இன்றைய ராசி பலன் (19-01-2019)
மேஷம்
ஜனவரி 19, 2019

இன்று உங்களுக்கு லாபகரமான நாள். உங்கள் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பயண அலைச்சல் சிரமம் தரும். வீடு மனை போன்ற விஷயங்கள் அனுகூலமாகும். குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

ரிஷபம்
ஜனவரி 19, 2019

இதுவரை இருந்து வந்த உடல் உபாதைகள் நீங்கும். செய்யும் தொழிலில் மேலதிகாரிகளின் அனுசரணை இருக்கும். பண வரவுகள் உங்கள் சிரமங்களைக் குறைக்கும். சுபகாரிய முயற்சிகள் முன்னேற்றமாக இருக்கும். ஆன்மிக ஈடுபாடு இறையருள் தரும்.

மிதுனம்
ஜனவரி 19, 2019

இன்று பொருளாதார சூழ்நிலை வரவுக்கு ஏற்ப செலவினங்கள் இருக்கும். அத்தியாவசியத்தேவை நெருக்கடி தரும். ஆன்மிக ஈடுபாடு மன நிம்மதி தரும். கோபத்தை தவிர்த்து பொறுமையுடன் இருப்பது நன்மை தரும்.

கடகம்
ஜனவரி 19, 2019

இன்று உங்கள் கடன் சுமை குறையும். எதிர்பாராத பணவரவு சிரமங்களை குறைக்கும். தேக ஆரோக்கியத்தில் சிரமம் இருக்கும். பெரியவர்கள் ஆலோசனை ஆசி கிட்டும். போக்குவரத்தில் முன்னெச்சரிக்கை அவசியம் தேவை.

சிம்மம்
ஜனவரி 19, 2019

இன்று உங்கள் புத்திசாலித்தனமான பேச்சு காரிய சாதனை புரியும். வளர்ப்பு பிராணிகளால் மகிழ்ச்சி கூடும். புதிய முயற்சிகள் முன்னேற்றமாக இருக்கும். உறவுகள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.

கன்னி
ஜனவரி 19, 2019

இன்று நீங்கள் துணிச்சலாக எடுக்கும் முடிவுகள் நற்பலன் தரும். தொழில் ரீதியான எதிர்ப்புகள் விலகும். குடும்ப விஷயங்களில் நீங்கள் நினைத்த காரியம் கைகூடும். வளர்ப்பு பிராணிகள் பராமரிப்பு சிரமம் இருக்கும்.

துலாம்
ஜனவரி 19, 2019

இன்று அதிர்ஷ்டம் மிகுந்திருக்கும். உங்களின் துணிச்சலான செயல்பாடுகளுக்கு ஏற்ப நற்பலன்கள் கிடைக்கும். பெரியவர்களின் ஆலோசனையை ஏற்று செயல்படும் காரியம் வெற்றி பெறும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். குடும்பச்செலவினங்கள் கட்டுக்குள் இருக்கும்.

விருச்சிகம்
ஜனவரி 19, 2019

இன்று குடும்பத்தில் உற்சாகம் மிகுந்திருக்கும். சுபகாரிய ஈடுபாடு உங்களுக்கு மன நிறைவு தரும். பழைய கடன்கள் பைசலாகும். பயண காரியம் அனுகூலமாகும். மறைமுக எதிர்ப்புகள் சிரமம் தரும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

தனுசு
ஜனவரி 19, 2019

இன்று உங்கள் பொருளாதாரம் மேன்மையடையும். புதிய பொருள் சேர்க்கை மன மகிழ்ச்சி தரும். வேண்டாத விஷயங்களில் தலையிட வேண்டாம். நல்லது செய்யப்போய் கெட்ட பெயர் வரும். ஆன்மிக சிந்தனை, தர்ம சிந்தனை இறையருள் தரும்.

மகரம்
ஜனவரி 19, 2019

உங்கள் பொருளாதார சூழ்நிலைகள் இன்று சுமாராகவே இருக்கும். சுகபோஜனம் அயனசயனபோகம் மன நிறைவு தரும். புதிய விஷயம் அனுகூலமாகும். கடன் சுமை குறையும். உறவினர்களிடம் எச்சரிக்கை தேவை. ஆன்மிக சிந்தனை ஆறுதல் தரும்.

கும்பம்
ஜனவரி 19, 2019

இன்று நீங்கள் எதிர்பார்த்த ஒரு விஷயம் பற்றிய நற்செய்தி வரும். பொருளாதார சூழ்நிலைகள் முன்னேற்றமாக இருக்கும். தேக ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்னைகள் வரும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் மிகுந்திருக்கும்.

மீனம்
ஜனவரி 19, 2019

இன்று பணப்புழக்கம் மிகுந்திருக்கும். புதிய பொருள் சேர்க்கை மகிழ்ச்சி தரும். உறவுகள் மேம்படும். எதிர்பாராத செலவு தரும். ஆடம்பரச்செலவுகள் அதிகம் இருக்கும். திட்டமிட்டு செயல்படுவது உத்தமம்.