மாசி மாத ராசி பலன் (13-02-2021 to 13-03-2021)
மேஷம்

மாசி மாத ராசி பலன்கள்

13.2.2021 முதல் 13.3.2021 வரை

கணித்தவர்: மு. திருஞானம், சீர்காழி.

மேஷம்

மேஷ ராசி வாசகர்களே, இந்த மாசி மாதத்தில் உங்கள் ராசிக்கு மிக சாதக அதிர்ஷ்டமான, மிக உயர்வான, கிரக அமைப்புகள் சுழன்று கொண்டு இருக்கின்றன.

ராசிநாதன் முதல் வார இறுதியில் இரண்டாமிடத்தில் அமரப் போகிறார், இரண்டுக்குடைய கிரகமும், 6-க்குடையவரும் சேர்க்கை பெற இருக்கிற

மாதம். இதனால் உங்களது நினைப்புகள் அனைத்தும் நினைத்தது மாதிரியே மிக எளிதாக பூர்த்தியாகி விட இருக்கிறது. மாதம் முழுவதும் குடும்ப நிலைமை சந்தோஷத்தோடும் புதிய இனிமைகளோடும் நகர்ந்து கொண்டு இருக்கப் போகிறது. இல்லத்துக்குள் அநாவசிய கருத்து போட்டி, பனிப்போர் விஷயங்கள் தொடரப் போவதில்லை. பொருளாதார ரீதியாக என்னென்ன கஷ்டங்கள் இருக்கிறதோ, அதற்கெல்லாம் விடிவுகாலம் இந்த மாதத்தில்தான்.

ஆரோக்ய ரீதியான சச்சரவுகளுக்கும் நிம்மதியான புதிய தீர்வு கிடைத்துவிட இருக்கிறது. தொழில், வியாபார பட்ஜெட் விஷயங்கள், இம்மாத 11ம் தினத்திற்குப் பிறகு பெரிய லாப நிம்மதியை தந்துவிட இருக்கிறது. வெளிமாநில, வெளியூர், தொழில்கைகூடி விட இருக்கிறது. 

பெண்கள்: 

பரணியினரின் நீண்டகால உள்மன ஆசைகள் நிறைவேறி, மணவாழ்வு சம்பந்தப்பட்ட அத்தனை கவலைகளும் தீரப்போகிற மாதம்.

மாணவர்கள்:

கல்வி சம்பந்தப்பட்ட அத்தனை உள்மன கவலைகளுக்கும் ஒரேயடியாக 10ம் தினத்துக்குப் பிறகு தீர்வு ஏற்பட்டு விட இருக்கிறது.

விவசாயிகள்:

அஸ்வினி நட்சத்திரத்தினர் அடைந்த நஷ்டங்களும் விரயங்களும் எப்படியோ ஈடு கட்டப்படுகிற அதிர்ஷ்டகர வாய்ப்பு உருவாகி விடும்.

தொழிலதிபர்கள்:

8மாதங்களாக முயற்சித்து வரும் பெரிய பட்ஜெட் முதலீடு விஷயத்துக்கு இந்த மாதத்தில்தான் அரசு ரீதியான அனுகூலம் உண்டாகப் போகிறது.

உத்தியோகஸ்தர்கள்:

உத்தியோக இடத்தில் மிகக் கடுமையாக சந்தித்துக் கொண்டு வரும் அனைத்து சங்கடம், போட்டி, சகஊழியரின் இடையூறுகள் புதுவித நிம்மதி தீர்வு உண்டாக்கி விடும்.

அரசியல்வாதிகள்:

இம்மாத 14ம் தேதிக்குப் பிறகு கட்சி மேலிட ரீதியாக மிகப்பெரிய பொறுப்பு, பதவி ஒப்படைக்கப்பட  இருக்கிறது.

அனுகூல நட்சத்திரங்கள்:

ரோகிணி, திருவாதிரை, பூசம் , உத்திரம், அனுஷம், உத்திராடம், ரேவதி.

பணவரவு:

பிப்ரவரி.  13, 14, 16, 19, 20, 24, 26, 27.

மார்ச். 1, 4, 5, 7, 9, 10, 11.

பரிகாரம்:

இந்த மாதத்தில் வரும் செவ்வாய்தோறும் சிவபெருமானுக்கும், சுப்பிரமணியருக்கும் மாலை வேளையில் பிரார்த்தனை செய்து கொண்டு நவக்கிரக வலம் வரவும்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசி வாசகர்களே, இந்த மாசி மாதத்தில் உங்கள் ராசிக்கு மிகப்பெரிய சந்தோஷ உயர்வுகள் வெகு அற்புதமாக நடந்து கொண்டே இருக்கப் போகிறது. மாத தொடக்க நேரத்தில் ராசிக்கு பத்தில் சூரிய கிரகம் மிக வலுவான நிலைமையிலும், முதல் வார இறுதியில் ராசிநாதன் அவரோடு சேர்க்கையாகப் போவதும், தன அதிபதி பத்தாம் இடத்தில் வந்து அமரப் போவதும் உங்களுக்கான மிகப்பெரிய தெளிவு, நம்பிக்கை, தைரியம் போன்றவைகளை அள்ளிக் கொடுக்கிற அமைப்பு. இதனால் குடும்ப சுபிட்சம் உயரப் போகிறது.

காசு, பணம் விஷயத்திற்கு எவ்வித குறையும் ஏற்படப் போவதில்லை. ஆசைப்பட்ட விஷயங்கள் எந்தவித தடையுமின்றி நிறைவேறி விடும். கடன், கண்ணி விவகாரங்கள் இம்மாத 14ம் தேதிக்குப் பிறகு சுத்தமாக தீர்ந்துவிட இருக்கிறது. உத்தியோக இட சச்சரவும் சங்கடமும் சக ஊழியரின் தொல்லை, தொந்தரவு விமர்சனங்களும் ஒட்டு மொத்தமாக முடிவுக்கு வரப்போகிற மாதம். வாரிசுகள் சம்பந்தப்பட்ட கவலைகள் தீர இருக்கிற மாதம். அத்துடன் சுபகாரிய திருமண விஷயங்கள் திட்ட மிட்ட படியே நடந்து முடியப் போகிறது. புத்திர பாக்கிய கவலைகளுக்கு இந்த மாதம் பெரியதொரு அதிர்ஷ்டம் சந்தோஷத்தோடு ஏற்பட்டு விடும்.

புதிய சொத்துபத்து ஆபரணச் சேர்க்கைகள் நாலா வது வாரத்தில் கண்டிப்பாக உண்டு.

