ஆதி அண்ணாமலையார் கோவில்

பதிவு செய்த நாள் : 28 நவம்பர் 2020 10:27

பஞ்ச பூதத் தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை கோவிலுக்கு முன்னரே அண்ணாமலையாருக்கு எழுப்பப்பட்ட கோவில் ஒன்று உள்ளது.

திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் பாதையில் இருந்து 7 கி.மீட்டரில் உள்ள அடி அண்ணாமலை என்ற ஊரில் உள்ளது ஆதி அண்ணாமலை கோவில். பிரம்மன் பிரதிஷ்டை செய்த இத்தல மூலவர் ஆதி அண்ணாமலையார், அம்பாள் உண்ணாமுலையம்மன், நால்வரில் ஒருவான மாணிக்கவாசகர் திருவெம்பாவை பாடிய திருத்தலம். இத்தலத்தை அணி அண்ணாமலை என்றும் அழைப்பர்.

பிரம்மன் தனது மகனான சனகாதி முனிவரிடம், வேறு எங்கும் களையப்படாத பாவங்கள் இத் தல அணி அண்ணாமலலயாரைத் தொழ அகலும் என்று கூறியுள்ளார்.

திருவண்ணாமலை செல்பவர்கள் அவசியம் சென்று தரிசிக்க வேண்டிய திருத்தலம் ஆதி அண்ணாமலையார் கோவிலாகும்.

கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு செல்லும் பக்தர்கள் இக்கோவிலில் உள்ள இறைவனை தரிசித்தால் மிகவும் நல்லது.