புதுடெல்லி,
இன்போசிஸ் நிறுவனத்தின் நடப்பு நிதியாண்டின் 3வது காலாண்டு லாபம், 16.8 சதவீதம் உயர்ந்துள்ளது.
இன்போசிஸ் நிறுவனம் தனது 3வது காலாண்டு செயல்பாடு குறித்த தகவல்களை வெளியிட்டு உள்ளது. அதில் நிகர லாபம் 16.8 சதவீதம் அதிகரித்து இருப்பதாக கூறியுள்ளது.
டிசம்பர் மாதத்துடன் முடிந்த 3வது காலாண்டில் இந்நிறுவனம் ரூ. 5, 215 கோடி நிகர லாபத்தை ஈட்டி உள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் நிறுவனம் ரூ. 4,466 கோடி நிகர லாபம் ஈட்டியது.
3வது காலாண்டின் மொத்த வருவாய் கடந்த நிதியாண்டோடு ஒப்பிடும் போது, 12.3 சதவீதம் அதிகரித்து ரூ. 25,927 கோடியாக உள்ளது. 2வது காலாண்டோடு ஒப்பிடும் போது 5.5 சதவீதம் அதிகமாகும்.
இன்போசிஸ் நிறுவனம் 7.13 பில்லியன் டாலர் மதிப்புடைய பெரும் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.