பெண்கள்:

கார்த்திகையினரின் அனைத்து கவலைகளும் தீரப்போகிற மாதம்.

மாணவர்கள்:

இதுவரை உயர்கல்வி ரீதியாக மனக்கவலை  இந்த மாதத்தோடு முடிவுக்கு வந்துவிடும்.

விவசாயிகள்: 

இந்த மாத பத்தாம் தினத்திற்குப் பிறகு விவசாய உற்பத்திரீதியாக ஆசைப்பட்டது அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

தொழிலதிபர்கள்:

முதலீடு போட்டுவிட்டு பெரிய அளவில் மனக்கஷ்டத்தோடு உலா வருபவர்களுக்கு இந்த மாதம்தான் நல்ல தீர்வு.

உத்தியோகஸ்தர்கள்-:

உத்தியோக இடத்தில் எவ்வளவு பெரிய குழப்பங்கள் இருந்தாலும் ஒட்டு மொத்தமாக தீர்ந்துவிடும்.

அரசியல்வாதிகள்:-

உயர் பதவி, கட்சி மேலிட ரீதியான அனைத்து விசேஷ அதிர்ஷ்டங்களும் ஒரே நேரத்தில் கிடைக்கப் போகிறது.

அனுகூல நட்சத்திரங்கள்: 

அஸ்வினி, பூசம் , பூரம், அஸ்தம், அனுஷம், மூலம், சதயம்.

பணவரவு:

பிப்ரவரி. 13, 16, 18, 22, 23, 26, 28,

மார்ச். 1, 2, 4, 7, 8, 10.

பரிகாரம்:

இம்மாத சனிக்கிழமைகளில் ஆதரவற்ற முதியோர் இல்லத்துக்கு உங்களால் இயன்ற உதவி செய்து, நவக்கிரக ராகுவையும் கேதுவையும் வழிபட்டுக் கொள்ளவும்.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசி வாசகர்களே, இந்த மாதத்தில் மிதுன ராசிக்கு மூன்றுக்குடைய கிரகமான சூரியன், ஒன்பதாம் இடத்திலும், ராசிநாதனின் சாதகமான ஓட்டமும் ஒன்றுகூடி இந்த மாதத்தை உங்களுக்கு அழகான நிம்மதி பாதையாக மாற்றி பல சங்கடங்களில் இருந்தும் வெளிவர வைக்கப் போகிறது. இருந்தாலும் எட்டாமிட சனிபகவானும், எட்டாமிட நீச குருவும் சற்றே உங்களது சிலபல விஷய காரியங்களில் புகுந்து கொண்டு தேவை யற்ற இடையூறுகளையும் தடைகளையும் ஏற்படுத்திக் கொண்டு இருப்பார்கள்தான். ஆனாலும் பெரிய பாதகம் ஏற்பட்டுவிடும் என்று சொல்வதற்கு இடமில்லை.

குடும்பம், சுற்றம், இல்லத்தார் வகையில் என்னென்ன விஷயங்கள் நடக்க வேண்டுமோ அதுவெல்லாம் இம்மாத முதல் வாரம் முடிந்த பிறகு நல்லபடியாக நடந்தேறப் போகிறது. ஆரோக்ய வகையில் சின்னச் சின்ன வைத்தியச் செலவுகள் செவ்வாய்க் கிரகத்தால் ஏற்படுவதற்கு சாத்தியமுண்டு.

உத்தியோகம், பணி, பொறுப்பு விஷயங்கள் மென்மையாக நகர்ந்து கொண்டிருக்கும். தொழில் வியாபார விஷயங்கள் நினைத்ததைத் தாண்டி லாபங்களை தாராளமாக கொடுத்துக் கொண்டுதான் இருக்கப் போகிறது.

திருவாதிரை நட்சத்திரக்காரர்களின் உள்மன கவலைகள் அனைத்துக்கும் மருந்து போட வந்திருக்கிற மாதம். மற்றபடி புதிய சொத்துபத்து வாங்குகிற எண்ணங்கள் இந்த மாத முடிவுக்குள் வெற்றி ஆகப் போகிறது. 12வது தினம் தொட்டு தொடர்ச்சியாக பெரிய பெரிய பணவரவுகள் காத்துள்ளன.

பெண்கள்: 

மிருகசீரிட நட்சத்திரக்காரர்களின் பல மாத மன சங்கடங்களுக்கு இந்த மாதத்தில்தான் அதிர்ஷ்ட மகிழ்ச்சியான தீர்வு.

மாணவர்கள்: 

கல்வி சம்பந்தமான அத்தனை உள்மன கவலைகளையும் தடைகளையும் தீர்க்க வந்திருக்கிறது இந்த மாதம்.

விவசாயிகள்:  

முதல் வாரம் முடிந்த பிறகு அரசு சம்பந்தமான அனுகூலம் நிவர்த்தி பெரியதொரு மகிழ்ச்சி காத்திருக்கிறது.

தொழிலதிபர்கள்:  

புதிய தொழில் கூட்டாளிகள் வந்து இணையப் போகிறார்கள்.

உத்தியோகஸ்தர்கள்: 

இம்மாத எட்டாம் தினம் கடந்த பிறகு ஊதிய உயர்வும் நீண்ட மாதங்களாக எதிர்பார்த்தது கிடைத்துவிடும்.

அரசியல்வாதிகள்: 

கட்சி மேலிட ரீதியான நன்மைகள், அனுகூலங்கள் பதவி சார்ந்த செய்திகள் வரப்போகின்றன.

அனுகூல நட்சத்திரங்கள்: 

பூசம், மகம், அஸ்தம், சுவாதி, அனுஷம், சதயம், ரேவதி.

பணவரவு: 

பிப்ரவரி. 13, 16, 18, 20, 23, 24, 26, 27,

மார்ச்.1, 2, 5, 7, 9, 10, 11.

பரிகாரம்: 

ஒரு முறை குலதெய்வ கோயிலுக்கு சென்று வரவும்.

கடகம்

கடகம்

 கடக ராசி வாசகர்களே, இந்த மாசி மாதம் துவங்கி உங்களது ராசிக்கு செவ்வாய் பகவான் பத்தாம் இடத்

தில் நின்று கொண்டு இருப்பதும் அதாவது முதல் வாரம் முடியும் வரை, அத்துடன் ராகுபகவான் மிக வலிமை யான அமைப்பில் பதினோராம் இடத்தில் நிற்பதும் மிகமிக அற்புதமான சாதக கிரக அமைப்புகள். இதனை வைத்து இந்த மாதம் நீங்கள் எதை வேண்டுமானாலும் எந்தவித குறையும் இன்றி சாதித்துக் கொள்ளலாம். அதோடு 2--க்குடைய கிரகம் எட்டாம் இடத்தில் நிற்பது மட்டும் அதாவது சூரியன், உங்களது ஆரோக்யத்தில் லேசாக பிணக்குகளை கொடுத்துப் பார்ப்பார். ஆனாலும் எந்த பாதகமும் இல்லை. அதேநேரம் கண்களில் மட்டும் ஏதாவது சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படலாம்.

