கார்ப்பரேட் கம்பெனிகள். தொழில் நிறுவனங்கள் வங்கிகள் துவக்க பரிந்துரை

பதிவு செய்த நாள் : 21 நவம்பர் 2020 16:12

மும்பை

பெரிய கார்ப்பரேட் கம்பெனிகள், தொழில் நிறுவனங்கள், வங்கிகள்  துவங்க அனுமதிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி நியமித்த குழு பரிந்துரைத்துள்ளது.

1949ஆம் ஆண்டு வங்கிகள் ஒழுங்குமுறை சட்டத்தில் தேவையான திருத்தங்களைச் செய்த பிறகுதான் வங்கிகளை துவக்க கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்க வேண்டும் என்று மொகந்தி தலைமையில் ரிசர்வ் வங்கி நியமித்த குழு பரிந்துரை செய்துள்ளது.

2020ம் ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதி இந்திய ரிசர்வ் வங்கி தலைவர் சக்திகாந்த தாஸ் உள் பணிக்குழு ஒன்றை அமைத்தார்.

தனியார் வங்கிகளின் சொத்து உரிமை. தனியார் வங்கிகளின் மீதான கட்டுப்பாடு. கார்ப்பரேட் அமைப்புக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பிற விஷயங்கள் குறித்து ஆய்வு செய்து இந்த உள் பணிக் குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டுமென்று சக்திகாந்த தாஸ் ஆணையிட்டார்.

டாக்டர் மோகந்தி தலைமையிலான உள் பணிக் குழு தனது பரிந்துரைகளை கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி வெளியிட்டுள்ளது.

பரிந்துரைகள் அடங்கிய ரிப்போர்ட் இந்திய ரிசர்வ் வங்கியால் நவம்பர் 20ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

அதன் பரிந்துரைகள் வங்கிகள் தொடர்பாக இதுவரை நிலவிய கருத்துக்கள் அனைத்தையும் தலைகீழாக மாற்றக்கூடியவைகளாக அமைந்துள்ளன.

டாக்டர் மொகந்தி தலைமையிலான உள் பணிக்குழு சமர்பித்த முக்கிய பரிந்துரைகள் விவரம்:

வங்கிகளை துவக்குவோர் தங்களது முதலீட்டை 15 சதவீதத்தில் இருந்து 26 சதவீதமாக உயர்த்த அனுமதிக்கலாம்.

தற்பொழுது துவக்குவோம் செலுத்தப்பட்ட மூலதன அளவு 15 சதவீதமாக உள்ளது அதனால் தங்கள் மூலதனத்தை உழைத்தவர்கள் மீண்டும் அதனை இருபத்தாறு சதவீதத்துக்கு உயர்த்த அனுமதிக்கலாம். கட்டாய மூலதன இருப்புக்கு உரிய காலமாக ஐந்து ஆண்டுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஐந்து ஆண்டு காலம் முடிந்த பிறகு வங்கிகளை துவக்குவோர் தங்கள் செலுத்தப்பட்ட மூலதன அளவை 26 சதவீதத்துக்கு குறைவாகவும் தங்கள் விரும்புகிற நேரத்தில் குறைத்துக் கொள்ளலாம். இந்த ஐந்தாண்டு காலத்தில் வங்கிகளை துவக்குவோர்தங்களுக்கு உரிய பங்குகளை காப்பீட்டு உறுதி களாக வழங்கும் பொழுது அவர்களது துவக்க மூலதனம் உரிய அளவாக 26 சதவீதத்துக்கு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அந்த 26 சதவீதத்துக்கு அதிகமான அளவு பங்குகளை காப்பீட்டு உறுதி பங்குகளாக வழங்க அனுமதிக்கக்கூடாது.

துவக்குவோர் அல்லாத மற்ற பங்கு முதலீட்டாளர்களின் முதலீட்டு அளவு 15% ஆக மாற்றப்படலாம்.

கார்ப்பரேட். தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி

வங்கிகள் ஒழுங்குமுறை சட்டத்தின் உரிய திருத்தங்களைச் செய்த பிறகு பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் வங்கிகளை துவக்க அனுமதி வழங்கலாம்.

இதுதொடர்பான சட்டவிதிகளை இந்திய ரிசர்வ் வங்கி பரிசீலிக்கலாம்.

ரூபா 50 ஆயிரம் கோடிக்கு அதிகமான சொத்து உள்ள வங்கி சாராத நிதி நிறுவனங்கள் 10 ஆண்டுகாலம் இயக்கத்தில் இருந்தால் அவற்றை வங்கிகளாக மாற்ற அனுமதிக்கலாம். அத்தகைய வங்கி சாரா நிதி நிறுவனங்கள் கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றின் சொத்தாக இருந்தாலும் அதனை வங்கியாக மாற்ற அனுமதிக்கலாம்.

வங்கிகளைப் போக்குவதற்கு தற்பொழுது உள்ள விதிமுறைகளில் மாற்றம் எதுவும் தேவை இல்லை.

