விஷ சாராயம் காய்ச்சுவோர் சொத்துக்களை கையகப்படுத்த யோகி அரசு முடிவு

பதிவு செய்த நாள் : 21 நவம்பர் 2020 17:08

லக்னோ

விஷ சாராயம் காய்ச்சுவோர் சொத்துக்களை முடக்க உத்தரப்பிரதேச அரசு தீர்மானித்துள்ளது.

வெள்ளிக்கிழமையன்று விஷ சாராயம் குடித்த 6 பேர் பிராஜ்பூரி, ஹாப்பூர் ஆகிய இரண்டு நகரங்களில் உயிரிழந்தனர் .ஆனால் இந்தச் சாவுகளுக்கும் விச சாராயத்துக்கு எந்த சம்பந்தமுமில்லை என்று உத்தரப்பிரதேச போலீசார் உறுதியாக கூறினார்கள். அதே வெள்ளிக்கிழமையன்று அமீலா என்ற கிராமத்தில் திருட்டு சாராயம் குடித்த 4 பேர் உயிரிழந்தனர் மேலும் 5 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தக் கிராமம் பிரக்யாராஜ் தினசரி புறநகர்ப் பகுதியாக உள்ளது. இறந்தவர்கள் குடித்த விஷ சாராய மாதிரிகள் போலீஸ் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

பிரியங்கா கண்டனம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் விஷச் சாராய சாவுகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது விவசாயத்தை கட்டுப்படுத்த யோகி அரசினால் முடியவில்லை என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் வெளியிட்டுள்ளார்.

விஷ சாராயம் காய்ச்சி விற்போர் மீது உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்க உத்தரப்பிரதேச அரசு தயாராக இல்லை. பேருக்கு எடுத்த சில நடவடிக்கைகளினால் எந்த பயனும் இல்லை. இந்த விஷ சாராய சூழலுக்கு யார் பொறுப்பு என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.