இது அவரவர் வயது சார்ந்த விஷயமாகக் கூட இருக்கலாம். மற்றபடி குடும்ப இனிமைகளுக்கு இந்த மாதத்தில் எந்தவித குறையுமில்லை. ராசிக்கு ஏழில் பத்தாம் தேதி வரை நான்கு கிரக கூட்டணியும், குருபகவானின் வலிமையும், உங்களை மிகப்பெரிய வளர்ச்சிக்கும், சந்தோஷத்திற்கும், அதிர்ஷ்டத்துக்கும் ஆளாகக்கூடிய மிகப்பெரிய அதிர்ஷ்ட அமைப்பு. மேலும் பொருளாதார ரீதியான சங்கடங்கள் அனைத் துக்கும் மாதம் துவங்கி நாலாவது தினம் முடிந்த பிறகு ஏகப்பட்ட சந்தோஷ திருப்பு முனைகள் ஏற்பட்டு பணரீதியான முன்னேற்றங்கள் உண்டு.

பூசம் நட்சத்திரக்காரர்களின் வாழ்க்கை மிகப்பெரிய இனிமை திருப்புமுனையை சந்திக்கிற மாதம்.

ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் தாங்கள் விருப்பப்பட்டது அனைத்தையும் மிக மிக எளிதாக அடைய இருக்கிறார்கள்.

பெண்கள்:

இரண்டு, மூன்று ஆண்டுகளாக ஆசைப்பட்ட பொருள் சார்ந்த கவலைகளுக்கு இந்த மாதம் பெரியதொரு அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறது.

மாணவர்கள்:

கல்வி சார்ந்த எப்பேர்ப்பட்ட சாத்தியமில்லாத விஷயத்துக்கும் அருமையான தீர்வு கிடைக்கப் போகிற மாதம்.

விவசாயிகள்:

திடீரென்று அரசாங்க ரீதியான மாபெரும் அனுகூலம் கிடைத்து இழப்புகளுக்கு தீர்வு உண்டு.

தொழிலதிபர்கள்:

ஏகப்பட்ட வாய்ப்புகளும், புதிய தொழில் துவக்கத்துக்கான சாதக அதிர்ஷ்டங்களும் கிடைக்கப் போகிற மாதம்.

உத்தியோகஸ்தர்கள்:

மகிழ்ச்சிகரமான செய்தி இரண்டாவது வாரம் கிடைக்கப் போகிறது.

அரசியல்வாதிகள்:

பொறுமையாக காத்திருந்தால் மிகப்பெரிய அதிர்ஷ்ட நிம்மதி உண்டு.

அனுகூல நட்சத்திரங்கள்:

மகம், அஸ்தம், சித்திரை, விசாகம், திருவோணம், சதயம், பரணி.

பணவரவு: பிப்ரவரி. 14, 16, 18, 20, 23, 25, 26.

மார்ச். 1, 3 , 6, 9, 10, 12.

பரிகாரம்:

வெள்ளிதோறும் மகாலட்சுமி வழிபடவும்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசி வாசகர்களே, இந்த மாசி மாதத்தில் உங்கள் ராசிக்கு சூரிய கிரகமான ராசிநாதன் கேந்திரமாக சனிபகவானின் வீட்டில் அமர்ந்து இருக்கிறார். இந்த அமைப்பு மிகச் சரியான யோக அமைப்பு. அதாவது ஒரு பாவி கிரகம் மற்றொரு பாவியின் வீட்டில் அமர்வது மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட். அந்த வகையில் இம்மாத முடிவுக்குள் நீங்கள் 80 சதவீத வளர்ச்சியை,

நிம்மதியை, சந்தோஷத்தை கண்டிப்பாக அடைய முடியும். இல்லத்துக்கென புதுப்புது உயர்வுகள் நிறையவே ஏற்படப் போகிறது. குடும்ப ரீதியான நீடித்த சச்சரவுகள் எல்லாம் முதல் வார முடிவுக் குள்ளேயே பறந்துவிடும். ஆரோக்ய தடுமாற்றங்க ளுக்கு விடிவு உண்டு. மணவாழ்க்கை ரீதியான பிணக்கு கள் பிரிவுகள் இருப்பின் இம்மாதம் துவங்கி 9வது தினம் முடிவதற்குள் நல்லவித முடிவுக்கு வந்துவிடும். உத்தியோகம், பணி பொறுப்பில் கிடைக்க வேண்டிய மேன்மைகளில் உள்ள தடைகள் 90 சதவீதம் தீர்ந்து சந்தோஷம் தரப்போகிறது.

சுபகாரிய திருமண விஷய இழுபறிகள் இம்மாத 3வது வாரத்துக்குள் சரியாகி திருமண தேதியை குறித்து விடலாம். இந்த ராசி உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு மிகப்பெரிய தொகையொன்று கிடைக்கிற மாதம். மகம் நட்சத்திரக்காரர்களுக்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு இனிமேல்தான் இனிமைகள் ஆரம்பம்.

இறுதி வாரத்தில் இந்த ராசி இளம் தம்பதியர்களுக்கு புத்திர பாக்கிய மகிழ்ச்சி ஏற்பட்டு விடும். இம்மாத ஞாயிறு, புதன், திங்கட்கிழமைகளிலும் 4, 7, 9, 11, 15, 16வது நாட்களிலும் திருப்புமுனை உயர்வு சந்தோஷம் காத்துள்ள மாதம்.

பெண்கள்:

பூரம் மற்றும் உத்திரம் நட்சத்திரக்காரர்களின் மணவாழ்வு சங்கடம், பிரிவு அனைத்தும் விலகி சுபிட்சம்.

மாணவர்கள்:

கல்வி சம்பந்த எதிர்பார்ப்புகளில் இனி எந்தவொரு தடையும், சங்கடமும் ஏற்படாது.

விவசாயிகள்:

ஒரு பெரிய ஆதரவு, உறவுகள் ரீதியாக உங்கள் உற்பத்தி சார்ந்த விஷயத்துக்கு கிடைக்கும்.

