200 தமிழ் குடும்பங்களை வெளியேற்ற ஆணை: ஹரியானா முதல்வருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம்

பதிவு செய்த நாள் : 20 நவம்பர் 2020 19:30

சென்னை

ஹரியானா பஞ்ச்குலா மாவட்டத்தில் மகேஷ் பூர் என்ற கிராமத்தில் செக்டார் 21ல் உள்ள தமிழ் காலனியில் வசிக்கும் 200க்கு மேற்பட்ட தமிழ் குடும்பங்களை திடீரென்று அவர்கள் வசிப்பிடங்களில் இருந்து வெளியேற்ற ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு உதவ தேவையான நடவடிக்கை எடுக்கும்படி அரியானா முதல்வருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாம கடிதம் இன்று எழுதியுள்ளார்.

 40 ஆண்டுகளுக்கு மேலாக அந்த காலனியில் 200க்கு மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் வசித்து வருகின்றன.

அந்த தமிழ்க் குடும்பங்களுக்கு மாற்று வீட்டு மனைகளோ வசிப்பிடங்களோ ஒதுக்கப்படாமல் அவர்களை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இதுகுறித்து அந்த 200 தமிழ் குடும்பங்கள் இடமிருந்து தமிழக முதல்வருக்கு கோரிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன.

200க்கு மேற்பட்ட அந்த தமிழ் குடும்பங்களின் வசிப்பிட பிரச்சனைகளுக்கு தீர்வு காண தேவையான நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று  அரியானா முதல்வருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

20ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று தமிழக முதல்வரின் கடிதம் ஹரியானா முதலமைச்சர் மனோகர் லாலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.