லக்னோவில் "பிங் பெடரோல்" ஆளுநர் துவக்கி வைத்தார்

பதிவு செய்த நாள் : 17 அக்டோபர் 2020 20:34

லக்னோ

உத்தரப் பிரதேச மாநில நகரங்களை பாதுகாப்பான நகரங்களாக மாற்றும் திட்டத்திற்கு உதவ 100 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 10 நான்கு சக்கர போலீஸ் வாகனங்கள் ஆகியவற்றின் ரோந்து செல்லும் முறையினை உத்தரப்பிரதேச மாநில ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் சனிக்கிழமையன்று துவக்கி வைத்தார்.

பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக இருசக்கர வாகனங்களையும் நான்கு சக்கர வாகனங்களையும் போலீசாருக்கு ஆளுநர் இன்று வழங்கினார்.

மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து இந்த பிங் பெடரோல் ரோந்தினை வருடத்தில் 180 நாட்களுக்கு நடத்தும் என்று ஆளுநர் கூறினார்.

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது இந்தப் பொறுப்பு தனிப்பட்ட முறையில் ஒரு இலாக்கா வைகோ அல்லது ஒரு அதிகாரிக்கு மட்டும் இருப்பதாக கூற மாட்டேன் பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு எல்லாம் உரிய காலத்தில் தீர்வு காண வேண்டும் பெண்களுக்கு எதிராக ஒரு குற்றம் கூட நடக்க விட மாட்டோம் என்று நாம் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என ஆளுநர் குறிப்பிட்டார்.

இங்கு வழங்கப்பட்ட வாகனங்கள் அரசு அலுவல் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். சொந்த நோக்கங்களுக்கு இந்த வாகனங்களை பயன்படுத்தக்கூடாது என்று ஆளுநர் கூறினார்.

நவராத்திரி விழாவையொட்டி தனது வாழ்த்துக்களை அனைவருக்கும் ஆளுநர் தெரிவித்தார்.

லக்னோ நகரத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மத்திய உள்துறை ஒரு திட்டத்துக்கு அனுமதி வழங்கியது நிர்பயா நிதி திட்டத்தின் கீழ் அந்த திட்டத்துக்கு என ரூபாய் 194.44 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது, மத்திய அரசு திட்டம். ஆக அந்த திட்டத்தை மத்திய அரசு அமல் செய்தது அந்த திட்டத்தில் மாநில அரசு இணைத்துக் கொள்ளப்பட்டது மத்திய அரசு 60 சதவீத நிதியையும் மாநில அரசு 40 சதவீத நிதியையும் வழங்கும் வகையில் அது கூட்டு திட்டமாக அமல் செய்யப்படுகிறது இந்தியாவில் மும்பை டெல்லி, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஐதராபாத், ஆமதாபாத், லக்னோ ஆகிய 8 நகரங்களில் பாதுகாப்பான நகர திட்டத்தின் கீழ் உள்ளன. இந்த நகரங்களில் பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கு இந்தத் திட்டம் பயன்படுத்தப்படுகிறது.

லக்னோ நகரத்தில் பாதுகாப்பான நகர திட்டத்தின்கீழ் ஒரு ஸ்மார்ட் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும். அதைத்தவிர பின் புறக்காவல் நிலையங்களும் அமைக்கப்படும் இந்த பொருள் காவல் நிலையங்களில் பெண்கள் வந்து புகார்களை தெரிவிக்கலாம். பெண் போலீஸார் பிங் பெடரோல் ரோந்து செல்வார்கள்.

எல்லா காவல் நிலையங்களிலும் பெண்களுக்கு உதவ தனிப்பிரிவு ஆலோசகர்களுடன் இயங்கும்.பெண்களின் பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் வலுப்படுத்தப்படும் கேமராக்கள் அமைக்கப்படும் தெருவிளக்குகள் உறுதி செய்யப்படும் மிகவும் முக்கியமான இடங்கள் என்று கருதப்படும் இடங்களில் தெருவிளக்குகள் கூடுதல் ஆக்கப்படும் பெண்களுக்கென தனி கழிவறைகள் அமைக்கப்படும் பெண்களின் உதவிக்கான 112 உடன் அவசர நேரங்களில் தொடர்பு கொண்டு உதவி பெறலாம்.

பிரச்சனைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொள்ளவும், சமூக மற்றும் சிவில் சொசைட்டி அமைப்புக்களை வலுப்படுத்தவும் பாதுகாப்பான நகரத் திட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு, உத்தரப்பிரதேச மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல் கூறினார்.