தொழிலதிபர்கள்:

வெளி மாநில, அயல்தேச தொழில் தொடக்கங்கள் சாதகமாக முடியும்.

உத்தியோகஸ்தர்கள்:

இம்மாத 12ம் தினத்துக்குப் பிறகு பதவி, ஊதிய உயர்வு நிச்சயம் காத்துள்ளது.

அரசியல்வாதிகள்:

21வது தினம் வரை பொறுமை தேவை. அதன் பிறகு கட்சி மேலிடம் தானாக அழைத்து உயர்வு.

அனுகூல நட்சத்திரங்கள்:

உத்திரம், சித்தரை, அனுஷம், மூலம், திருவோணம், பரணி, ரோகிணி.

பணவரவு: பிப். 13, 14, 18, 19, 20, 21, 24, 27.

      மார்ச். 1, 3, 6, 8, 9, 11, 12.

பரிகாரம்:

நவக்கிரக கேதுவுக்கும், புதன் கிரகத்துக்கும் பிரதி செவ்வாய்க் கிழமைகளில் பிரீதி பரிகாரம் செய்து கொண்டு காளி தேவியை வழிபட்டுக் கொண்டு இருக்கவும்.

கன்னி

கன்னி

கன்னி ராசி வாசகர்களே, இந்த மாதம் உங்களது ராசிக்கு பெரும்பாலான கிரகங்கள் படு அட்டகாசமான வகையில் அதிர்ஷ்ட-கரமாகவும், அதேநேரம் எல்லா வகையிலும் சாதக சுழற்சியோடும், சுழன்று கொண்டி ருப்பதால் இந்த மாதம் ஏகப்பட்ட இனிமை உயர்வு களை சர்வ சாதாரணமாக அடைந்துவிட இருக்கிறீர்கள். குறிப்பாக சித்திரை மற்றும் அஸ்தம் நட்சத்திரக்கா ரர்களுக்கு மாதம் துவங்கி 19 தினங்கள் முடிவதற்குள் எதிர்பாராத வகையில் பலவித நன்மை உயர்வு, அதிர்ஷ்டகர முன்னேற்றம் பெரிய அளவில் காத்திருக்கிறது. அதேநேரம் உத்திரம் நட்சத்திரக் காரர்களுக்கு முதல் வாரம் முடிந்த பிறகுதான் எல்லா வகையிலும் மிகப்பெரிய திருப்தி சந்தோஷங்கள் காத்திருக்கிறது.

குடும்ப வகையில் இனிமேல் எந்தவித சச்சரவையும், பின்னடைவையும், சங்கடத்தையும் சந்திக்க வாய்ப்பு இல்லாத மாதம். ஆரோக்கியம் நல்லபடியாகவே நீடிக்கும். பொருளாதார நிலைமை நினைத்தபடியே உயர்ந்து தேவைப்படும் பண வரவு களை தாராளமாக கொடுக்கப் போகிற மாதமும் இதுவே.

சுபகாரிய திருமண விஷயம் முயற்சிகள் எளிதாக பலிதமாகும். புத்திர பாக்கிய ஏக்கத்துக்கு இம்மாத எட்டாம் தினத்திற்குப் பிறகு சந்தோஷ செய்தி காத்திருக்கிறது. 

இம்மாத சனி, செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் அற்புதமான சந்தோஷ, திருப்திகள் கிடைக்கப் போகிற மாதம்.

இதுவல்லாமல் இம்மாத 3, 5, 8, 11, 15வது நாட்களில் எதிர்பாராத சிறப்பு முன்னேற்ற வளர்ச்சி அதிர்ஷ்டங்கள் அதிரடியாக கைகூடப் போகிறது.

பெண்கள்:

மணவாழ்க்கையில்  சந்தோஷம்.

மாணவர்கள்:

உயர் கல்விக்கான அடித்தளம் அமைந்துவிடும்.

விவசாயிகள்:

பழைய, பூர்வீக, நிலபுலன் சொத்துகளை கிரையம் ஆக்கிவிட்டு, புதிய உற்பத்தி விஷயத்தில் இறங்கப் போகிறீர்கள்.

தொழிலதிபர்கள்:

பெரிய பட்ஜெட் முயற்சிகளும் கூட்டணி சம்பந்த தொழில் முயற்சிகளும் அயலுார் திட்டங்களும் அதிர்ஷ்டகரமாக கை கூடிவிடும்.

உத்தியோகஸ்தர்கள்:

இந்த மாதம் முழுவதும் புது சந்தோஷம், பணி, பொறுப்பு, பதவி வகையில் எதிர்பாராமல் ஏற்படப் போகிறது.

அரசியல்வாதிகள்: 

கட்சி மேலிட ரீதியாக எதிர்பாராத  செய்தி உயர்வுடன் வரப் போகிறது.

அனுகூல நட்சத்திரங்கள்:

சித்திரை, விசாகம், மூலம், திருவோணம், சதயம், பரணி.

பணவரவு:

பிப்ரவரி. 13, 14, 16 18, 20, 22, 25, 26, 28.

மார்ச். 1, 2, 5, 8, 10, 12.

பரிகாரம்:

தொடர்ந்து இம்மாத வெள்ளிக்கிழமைதோறும் ஸ்ரீ விநாயகருக்கு அபிஷேக, ஆராதனை செய்து வழிபட்டு, நவக்கிரக சுக்கிர பகவானை வழிபட்டுக் கொள்ளவும்.

துலாம்

துலாம்

 துலாம் ராசி வாசகர்களே, இம்மாதம் உங்கள் ராசிக்கு நவக்கிரகங்களில் குருபகவான், சந்திர கிரகம், ராசிநாதனான சுக்கிரன் இந்த 3 கிரகங்களும் மிகமிக சாதக வலிமைகளுடன் மிகப்பெரிய அதிர்ஷ்டத்துடன் சுழலப் போவதால் எந்தவொரு முயற்சி என்றாலும் அதில் 100 சதவீத வெற்றியும் சந்தோஷமும் காத்தி ருக்கிறது. மன அமைதி அதிகரிக்கப் போகிறது. குடும்பக் கஷ்டங்கள் விலகப் போகிறது. குடும்பத்தா ருக்குள் ஒற்றுமை அதிகரிக்கப் போகிறது.

