தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் ராஜஸ்தானில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

பதிவு செய்த நாள் : 13 ஜனவரி 2021 20:12

பில்வாரா,

ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தில் உள்ள மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையின் (சிஐஎஸ்எஃப்) வீரரான தமிழகத்தை சேர்ந்த பி. ரஞ்சித் குமார் செவ்வாய்க்கிழமை தனது ஏ.கே.47 துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

9 வது ரிசர்வ் பட்டாலியனை சேர்ந்த ட்ரஞ்சித்துக்கு வரும் பிப்ரவரி 21ம் தேதி திருமணம் நடைபெறவிருந்தது. விடுமுறை முடிந்து அவர் டிசம்பர் மாதம் ராஜஸ்தானில் மீண்டும் பணியில் சேர்ந்தார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணிக்கு தூங்கி கொண்டிருந்த வீரர்கள்  துப்பாக்கி சத்தம் கேட்டு சென்று பார்த்த போது ரஞ்சித் சடலமாக கிடந்தார்.

ரஞ்சித்தின் மரணத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் எழுதிய தற்கொலை கடிதம் எதுவும் மீட்கப்படவில்லை.

இந்த சம்பவம் குறித்து ரஞ்சித்தின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.