முதல்முறையாக தெற்கு ரயில்வே சென்னை பிரிவு மூலம் நேபாளத்துக்கு கார்கள் ஏற்றுமதி

பதிவு செய்த நாள் : 13 ஜனவரி 2021 20:01

சென்னை,

தெற்கு ரயில்வேயின் சென்னை பிரிவு முதல்முறையாக செவ்வாய்க்கிழமை நேபாளத்துக்கு கார்களை ஏற்றுமதி செய்ய உதவியுள்ளது. இதன்மூலம் தெற்கு ரயில்வேக்கு ரூ.18.27 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.

ஹூண்டாய் நிறுவனத்தின் 124 கார்கள் வாலாஜாபாத்தில் இருந்து நேபாள எல்லையில் அமைந்துள்ள உத்தரபிரதேசத்தின் நாடன்வாவுக்கு 25 பெட்டிகள் கொண்ட ரயில் மூலம் கொண்டு செல்லப்பட்டன.

அங்கிருந்து அந்த கார்கள் அனைத்தும் நேபாளம் தலைநகர் காத்மாண்டுக்கு சாலை வழியாக கொண்டு செல்லப்படுகின்றன.

வாலாஜாபாத்தில் இருந்து நாட்டின் பல்வேறு இடங்களுக்கு சரக்குகள் கொண்டு செல்லப்படுவது வழக்கம். ஆனால் நேபாளத்துக்கு ஏற்றுமதி செய்யப்படும் கார்கள் கொண்டு செல்லப்படுவது இதுவே முதல்முறை.