பொருளாதார ரீதியாக எந்த மாதிரியான நெருக்கடி இருந்தாலும் அதுவெல்லாம் விஷயங்கள் மாற்றம் பெற்று சுபிட்சமாக மாறப்போகிறது. சரள வரவுகள் உண்டு. உத்தியோகம், பணி சார்ந்த விஷயங்கள் இம்மாத 13ம் தினத்திற்குப் பிறகு ஏகப்பட்ட மகிழ்ச்சி களை கொடுக்கப் போகிறது. திடீர் பதவியும் கிடைப்ப தற்கான அதிர்ஷ்டம் உள்ள மாதம். சுபகாரிய திருமண விஷயங்கள் நினைத்தபடியே கைகொடுக்கிற மாதம்.

வாரிசு பாக்கிய மனக்குறைகளுக்கு இந்த மாதம்தான் உயர்வான தீர்வு காத்திருக்கிறது. இந்த ராசி இளம் சித்திரை நட்சத்திர இருபாலருக்கும் திடீர் திருமணம் கைகூடப் போகிறது. நாலாவது வாரத்தில் மட்டும் வயது கடந்த விசாக நட்சத்திரக்காரர்கள் சற்றே ஆரோக்ய கவனம் வைத்துக் கொண்டால் போது மானது.

மற்றபடி இம்மாத ஞாயிறு, செவ்வாய், புதன்கிழமைகளில் எல்லாம் மிகப்பெரிய சுபிட்சம் அதிஷ்டம், பணவரவு எதிர்காலத்திற்கான முன்னேற்றம் உண்டாகப் போகிறது. திருப்பு முனையை உண்டாக்கப் போகிற மாதம்.

பெண்கள்:

சுவாதியினருக்கு குடும்ப ரீதியாக அனைத்து சந்தோஷ மகிழ்ச்சிகளும் தானாக ஏற்படுகிற மாதம்.

மாணவர்கள்:

உயர் கல்வி சார்பாக குடும்பத்தாரின் ஒத்துழைப்பு எளிதாக கிட்டும்.

விவசாயிகள்:

உற்பத்தி ரீதியாக சந்தித்து வரும் பிரச்னைகளுக்கு விடிவுகாலம் உண்டாகிற மாதம்.

தொழிலதிபர்கள்:

புதிய தொழில் வியாபார  துவக்கத்துக்கு இந்த மாதத்தில் சரியான அதிர்ஷ்டமும் வாய்ப்பும் ஏகபோகமாக உண்டு.

உத்தியோகஸ்தர்கள்:

சக ஊழியர்களால் தவித்து வரும், பிரச்னைகளுக்கு இந்த மாதத்தில்தான் முடிவு ஏற்படப் போகிறது.

அரசியல்வாதிகள்:

சக கட்சி ரீதியாக எந்த உயர்வை எதிர்பார்த்து இருக்கிறீர்களோ அதற்கு 3வது வாரம் தீர்வும் மகிழ்ச்சியும் காத்துள்ளது.

அனுகூல நட்சத்திரங்கள்:

சுவாதி, அனுஷம், மூலம், அவிட்டம், ரேவதி, பரணி, ரோகிணி.

பணவரவு:

பிப்ரவரி. 13, 15, 17, 18, 22, 26, 27, 28.

மார்ச்.1, 3, 4, 6, 8, 9, 10.

பரிகாரம்:

ஞாயிறுதோறும் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வித்து வழிபடவும்.

விருச்சிகம்

விருச்சிகம்

 விருச்சிக ராசி வாசகர்களே, இந்த மாசி மாதம் உங்களது மிக மிக முக்கியமான அவசியப் பணிகள் அனைத்தும் நல்லபடியாக நிறைவேறுவதற்கு உண்டான அத்தனை கிரக சாதகங்களும் நிறையவே காத்திருக்கிற மாதம். அத்துடன் இந்த மாதம் துவங்கி 17வது தினம் முடிவதற்குள் ஏகப்பட்ட சந்தோஷம் குதுாகலங்கள் ஏற்படப் போகின்றன. அதோடு என்னென்ன சவுகரிய குறைவுகள் ஏற்பட்டுக் கொண்டி ருக்கிறதோ அத்தனைக்கும் இந்த மாதத்தில்தான் நல்லபடியான சந்தோஷ முடிவு ஏற்படப் போகிறது. ஆரோக்ய ரீதியாக எந்த வகை தொந்தரவாக இருந்தாலும் இந்த மாத முதல் வாரத்திலேயே தீர்ந்து விட இருக்கிறது.

மேலும் குடும்பத்துக்குள் நீடித்து வரும் அநாவசியக் கருத்து, சச்சரவு, குழப்பங்கள் ஒன்பதாவது தினத்துக்குள் முடிவுக்கு வரப்போகிறது. அத்துடன் பொருளாதார ரீதியாக எவ்வளவு பெரிய சிரமமாக இருந்தாலும் இம்மாத 6வது தினம் முடிவதற்குள் மிகப்பெரிய அதிர்ஷ்டமும் நிவர்த்தியும் கிடைக்கப் போகிறது. உத்தியோகம், பணி, பொறுப்பு வகையில் இனிமேல் எந்தவொரு சிரமமும் ஏற்படாத மாதம். தொழில், வியாபார நிர்வாக வகைகளும் சிறப்பான மேன்மையைக் கொடுக்கப் போகிற மாதம்.

இந்த நட்சத்திர இளம் இருபாலருக்கும் முதல் வாரத்திலேயே திருமணக் கனவுகள் நிறைவேறப் போகின்றன.

விசாக நட்சத்திர அரசுப் பணி பதவியில் இருப்பவர்கள் மேலும் ஒரு புதிய பதவியை, ஊதிய மேன்மையை அடையப் போகிற மாதமும் இதுவே. மாதம் முழுவதும் தனுசு மற்றும் கடக ராசி அன்பர்கள் உதவிகரமாக நிற்கப் போகிறார்கள்.

பெண்கள்: 

மிகப்பெரிய நிம்மதி இம்மாத 11வது தினத்திலிருந்து அதிர்ஷ்டத்துடன் கிடைத்து பெரிய மகிழ்ச்சி.

மாணவர்கள்: 

கல்வியில் புதிய உற்சாகம் ஏற்பட்டு உங்களது தகுதியை மேலும் உயர்த்திக் கொள்வீர்கள்.

விவசாயிகள்: 

லாபத்தைக் கொடுக்கும் மாதம்.

உத்தியோகஸ்தர்கள்: 

உத்தியோக வகையில் அனுபவித்து வரும் மாபெரும் சங்கடத்துக்கு 3வது வாரத்தில் தீர்வு.

தொழிலதிபர்கள்: 

முதல் வாரத்திலேயே சூப்பரான முன்னேற்றமும் சந்தோஷமும் உறுதியாகப் போகிறது.

