மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்துக்கு 10 ஆண்டு சிறை

பதிவு செய்த நாள் : 19 நவம்பர் 2020 18:53

இஸ்லாமாபாத்

பம்பாய் நகரத்தில் பாகிஸ்தானில் இருந்து வந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்துக்கு வியாழக்கிழமை 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையினால் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டவர் ஹபீஸ் சயீத்.

அவரை கைது செய்ய உதவக்கூடிய துப்பு தருபவருக்கு ஒரு கோடி டாலர் வழங்குவதாக அமெரிக்கா அறிவித்திருந்தது.

பாகிஸ்தான் அரசு ஆனல் அதிசயித்து சுதந்திரமாக நடமாட விட்டுவிட்டது.

2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் தேதி ஹபீஸ் மீது பயங்கரவாத செயல்களுக்கு பணம் வழங்கியதாக 2 வழக்குகளை பதிவு செய்தது.

ஹபீஸ் கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவர் மீது பயங்கரவாத அமைப்புக்கு நிதி வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை லாகூர் நகரில் உள்ள பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அந்த வழக்கில் ஜமாத் உத் தவா அமைப்பைச் சேர்ந்த நான்கு பேருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியது.

சையித் மற்றும் அவரது உதவியாளர்கள் இரண்டு பேருக்கு தலா 10 வருடம் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

சயீத்தின் உறவினர் ஒருவருக்கு 6 மாத ரெட் தண்டனை விதிக்கப்பட்டது.

சயீத் உள்பட ஜமாத் உத் தவா அமைப்பைச் சேர்ந்தவர்கள் மொத்தம் 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 4 வழக்குகளில் தான் கைதுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.