அருந்ததியர் உள் ஒதுக்கீட்டிற்கான பி.இ., பி.டெக் கவுன்சிலிங் 24ம் தேதி ஆன்லைன் மூலம் தொடக்கம்

பதிவு செய்த நாள் : 21 நவம்பர் 2020 18:29

சென்னை,

அருந்ததியர் உள் ஒதுக்கீட்டிற்கான பொறியியல் கவுன்சிலிங் நவம்பர் 24 ம்தேதி முதல் 27ம் தேதி வரை ஆன்லைன் மூலம் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் புருசோத்தமன் வெளியிட்ட செய்திக்குறிப்பு

தமிழ்நாடு அரசு ஆணை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை நாள் 29.05.2009யின் படி அருந்ததியினருக்கான உள் ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத இடங்களை நிரப்ப, தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2020-ல் ஒதுக்கீடு ஆணை பெற்றுள்ள ஆதிதிராவிடர்  மாணவர்களுக்கான இணையதளம் வாயிலான கலந்தாய்வு விண்ணப்பவிளம்பர அறிவிக்கை இன்று. வெளியிடப்பட உள்ளது.  இன்று  வெளியிடப்பட உள்ள அறிவிக்கையினைத் தொடர்ந்து, தமிழ்நாடு\பொறியியல் சேர்க்கை 2020-க்கு விண்ணப்பித்த தமிழ்நாட்டைச் சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கான கலந்தாய்வு 24 ம்தேதி முதல் 27 ம்தேதி வரை இணையதளவாயிலாக நடைபெறவுள்ளது.

ஏற்கெனவே ஒதுக்கீட்டு ஆணை பெற்ற விருப்பமுடைய (எஸ்சி விண்ணப்பதாரர்கள்) அருந்ததியர் நிரப்பப்படாமல் உள்ள காலி சேர்க்கை இடங்களை பெற இணையதள கலந்தாய்வில் கலந்துகொள்ள எஸ்.சி. (அருந்ததியர்) பிரிவில் காலியாக உள்ள இடங்களை அறியவும் மற்ற விபரங்களுக்கும் கீழ்க்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.

http:\\www.tneaonline.org

https:tndte.gov.in

மேலும் விவரங்களை அறிய தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 044 – 2235 1014 / 1015 / 0520 / 0523 / 0527