அரசியல்வாதிகள்: 

சக கட்சி ரீதியாக எதிர்பார்த்து இருக்கிற முன்னேற்றங்களும் கண்டிப்பாக உண்டு.

அனுகூல நட்சத்திரங்கள்: 

கேட்டை, பூராடம், சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி, ரோகிணி, பூசம்.

பணவரவு-: 

பிப்ரவரி. 15, 16, 18, 19, 21, 22, 26, 28. 

மார்ச். 1, 3, 4, 6, 8, 10, 12.

பரிகாரம்: 

செவ்வாய்க் கிழமை குல தெய்வத்துக்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டுக் கொள்ளவும்.

தனுசு

தனுசு

தனுசு ராசி வாசகர்களே, இந்த மாசி மாதம் துவங்கி மிகச்சரியாக 19வது தினம் முடிவதற்குள் நீங்கள் மிகப்பெரிய மகிழ்ச்சிக்கும் சந்தோஷத்திற்கும் மாறாகப் போகிறீர்கள். எந்த காரியத்தை தொட்டாலும், இனிமையான வளர்ச்சியை சந்திக்கப் போகிறீர்கள். ஆசைப்பட்டது உடனடியாக ராசிக்கு மூன்றில் சூரிய கிரகம் மிகப்பெரிய அதிர்ஷ்டத்துடன்   சுழன்று கொண்டு இருப்பதால் நீங்கள் என்ன திட்டம் போட்டாலும் தோல்வி என்பதை சந்திக்கப் போவது இல்லை.

இந்த மாதத்தில் மேலும் குடும்ப சவுகரியம் அதிகரிக்கும். ஆரோக்யப் பிரச்னைகள் விலகும், கடன் கண்ணி விவகாரங்கள் நல்லபடியாக தீரும், கோர்ட்டு, வழக்கு பஞ்சாயத்துக்கள் முடிவுக்கு வரும், சொத்துபத்து விஷயங்கள் சாதகத்தை தரும்.

புதிய சொத்து வாங்குவது குறித்து முடிவெடுத்த விஷயம் அதிர்ஷ்டத்தை தரப்போகிறது. சுபகாரிய சம்பந்தமான விஷயங்கள் சட்டென்று முடியப் போகிறது. 

புதிய அரசுப் பணி தேடிக் கொண்டு இருக்கிற இந்த ராசிக்காரர்கள் அனைவருக்கும் 20ம் நாள் முடிவதற்குள் நிச்சயம் எந்தவிதத்திலோ அதிர்ஷ்டம் கைகூட இருக்கிறது. அதிக அறிமுகம் இல்லாத நெருக்கமான நபர்களால் ஆதாய ஒத்துழைப்பு சிபாரி சுகள் கிடைக்கப் போகிற மாதம். திருமண சுபகாரிய விஷயங்கள் எதிர்பார்த்தபடியே கைகூடும்.

எட்டு மாதங்களாக முன்னேற்றம் கருதி போராடி வருகிற முக்கியமான விஷயம் ஒன்று இந்த மாதத்தில்தான் மிகப்பெரிய அதிர்ஷ்டத்துடன் கைகூடப் போகிறது.

மாதம் முழுவதும் கும்பம் மற்றும் மிதுன ராசிக்காரர்கள் மூலம் மிகப்பெரிய சவுகரியங்கள், மேன்மைகள் கிடைக்கப் போகிறது. அத்துடன் இம்மாத வெள்ளி, திங்கள் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் எல்லாம் எதிர்பாராத ஆச்சரிய உயர்வுகள் கிடைக்கப் போகிறது. 

பெண்கள்:

இனிமேல் எந்த மனக்குறையும் ஏற்படாத மகிழ்ச்சிகள் தொடரப் போகும் மாதம்.

மாணவர்கள்:

கல்வி சார்பாக வைத்துள்ள அனைத்து எதிர்கால திட்டங்களுக்கும் அடித்தளம் ஏற்படும்.

விவசாயிகள்:

இனிமேல் உற்பத்தி சார்பாக எந்த வகையிலும் அதிகப்படியாக போராட வேண்டிய அவசியம் இல்லை.

தொழிலதிபர்கள்:

பெரிய பட்ஜெட் ரீதியாக போட்டு வைத்துள்ள அத்தனை திட்டங்களும் அபரிமிதமாக பூர்த்தியாகும் .

உத்தியோகஸ்தர்கள்:

முதல் வாரத்திலேயே மிகப்பெரிய உயர்வு செய்தி ஒன்று பதவி, பொறுப்பு ரீதியாக கிடைக்கப் போகிறது.

அரசியல்வாதிகள்:

கூட்டணிக் கட்சிகள் உங்களை பெரிய அளவில் ஆதரித்து சிறப்பிக்கப் போகும் அற்புதமான மாதம்.

அனுகூல நட்சத்திரங்கள்:

உத்திராடம், திருவோணம், பூரட்டாதி, பரணி, திருவாதிரை, பூசம், உத்திரம்.

பணவரவு:

பிப்ரவரி. 13, 15, 16, 17, 20, 21, 23, 25, 28.

மார்ச். 1, 2, 4, 6, 8, 9, 11, 13.

பரிகாரம்: 

இம்மாதம் உங்களது ஜென்ம நட்சத்திரம் வரும் நாள் தொட்டு தொடர்ந்து 11 நாட்கள் நவக்கிரகங்களை வலம் வந்து வழிபட்ட பின் 12வது தினம் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து  நீல நிற வஸ்திரம் சாற்றி வழிபட்டுக் கொள்ளவும்.

மகரம்

மகரம்

 மகர ராசி வாசகர்களே, இந்த மாசி மாதத்தில் உங்கள் ராசிக்கு 8-க்குடைய கிரகமான சூரியன் இரண்டாமிடத்தில் நிற்பதும், ராசிநாதன் மற்றும் குருபகவான்  ஜென்ம   ராசியில் நின்று கொண்டிருப்பதும்கொஞ்சம் தேவையற்ற தாமதங்க ளையும், சின்னச் சின்ன சஞ்சலங்களையும் தரக்கூடிய அமைப்பு ஓரளவு உண்டுதான் என்றாலும், நீங்களே எதிர்பாராத தருணத்தில் சிலவித பெரிய நன்மைகளும் நடக்கப் போகிற மாதம். அதோடு சமீப மாதங்களாக அடைந்து வருகிற இடையூறுகளுக்கு இந்த மாதத்தில் சட்டென்று எந்த ரூபத்திலோ விடிவுகாலமும் ஏற்படுவதற்கு அதிக அளவில் அதிர்ஷ்டம் இருக்கிறது.

