இந்தியாவில் கோவிட்- 19 சோதனைகளின் எண்ணிக்கை 13 கோடியை தாண்டியது

பதிவு செய்த நாள் : 21 நவம்பர் 2020 16:23

புது டெல்லி

இந்தியாவில் கோவிட்-19 சோதனைகளின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமையன்று (20-11-2020) 13 கோடியை தாண்டியது.

வெள்ளிக்கிழமை அன்று மட்டும் இந்தியாவில் நடந்த கரோனா வைரஸ் தொற்றுகளுக்கான சோதனைகளின் எண்ணிக்கை 10,660,22 ஆக இருந்தது இத்துடன் அகில இந்திய அளவில் இதுவரை நடந்த கரோனா வைரஸ் சோதனைகளின் எண்ணிக்கை 130,657,808 ஆக உயர்ந்தது.

டெல்லியில் நாளொன்றுக்கு கரோனா வைரஸ் சாதனைகளின் எண்ணிக்கை 10,000 அளவில் உயர்த்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வியாழக்கிழமையன்று டெல்லியில் நடத்தப்பட்ட கரோனா வைரஸ் சோதனைகளின் எண்ணிக்கை 27 ஆயிரம் ஆகும்.

இந்த அளவை 37000 ஆக உயர்த்த சனிக்கிழமையன்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 15ஆம் தேதி டெல்லியில் நடந்த கரோனா வைரஸ் சோதனைகளின் எண்ணிக்கை 12,055 ஆகும்.

நவம்பர் 19ஆம் தேதி டெல்லியில் நடந்த கரோனா வைரஸ் சோதனைகளின் எண்ணிக்கை 30,735 ஆகும்.

தற்பொழுது அகில இந்திய அளவில் டெல்லியில் இருந்து தான் மிகவும் கூடுதலான கரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை கிடைக்கிறது என்பது குறிப்பிடத் தகுந்ததாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் புதிதாக 6,608 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையுடன் சேர்த்தால் டெல்லியிலுள்ள காரணமாய் நோயாளிகளின் எண்ணிக்கை 40,936 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை டெல்லியில் கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி நபர்களின் எண்ணிக்கை 517,238 ஆக உள்ளது.