பஞ்சாப் விவசாயிகள் ரயில் மறியல் திங்கள் முதல் வாபஸ்

பதிவு செய்த நாள் : 21 நவம்பர் 2020 19:13

சண்டிகார்

பஞ்சாப் மாநில விவசாயிகள் சங்கங்கள் வரும் திங்கள்கிழமை முதல் 15 நாட்களுக்கு ரயில் மறியல் போராட்டத்தை வாபஸ் பெறுவது என்று தீர்மானித்து உள்ளனர்.

29 விவசாயிகளின் சங்கங்கள் பஞ்சாப் முதலமைச்சர் அம்ரிந்தர் சிங் உடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது இந்த முடிவு எட்டப்பட்டது.

பஞ்சாப் முதலமைச்சர் பேச்சுவார்த்தைக்கு பின்னர் விவசாயிகளின் ரயில்வே மறியல் போராட்டத்தை விலக்கிக் கொள்ள சம்மதித்து இருப்பதாக கூறப்பட்டது.

பஞ்சாப் முதல்வரின் தகவல் தொடர்பு துறை ஆலோசகர், நவீன ரயில் மறியல் போராட்டம் திங்கட்கிழமை முதல் வாபஸ் பெறப்படுகிறது என்ற தகவலை ட்விட்டர் மூலம் அறிவித்தார்.

முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த செல்வதற்கு முன்பு 30 விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் தனியாக கூடி பேசினார்கள்.

கீர்த்தி கிசான் யூனியன் என்ற அமைப்பு ரயில் மறியல் போராட்டத்தை விலக்கிக் கொள்வதே தாங்கள் எதிர்ப்பதாக தெரிவித்தனர்.

பாஜக அரசிடம் பஞ்சாப் விவசாயிகள் பணிந்து போய் விட்டார்கள் என்று ரயில் மறியல் போராட்டத்தை விலக்கிக் கொள்வது காட்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

ஆனால் மற்ற விவசாயிகளின் சங்கங்கள் கீர்த்தி கிசான் யூனியன் கருத்தை ஏற்கவில்லை.

பஞ்சாப் விவசாயிகள் அறிவித்த ரயில் மறியல் போராட்டத்தை மத்திய அரசு தொழில் மற்றும் வர்த்தகர்களுக்கு எதிராக விவசாயிகள் போராடி வருகிறார்கள் என்ற தோற்றத்தை உருவாக்கி உள்ளது.

விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் நடத்துவதால் தான் சரக்கு ரயில் போக்குவரத்தை அனுமதிக்க முடியவில்லை என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது.

போராட்டம் நடத்தும் விவசாயிகளின் சங்கங்கள் ரயில்வே நிலையத்தில் இருந்தும் ரயில்வே அமைப்புகள் இருந்தும் வெளியேறினால்தான் எந்த ரயில் போக்குவரத்தையும் அனுமதிக்க முடியும் என்று ரயில்வே நிர்வாகம் பிடிவாதமாக தெரிவித்துவிட்டது.

பஞ்சாப் மாநில மக்கள் அனைவரும் சரக்கு ரயில் அனுமதிக்கப்படாத தான் அடிப்படையான தேவைகளுக்கு கூட பாதிக்கப்படும் நிலையில் இருக்கிறார்கள் வர்த்தகம் தொழில்துறை ஆகியவையும் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது விவசாயிகளின் போராட்டத்தை விவசாயிகளை கொண்டே தொழில் மற்றும் வர்த்தகத் துறையினருக்கு எதிராக திருப்பும் வேலையை மத்திய அரசு செய்து வருகிறது இதற்கு நாம் பலியாகி விடக்கூடாது என்று மற்ற சங்கங்கள் வாதிட்டன.

ஆனால் கீர்த்தி கிஷான் யூனியன் தன் கருத்தை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை.

கீர்த்தி கிசான் யூனியன் சங்க நிர்வாகிகள் அதனால் முதலமைச்சருடன் நடக்கும் பேச்சுவார்த்தையிலும் கலந்து கொள்ள விரும்பவில்லை மற்ற சங்கங்கள் முதலமைச்சருடன் போய் பேசி முடிவு எடுக்கலாம் என்று தெரிவித்துவிட்டனர்.

அதைத்தொடர்ந்து 29 விவசாயிகள் சங்க நிர்வாகிகளுடன் சண்டிகரில்முதலமைச்சர் அம்ரிந்தர் சிங் கலந்துரையாடல் கூட்டத்தை நடத்தினார்.

விவசாயிகள் அனைவரும் தண்டவாளம் மற்றும் ரயில்வே நிலங்களில் இருந்து வெளியேற வேண்டும்.

சரக்கு ரயில், பயணிகள் ரயில் போக்குவரத்துக்கு எந்த இடைஞ்சலும் இருக்காது என்று பஞ்சாப் மாநில அரசு உறுதி அளித்தால்தான் ரயில்வே நிர்வாகம் ரயில்களை பஞ்சாப் மாநிலத்தில் இயக்கும் என்று உறுதியாக கூறி விட்டது.

மத்திய அரசின் விவசாயிகளுக்கு எதிரான பஞ்சாப் முற்றுகைப் போராட்டத்தை விலக்கிக் கொள்ள நாம் இப்பொழுது செயல்படுவது அவசியம் இல்லாவிட்டால் நம்முடைய தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படும் இதுவரை 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பஞ்சாப் தொழில்துறை நஷ்டம் அடைந்துள்ளது என்று மாநில முதலமைச்சர் விளக்கம் அளித்தார் அதைத்தொடர்ந்து விவசாயிகள் அனைவரும் ரயில் மறியல் போராட்டத்தை விலக்கிக் கொள்ள சம்மதித்தனர்.

15 நாட்களுக்கு துவக்கத்தில் ரயில் மறியல் போராட்டத்தை வாபஸ் பெறலாம் என்று விவசாயிகள் சங்கங்கள் நிபந்தனை விதித்தனர்.

மாநில அரசுக்கு வர வேண்டிய தொகைகள், கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய பாக்கி, தாளடியை கொளுத்தி விடுவதை தவிர்த்தல், விவசாயிகளின் மீது அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் ஆகியவை குறித்தும் விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டது.

அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண மாநில அரசு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளும் என்று முதலமைச்சர் அம்ரிந்தர் சிங் உறுதியளித்தார்.