தொட்டது துலங்கும், கைவிட்டுப் போன விஷயங்கள் மீண்டும் நல்லபடியாக நிறைவேறப் போகிறது. பொருளாதார ரீதியான சங்கடங்கள் எல்லாம் 65 சதவீதம் விலகி விடும். கடன் பிரச்னைகளுக்கு மாற்று ஏற்பாடு செய்து ஒருவித நிம்மதி முடிவுக்கு கொண்டு வந்து விடுவீர்கள். ஆரோக்யம் நல்லபடியாக இம்மாத 23ம் நாள் வரை இருக்கப் போகிறது.

இந்த ராசி அவிட்ட நட்சத்திரக்காரர்களுக்கு திடீரென்று மண், மனை, கட்டட சேர்க்கைகளும் பொன், பொருள், ஆபரண சேர்க்கைகளும், வாகன சந்தோஷங்களும் ஏற்படுகிற மாதம்.

உத்திராட நட்சத்தி ரக்காரர்கள் புதிய ஜாமின் சிபாரிசு விஷயங்களில் மற்றவர்களுக்காக மும்முரம் காட்டக் கூடாது. இளம் இருபால் திருவோண நட்சத்திரக்காரர்களுக்கு திடீர் திருமணம் கைகூடுகிற மாதம். உத்தியோக தேடுதல்கள் அதிர்ஷ்டத்தைக் கொடுத்து பணியில் அமர வைக்கப் போகிறது இவர்களுக்கு.

மற்றபடி இம்மாத வியாழன், சனி மற்றும் புதன்கிழமைகளில் பெரியதொரு விசேஷ அதிர்ஷ்டம் அனைவருக்கும் உண்டு.

மேலும் இம்மாத 1, 4, 6, 7, 16, 22, 25வது நாட்களில் எல்லாம் நினைத்த தைத் தாண்டிய சந்தோஷம் புதிய அதிர்ஷ்டம் விஐபி சந்திப்பு கைகூடாத காரியத்துக்கு வெற்றி என்று இந்த மாதம் திருப்பு முனைகளை தரப்போகிறது.

பெண்கள்:

திருவோணம், அவிட்ட நட்சத்திரக்காரர்களுக்கு மிகப்பெரிய சுபிட்சமான அதிர்ஷ்டங்கள் தொடரப் போகும் மாதம்.

மாணவர்கள்:

கல்வி சம்பந்தப்பட்ட அத்தனை மனக்கவலைகளுக்கும் புதிய ரூபத்தில் தீர்வு.

விவசாயிகள்:

உற்பத்தி ரீதியாக நிலபுலன் வகையில் ஆசைப்பட்டதும் நிறைவேறப் போகிற மாதம்.

தொழிலதிபர்கள்:

பெரிய பட்ஜெட் விஷயங்கள் சார்பாக ஏற்பட்டிருக்கிற அரசாங்க ரீதியான கெடுபிடிகள் விலகப் போகிற மாதம்.

உத்தியோகஸ்தர்கள்:

முதல் வாரம் முடிந்த பின்பு பதவி ரீதியான புதிய சந்தோஷம் காத்திருக்கிறது.

அரசியல்வாதிகள்:

இந்த ராசி 42 வயது முதல் 49 வயதுக்குள்  இருப்பவர்களுக்கு கட்சி ரீதியான அனைத்துஉயர்வுகளும் பதவியும் உண்டு.

அனுகூல நட்சத்திரங்கள்:

அவிட்டம், சதயம், ரேவதி, அஸ்வினி, ரோகிணி, பூசம்.

பணவரவு:

பிப்ரவரி.13, 16, 17, 18, 22, 23, 25, 27.

மார்ச்.1, 3, 4, 7, 9, 11, 13.

பரிகாரம்:

இம்மாத புதன் மற்றும் வெள்ளிக் கிழமைதோறும் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபடவும்.

கும்பம்

கும்பம்

 கும்ப ராசி வாசகர்களே,  மாதம் துவங்கியதிலிருந்து மிகச் சரியாக 21வது தினம் முடிவதற்குள் உங்களது விருப்பங்கள்  என்னென்னவோ அத்தனையும் 85 சதவீதம் முடிவுக்கும் சந்தோஷத்திற்கும், வெற்றி கரமான நிம்மதிக்கும் வரப்போகிற விசேஷ அதிர்ஷ்ட மாதம். அத்துடன் இல்லத்துக்குள் என்னென்ன கெடு பிடியும் தேவையற்ற சச்சரவு, கருத்து மோதல்களும் நீடித்து வருகிறதோ அதற்கெல்லாம் நிம்மதியான சுபிட்சமான முடிவு ஏற்பட்டு ஒற்றுமையை பலப்படுத்தப் போகிற மாதம். ஆரோக்யம் நல்லபடியாக இருக்கும்.

உத்தியோகம் பணி விஷயங்களில் இரண்டாவது வார முடிவுக்குள் மகிழ்ச்சிகரமான ஏற்றம் ஒன்று ஏற்படப் போகிறது. தொழிலில், நிர்வாகத்தில் வியா பாரத்தில் எவ்வித பின்னடைவுகளும் ஏற்படாத மாதம்.

சுபகாரிய திருமண விஷயம் எந்தவிதத்திலும் விடுமுறையை தராத மாதம். அதோடு பூரட்டாதி நட்சத்திரக்காரர்களின் ஒன்றரை ஆண்டு மனக்கவலைகள் எல்லாம் முதல் வாரத்திலேயே நல்லவிதமான முடிவு வரப்போகிற மாதம்.

அவிட்ட நட்சத்தி ரக்காரர்கள் புதிய  சொகுசு வாகனத்திற்கு அதிபதியாக போகிறார்கள். சதயத்திற்கு இம்மாத 13-வது தினத்திலிருந்து பல ரூபத்திலும் பெரிய அதிர்ஷ்டங்கள் வாய்ப்புகள் கிடைக்கப் போகிற மாதம்.

அவிட்ட நட்சத்திர இளம் தம்பதிகளுக்கு புத்திர பாக்கிய மனக்குறை நாலாவது வாரத்தில் தீர்ந்து பெரிய மகிழ்ச்சியைக் கொடுக்கப் போகிறது.  

இம்மாத திங்கள், வெள்ளி, மற்றும் செவ்வாய்க்கிழமை அமோகமான சந்தோஷத் தையும் பொருளாதார வரவையும் கொடுக்கப் போகிறது. அத்துடன் இம்மாத 2, 6, 7, 9, 20, 24வது நாட்கள் உங்களை அதிர்ஷ்டத்தின் உச்சத்துக்கு அழைத்துச் செல்கிற மாதம்.

