிலை லாபகரமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் பெருகும். கல்வியாளர்கள், மாணவர்களுக்கு கல்வியில் சுமாரான சூழ்நிலை நிலவும். தேக ஆரோக்யக்குறை காரியத்தடையாகும். கலை இலக்கியம்  சுமாராக இருக்கும். விளையாட்டு போட்டி முழு ஈடுபாடு தேவை. விவசாயிகளுக்குப் பணிகளில் நல்ல முன்னேற்றம் வரும். 

பெண்களுக்கு குடும்பப்பணிகளில் சிரமம் கூடும்.  தேக ஆரோக்யக்குறை சிரமப்படுத்தும்.
 

விருச்சிகம்

எதையும் தாங்கும் இதயம்  கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே...  

இந்த வாரம் உங்கள் பொருளா தார சூழ்நிலைகள் முன்னேற்றமாக இருக்கும். தொழில் ரீதியான முன்னேற்றங்கள் இருக்கும். வருமானம் கூடும். குடும்பமகிழ்ச்சி,லாபம் பெருகுதல், புதிய வியாபாரத்தொடர்பு என நற்பலன்கள் இருக்கும். ஆனாலும் எதிர்ப்புகள் இருக்கும். தேக ஆரோக்யக் குறை சிரமப்படுத்தும்.   தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு தொழில் ரீதியான சூழ்நிலை முன்னேற்றமாக இருக்கும். கல்வியாளர்கள், மாணவர்களுக்கு முன்னேற்றமாக இருக்கும். கலை இலக்கியம் மேன்மை தரும். விவசாயிகளுக்கு விவசாயப் பணிகளில் கடின உழைப்பு இருக்கும். 

பயண அலைச்சல் டென்ஷன் மிகுந்திருக்கும். கால்நடை விருத்தியாகும். 

பெண்களுக்கு குடும்பப் பணிகளில் முன்னேற்றம் மிகுந்திருக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.
 


தனுசு

மனிதநேயம் கொண்ட  தனுசு ராசி அன்பர்களே...

இந்த வாரம் உங்கள் பொருளாதார சூழ்நிலை திருப்தி தரும். உறவுகள் மேம்படும். சுபகாரிய ஈடுபாடு மகிழ்ச்சி தரும். தொழில் மேன்மை,அரசு அனுகூலம் வீடு மனை போன்ற விஷயங்களில் லாபம்
என நற்பலன்கள் கிட்டும். தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு தொழில் ரீதியான சூழ்நிலை மேன்மை பெறும். வியாபாரத்தில் கடின உழைப்பு வியாபார விருத்திக்கு வழி வகுக்கும். 

கல்வியாளர்கள், மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமாக இருக்கும். கலை இலக்கியம் மேன்மை பெறும். விளையாட்டு போட்டிகளில் முன்னேற்றமாக இருக்கும். விவசாயிகளுக்கு விவசாயப்பணிகளில் கடின உழைப்பு இருக்கும். 

பெண்களுக்கு குடும்பப்பணிகளில் முன்னேற்றமாக இருக்கும். புதியபொருள் சேர்க்கை மகிழ்ச்சி தரும்.
 

மகரம்

தன்னம்பிக்கையுடன்  செயல்படும் மகர ராசி அன்பர்களே...

இந்த வாரம் உங்­கள் பொரு­ளா­தார சூழ்­நி­லை­கள் சுமா­ராக இருக்­கும். செய்­யும் தொழி­லில் டென்­ஷன் மிகுந்­தி­ருக்­கும். பண­வ­ரவு வசதி வாய்ப்­பு­களை பெருக்­கி­னா­லும் அதற்­கேற்ப செல­வி­னங்­க­ளும் வரும். போக்­கு­வ­ரத்­தில் முன்­னெச்­ச­ரிக்கை அவ­சி­யம் தேவை. தொழி­ல­தி­பர்­கள், வியா­பா­ரி­க­ளுக்கு தொழில் ரீதி­யான சூழ்­நிலை கடின உழைப்பு காரி­யத்­தடை என சிர­மம் இருக்­கும். வியா­பா­ரத்­தில் நெருக்­கடி மிகுந்­தி­ருக்­கும். 

