நக்ரோட்டாவில் பயங்கரவாதிகளின் தாக்குதல்: பாகிஸ்தான் தூதரை அழைத்து இந்தியா கண்டனம்

பதிவு செய்த நாள் : 21 நவம்பர் 2020 17:03

புதுதில்லி

ஜம்மு காஷ்மீரில் கடந்த வியாழனன்று நக்ரோட்டா என்ற இடத்தில் 4 பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள்  பாகிஸ்தான் தூதரக அழைத்து இந்தச் சம்பவம் தொடர்பாக  இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனத்தை பதிவு செய்தது.இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் உதவியதையும் கடுமையாக கண்டனம் செய்தது.

இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்:

பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புக்களுக்கு ஆதரவளிக்கும் நடைமுறையை பாகிஸ்தான் கைவிட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்துகிறது.

பாகிஸ்தானில் இயங்கும் பயங்கரவாதிகளின் அமைப்புக்கள்  இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளின் மீது பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். இதனை முற்றிலும் தடுக்க பாகிஸ்தானில் இயங்கும் பயங்கரவாத அமைப்புகளின் செயல்பாடுகளை முழுவதும் அளிக்க வேண்டியது பாகிஸ்தான் அரசின் பொறுப்பாகும்.

பயங்கரவாதிகள் இயங்க பாகிஸ்தான் மண்ணை பயன்படுத்த பாகிஸ்தான் அரசு அனுமதிக்கக் கூடாது. இருதரப்பு முறையிலும் சர்வதேச முறையிலும் இந்த கடமையும் பொறுப்பும் பாகிஸ்தானுக்கு உள்ளது.

ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு தொடர்ந்து இந்தியாவின் மீது பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்தியா தனது பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உறுதி பூண்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மறைத்து வைத்திருந்த ஏராளமான ஆயுதங்கள், துப்பாக்கிகள் குண்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. இவை ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் அமைதியை சீர்குலைக்க பயன்படுத்துவதற்காக பாகிஸ்தானில் இருந்து கடத்தபட்டவைகள் ஆகும் . தற்பொழுது ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் களுக்கான தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன இந்த ஜனநாயக நடைமுறையை சீர் குறைப்பதற்காக பயங்கரவாதிகள் முயற்சி செய்து வருகிறார்கள் இந்தியாவின் அமைதியைக் குலைக்க முயலும் பயங்கரவாதிகளுக்கும் இந்திய பாதுகாப்பு படைகளுக்கும் இடையே கடந்த வியாழக்கிழமையன்று நகரோட்டாவில் துப்பாக்கிச் சண்டை நடந்தது இந்த தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் ஒரு போலீஸ்காரர் காயம் அடைந்தார்.

இந்தத் தாக்குதலில் உயிரிழந்த பயங்கரவாதிகள் அனைவரும் ஐக்கிய நாடுகள் சபையினால் தடை செய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று பூர்வாங்க தகவல்கள் கூறுகின்றன.