பெண்கள்:

இந்த மாதம்தான் மிகப்பெரிய இனிமை அதிர்ஷ்ட சுபிட்ச மாதம் அனைத்துக்குமே.

மாணவர்கள்:

மூத்த சகோதரர்களால் உங்களது கல்வி விருப்பத்துக்கு மிகப்பெரிய ஆதரவும் ஒத்துழைப்பும் உண்டு.

விவசாயிகள்:

எந்த புது தொந்தரவையும் உற்பத்தி ரீதியான தடங்கல்களையும் இனி நீங்கள் சந்திக்கப் போவது கிடையாது.

தொழிலதிபர்கள்:

உங்களுடன் இணைந்து பெரிய விஐபிகள் செயல்படுவதற்கு தயாராக இருக்கின்றனர்.

உத்தியோகஸ்தர்கள்:

முதல் வார இறுதிநாட்களில் உத்தியோக ரீதியாக பெரியதொரு நற்செய்தி பதவி, ஊதிய ரீதியாக வரப்போகிறது.

அரசியல்வாதிகள்:

இம்மாதம் துவங்கி 14வது நாள் வரை அமைதியாக இருக்கணும். அதன் பின்பு தானாக அதிர்ஷ்டம் அழைக்கப் போகிறது.

அனுகூல நட்சத்திரங்கள்:

ரேவதி, அஸ்வினி, ரோகிணி, திருவாதிரை, மகம், சுவாதி.

பணம் வரவு:

பிப்ரவரி.14, 15, 16, 19, 21, 23, 26, 28.

மார்ச்.1, 2, 5, 6, 8, 11, 13.

பரிகாரம்: 

செவ்வாய்க்கிழமை எமகண்ட வேளையில் ஸ்ரீ காளிதேவிக்கு அபிஷேகம் செய்து வரவும்.

மீனம்

மீனம்

 மீன ராசி வாசகர்களே, இந்த மாசி மாதம் உங்கள் ராசிக்கு ஆச்சரியப்படுகிற மிக மிக பலவித வளர்ச்சிகளையும் அதிர்ஷ்டங்களையும் சுப விரயங்களையும் ஏற்படுத்தி உங்களுக்கான நிம்மதி திருப்பு முனையை கொடுக்கப் போகிற உயர்வான மாதம். ஆசைகள் அனைத்தும் நல்லபடியாக நிறைவேறப் போகிறது.

ஆரோக்யக் குறைவு ஏற்பட வாய்ப்பு இல்லை. இல்லத்துக்குள் அனைத்து விதத்திலும் இனிமையும் மகிழ்ச்சியும் இரட்டிப்பாக கரைபுரள போகிறது. பொருளாதார ரீதியாக புதியதொரு வளர்ச்சியும் இரட்டிப்பு வருவாயும் கிடைக்கப் போகிற மாதம்.

குறிப்பாக உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களின் 8 மாத போராட்டம் ஓயப் போகிற மாதம். இனிமேல் இவர்களது வாழ்வில் ஏக சுபிட்சங்கள் தொடர்ந்து ஏற்படப் போகிறது. மற்றபடி இந்த ராசிக்கு, இந்த மாத 3வது வார 3வது நாளுக்குள் ஏகப்பட்ட வளர்ச்சிகளும் இனிமைகளும் பணம், காசு விஷயம் வளர்ச்சிகளும் ஏற்படுகிற மாதம்.

ரேவதி நட்சத்திரக்காரர்களின் விவாகரத்து பிரச்னைகளும், புத்திர பாக்கிய மனக்குறைபாடு சங்கடங்களும் ஒருவழியாக முடிவுக்கு வந்து மிகப்பெரிய சந்தோஷத்தைக் கொடுக்கப் போகிற மாதம். மேலும் தொழில் வியாபாரம், பெரிய நிர்வாகம் போன்ற விஷயங்களில் என்னென்ன தடங்கலும் லாபம் குறைவும் நீடித்து வருகிறதோ அதற்கெல்லாம் இந்த மாதம்தான் அருமையான முடிவு கிடைக்கப் போகிறது. லாப வளர்ச்சியும் அதிகரிக்கப் போகிறது.

திருமண சுபகாரிய விஷய திட்டங்களும் முயற்சிகளும் இந்த மாதம் தொட்டு நன்மைகரமான பரபரப்பை ஏற்படுத்தி மகிழ்ச்சியைக் கொடுக்கப் போகிறது.

இளம் உத்திரட்டாதி இருபாலருக்கும் சட்டென்று திருமணக் கனவு பூர்த்தியாகிற மாதம். அதுபோல உத்தியோக ஆசையும் நிறைவேறிவிடும். 

ரேவதி நட்சத்திரக்காரர்கள் புதிய சொத்துபத்து, பொன், பொருள், ஆபரண சேர்க்கைகளுக்கு ஆளாகப் போகின்றனர். 

பெண்கள்:

வாழ்க்கைத்துணையால் மிகப்பெரிய சுபிட்சங்களும் ஆசை நிவர்த்தியும் உண்டு.

மாணவர்கள்:

தாய்வழி சொந்தங்களால் உங்களது கல்வி விருப்பம் அனைத்துக்கும் இருமடங்காக ஒத்துழைப்பு ஆதரவு.

விவசாயிகள்:

எதிர்பார்த்திருக்கிற ஒத்துழைப்புகள் உதவிகள் கிடைக்கப் போகிறது.

தொழிலதிபர்கள்:

போட்டு வைத்துள்ள பெரிய பட்ஜெட் திட்டங்கள் எளிதாக கைகூடி விடும்.

உத்தியோகஸ்தர்கள்:

சக ஊழியர்களால் ஏற்பட்டிருக்கிற அத்தனை இடையூறுகளும் விமர்சனங்களும் ஒருவழியாக தீருகிற மாதம்.

அரசியல்வாதிகள்:

சக கட்சியினால்  ஏகப்பட்ட திருப்தியும் சந்தோஷமும் தானாக கிடைக்கிற மாதம்.

அனுகூல நட்சத்திரங்கள்:

பரணி, கார்த்திகை, திருவாதிரை, பூசம், அஸ்தம், அனுஷம், திருவோணம்.

பணவரவு:

பிப்ரவரி. 14, 15, 17, 18, 20, 21, 24, 27.

மார்ச். 1, 3, 5, 8, 9, 10, 12.

பரிகாரம்:  இம்மாதம் முதல் புதன்கிழமைகளில் மகாலட்சுமிக்கு அபிஷேகம் செய்து வழிபடவும்.