மூன்றாண்டு காலம் இயங்கிய பேமெண்ட் வங்கிகள்  சிறு முதலீட்டு வங்கியாக மாற விரும்பினால் அதனை அனுமதிக்கலாம்.

புதிய வங்கிகளுக்கான துவக்க மூலதன தேவை வரம்புகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

யுனிவர்சல் வங்கிகள்:

 துவக்க மூலதன தேவை ரூபா ஆயிரம் கோடியாக உயர்த்த படலாம்.

சிறு முதலீட்டு வங்கி:

துவக்க மூலதன அளவு ரூபா 300 கோடியாக உயர்த்தப்படலாம்

 நகர்ப்புற வர்த்தக வங்கிகள் சிறுமுதலீட்டு வங்கியாக மாற விரும்பினால் அவற்றின் பங்கு மூலதன நிகர அளவு ரூபா 150 கோடியாக குறைந்த பட்சம் இருக்க வேண்டும். அந்த ரூ.150 கோடி ஐந்து ஆண்டுகளில் ரூ.300 கோடியாக உயர்த்தப் பட வேண்டும்.

இதனை கண்காணிப்பதற்கான ஒரு அமைப்பு முறையினை இந்திய ரிசர்வ் வங்கி நிறுவலாம்.

கார்ப்பரேட் அமைப்பு முறை

புதிதாகத் துவக்கப்படும் யுனிவர்சல் வங்கிகள் நான் ஆப்பரேட்டிங் பைனான்சியல் ஹோல்டிங் கம்பெனி மூலமாக நிறுவப்பட லாம்.

வங்கிகளை துவக்குவோர் /நிறுவனங்கள் மற்ற குழு அமைப்புக்களுடன் ஏங்கினாள் அப்பொழுது  நான் ஆப்பரேட்டிங் பைனான்சியல் ஹொல்டிங் கம்பனி மூலமாகத்தான் புதிய வங்கிகள் நிறுவப்பட வேண்டும்.

இப்பொழுது நான் ஆப்பரேட்டிங் ஃபைனான்ஸ் ஹோல்டிங்ஸ் கம்பெனி மூலமாக இயங்கும் வங்கிகள் மற்ற நிறுவனத் தொடர்பு இல்லாவிட்டால் அவை போல்டிங் கம்பெனியின் டிவியில் இருந்து விலகிக் கொள்ளலாம்.

2013ம் ஆண்டுக்கு முன்னர் துவக்கப்பட்ட வங்கி விரும்பினால், நான் ஆப்பரேட்டிவ் பைனான்சியல் ஹோல்டிங் கம்பெனிக்கு மாறிக்கொள்ளலாம்.

2013ம் ஆண்டுக்கு முன்னர் உரிமம் வழங்கப்பட்ட வங்கிக்கான வரிச்சலுகைகள் முடிந்துவிட்டால் வரிச்சலுகைகள் முடிந்த தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்குள்

அந்த வங்கிகள். நான் ஆப்பரேட்டிவ் பைனான்சியல் ஹோல்டிங் கம்பெனி முறைக்கு மாறவேண்டும்.

நான் ஆப்பரேட்டிவ் பைனான்சியல் ஹோல்டிங் கம்பெனி ஒரு கடந்து போகும் அமைப்பாக கருதி அதற்கு உரிய வரி அமைப்புகளை நிர்ணயிப்பது குறித்து  மத்திய அரசுடன் ரிசர்வ் வங்கி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

வங்கிகள் நிதி சேவை மற்றும் நிதி தொடர்பில்லாத சேவைகளில் ஈடுபட விரும்பும் வங்கிகள் தங்கள் ஒட்டுமொத்த செலுத்தப்பட்ட பங்கு மூலதனத்தில் அல்லது இருப்பின் 20 சதவீத அளவுக்கு அவற்றில் முதலீடு செய்ய அனுமதிக்கலாம்.

சிறு முதலீட்டு வங்கிகள் மற்றும் பேமென்ட் பேங்க் அவற்றின் ஒட்டுமொத்த நிகர மதிப்பு ரூபாய் 500 கோடியை அடையும் பொழுது அல்லது அவை துவக்கப்பட்டு பத்து ஆண்டுகள் ஆன பிறகும் இந்த இரண்டில் எது உன்ன நடக்கிறதோ அந்த தேதியில் பங்குச்சந்தையில் அவற்றின் பங்குகள் பதிவு செய்யப்பட வேண்டும்.

அசல் வங்கிகள் துவக்கப்பட்ட ஆறு ஆண்டுகளில் அவர் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட வேண்டும்.

இவ்வாறு டாக்டர் மொகந்தி தலைமையிலான ரிசர்வ் வங்கியின் உள் பணிக்குழு இந்திய ரிசர்வ் வங்கி பரிந்துரைகளை வழங்கியுள்ளது.