கரோனா வைரஸ் தடுப்பூசி விநியோகம்: இந்திய விமான கம்பெனிகள் தீவிரம்

பதிவு செய்த நாள் : 13 ஜனவரி 2021 20:35

புதுடெல்லி

இந்தியாவில் இயங்கிவரும் ஸ்பைஸ்ஜெட். விஸ்டா தாரா. கோ ஏர்

ஆகிய 3 தனியார் நிறுவனங்களும் கரோனா வைரஸ் தடுப்பூசி மருந்துகளை இந்தியாவின் மூலை முடுக்கில் உள்ள நகரங்களுக்கு எல்லாம் எடுத்துச் செல்லும் பணியில் புதனன்று தீவிரமாக இயங்கின.

ஸ்பைஸ்ஜெட்


ஸ்பைசஸ்ஜெட்.விமானக்கம்பெனி 11 நகரங்களுக்கு தடுப்பூசி மருந்து அடங்கிய சிப்பங்களை எடுத்துச் சென்று விநியோகம் செய்தது. புதனன்று விநியோகம் செய்த தடுப்பூசி மருந்து குப்பிகளின் மொத்த எடை 3.5 டன்களாகும்.

மும்பை ,புனே ,ஹைதராபாத் ஆகிய நகரங்களில் இருந்து இந்தியாவின் மற்ற 11 நகரங்களுக்கும் தடுப்பூசி மருந்து குப்பிகளை எடுத்துச்சென்று ஸ்பைஸ்ஜெட் வழங்கியது

நகரங்களுக்கு எடுத்துச் செல்லும் பணியில் ஏர் இந்தியா உள்பட தனியார் விமான நிலைய விமான நிறுவனங்கள் அனைத்தும் தீவிரமாக பணியாற்றி வருகின்றன.

கிலோ தடுப்பூசி மருந்துகளை எடுத்துச் சென்றது.

விஸ்டாதார


டாடா நிறுவனமும் சிங்கப்பூர் விமான நிறுவனமும் இணைந்து விஸ்டாதார என்ற விமான சேவை நிறுவனத்தை நடத்தி வருகின்றன.

விஸ்டாதாரா புதனன்று ஹைதராபாத நகரில் இருந்து டில்லிக்கு 90.5 கிலோ எடையுள்ள தடுப்பூசி மருந்தை டில்லிக்கு எடுத்துச்சென்றது.

இது தவிர மும்பையிலிருந்து வாராணசிக்கு 512 கிலோ தடுப்பூசி மருந்தை கொண்டு சென்றது.

கோஏர்


இந்தியாவில் இயங்கும் மற்றொரு தனியார் விமான நிறுவனம் கோஏர். இந்த நிறுவனம் புனே நகரில் இருந்து கோவி ஷில்டு தடுப்பூசி மருந்துகளை இந்தியாவின் 13 நகரங்களுக்கு எடுத்துச் சென்று வழங்கியது.

 புனே நகரில் இருந்து கோவாவுக்கு 24000 கோவி ஷீல்டு தடுப்பூசி டோஸ் களை எடுத்துச் சென்றது.

அதுதவிர லக்னோ. கொச்சின் சண்டிகர் ஆகிய நகரங்களுக்கு கோயில் விமானங்கள் தடுப்பூசி மருந்தை எடுத்து சென்றன.