கல்­வி­யா­ளர்­கள் மாண­வர்­க­ளுக்கு ஞாப­க­ம­றதி தொல்லை முன்­னேற்­றத்­த­டை­யா­கும். சோம்­ப­லான சிந்­தனை சிர­மப்­ப­டுத்­தும். கலை இலக்­கி­யம் விளை­யாட்டு சுமா­ராக இருக்­கும். விவ­சா­யி­க­ளுக்கு விவ­சா­யப் பணி­க­ளில் கடின உழைப்பு வீண் அலைச்­சல் இருக்­கும். பரா­ம­ரிப்பு செல­வு­கள் சிர­மம் தரும். 

பெண்­க­ளுக்கு குடும்­பப்­ ப­ணி­யில் சிர­மம் கூடும். தேக ஆரோக்­யக்­குறை சிர­மப்­ப­டுத்­தும்.

கும்பம்

பொறுமையுடன் செயல்படும் கும்ப ராசி அன்பர்களே...

இந்த வாரம் உங்­கள் பொரு­ளா­தார சூழ்­நி­லை­கள் முன்­னேற்­ற­மாக இருக்­கும். உங்­கள் செல்­வாக்கு உய­ரும். தொழில் ரீதி­யான சூழ்­நி­லை­கள் கடின உழைப்பு இருக்­கும். தொழில் ரீதியான வருமானம் கூடும். தொழி­ல­தி­பர்­கள், வியா­பா­ரி­க­ளுக்கு தொழில் ரீதி­யான சூழ்­நிலை நல்ல முன்­னேற்­றம் இருக்­கும். உற்­பத்தி திறன் கூடும். வியா­பா­ரத்­தில் கடின உழைப்பு ஏற்ற லாபம் பெரு­கும். 

கல்­வி­யா­ளர்­கள், மாண­வர்­க­ளுக்கு கல்­வி­யில் நல்ல முன்­னேற்­றம் இருக்­கும். கலை, இலக்­கி­யம் மேன்மை பெறும். விளை­யாட்டு போட்­டி­க­ளில் வெற்றி கிட்­டும். விவ­சா­யி­க­ளுக்­குப்­ப­ணி­க­ளில் கடின உழைப்பு இருக்­கும். கொடுக்­கல் வாங்­க­லில் கவ­னம் தேவை. 

பெண்­க­ளுக்கு குடும்­பப்­ப­ணி­க­ளில் சிறப்பு கூடும். சுப­கா­ரிய ஈடு­பாடு மகிழ்ச்சி தரும். புதிய பொருள் சேர்க்கை மகிழ்ச்சி தரும். சிறு­சிறு தொல்­லை­கள் தேக ஆரோக்­யத்­தில் வரும். குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும்.

மீனம்

சுறு சுறுப்புடன் செயல்படும் மீனராசி அன்பர்களே...

இந்த வாரம் உங்­கள் பொருளா தார சூழ்­நி­லை­கள் முன்­­னே ற்­ற­மாக இருக்­கும். கொடுக்­கல் வாங்­க­லில் கவ­னம் தேவை.  தொழில் ரீதி­யான சூழ்­நி­லை­கள் முன்­னேற்­ற­மாக இருக்­கும்.  குடும்­பத்­தில்  தேவை­கள் பூர்த்­தி­யா­கும்.  பணவரவுகள் சிரமங்களைக் குறைக்கும். தொழி­ல­தி­பர்­கள், வியா­பா­ரி­க­ளுக்கு தொழில் ரீதி­யான சூழ்­நிலை முன்­னேற்­ற­மாக இருக்­கும்.  நிதி­நி­லைமை சீரா­கும்.  வியா­பா­ரத்­தில் லாப­க­ர­மான சூழ்­நிலை இருக்­கும்.  

கல்­வி­யா­ளர்­கள், மாண­வர்­க­ளுக்கு முன்­னேற்­ற­மாக இருக்­கும். கலை, இலக்­கி­யம் முன்­னேற்­ற­மாக இருக்­கும். விளை­யாட்டு போட்­டி­கள் வெற்­றி­யா­கும்.  விவ­சா­யி­க­ளுக்­குப் ­ப­ணி­க­ளில் கடின உழைப்பு இருக்­கும். தன­தான்ய விருத்தி உண்­டா­கும். கால்­நடை பரா­ம­ரிப்பு சிர­மங்­கள் இருக்­கும். 

குடும்ப பெண்­க­ளில் சிறப்பு கூடும். பணி­க­ளில் முன்­னேச்­ச­ரிக்கை தேவை. குடும்ப தேவை­கள் பூர்த்­தி­யா­கும். ஆன்மிக ஈடுபாடு நற்பலன் தரும்.