ஆப்பிள் நிறுவனத்தின் 9 உற்பத்தி பிரிவுகள் சீனாவிலிருந்து இந்தியா வந்தன: ரவிசங்கர் பிரசாத் தகவல்

பதிவு செய்த நாள் : 20 நவம்பர் 2020 17:44

பெங்களூரு

பெங்களூரு 23வது டெக் சம்மிட் மாநாட்டில் கலந்துகொண்டு பேசும் பொழுது, இந்திய தகவல் தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத். ஆப்பிள் நிறுவனத்தின் 9 உற்பத்தி பிரிவுகள் சீனாவிலிருந்து தங்கள் உற்பத்தி தொழிற்சாலைகளை இந்தியாவுக்கு மாற்றியுள்ளன என்று வியாழனன்று தெரிவித்தார்.

உற்பத்தி உலகம் மாற்று இடங்களை தேடி கொண்டிருக்கிறது என்று பிரசாத் கூறினார்.

பெரும் சாதனை நிகழ்த்திய இந்தியா, உற்பத்தி தொழில் நிறுவனங்களுக்கு என உற்பத்தியோடு இணைந்த ஊக்குவிப்புத் திட்டங்களை வெளியிட்டுள்ளது என்று ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

சாம்சங், ஃபாக்ஸ்கான், ரைசிங் ஸ்டார், விஸ்ட்ரான் பெக்காட்ரான் ஆகிய வெளிநாட்டு நிறுவனங்கள் உற்பத்தியோடு இணைந்த ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் அரசுக்கு விண்ணப்பம் அனுப்பி உள்ளனர் என்று ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

பெங்களூரு டெக் சம்மிட் மாநாட்டை துவக்கி வைத்து பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி

கரோனா வைரஸ் தொற்று தொழில்நுட்பத்தின் வலிமையை உலகுக்கு உணர்த்தி உள்ளது. தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை எந்த சிக்கலும் இல்லாமல் இந்தியா பயன்படுத்தி வருகிறது என்று கூறினார் என்றும் பிரசாத் குறிப்பிட்டார்.

கரோனா வைரஸ் தொற்று காரணமாக மக்கள் தங்கள் பணி இடங்களுக்கு செல்ல முடியவில்லை. ஆனால் அவர்களுக்கு தொழில்நுட்பம் உதவியது. உயிர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் இந்தப் போக்கு நிலைபெறும் என்று ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

சவால் மக்களுக்கு உள்ளே மறைந்து கிடக்கும் திறமையை வெளிப்படுத்துகிறது என்று கூறுவார்கள். இது நம்முடைய தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் பொருந்தும். தேவை அல்லது உற்பத்திக்கான குறைந்த கால அவகாசம் தீர்வினை நிச்சயம் வெளிப்படுத்துகிறது என்று மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குறிப்பிட்டார்