கரோனா தடுப்பூசி மருந்து உற்பத்தி. விநியோகம்: ஹர்ஷ வர்தன், பிரதமர் மோடி ஆலோசனை

பதிவு செய்த நாள் : 17 அக்டோபர் 2020 19:54

புதுடில்லி

கரோனா வைரஸ் தடுப்பூசி மருந்து உற்பத்தி மற்றும் விநியோகம் குறித்து இந்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்த்தன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தினார்.

இந்தியாவின் புவியியல் அமைப்பு, 

இந்தியாவில் நிலவும் பன்முக வெப்ப தட்ப நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு அதிவிரைவில் இந்தியா முழுக்க தடுப்பூசி மருந்து வினியோகம் உறுதி செய்யப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

தடுப்பூசி மருந்து உற்பத்தி:

தடுப்பூசி மருந்து சேமிப்பு, தடுப்பூசி மருந்து வினியோகம், உற்பத்தி சேமிப்பு விநியோகம் தொடர்பான எல்லா நடவடிக்கைகளையும் கண்காணிப்பு.

கண்காணிப்புக்கு தேவையான அமைப்பு முறை ஆகியவை குறித்து விரிவான ஆலோசனை, திட்டமிடல் தேவை மதிப்பீடு, தேவைகள் உரிய நேரத்தில் கிடைக்கும் வகையில் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் ஆகியவை குறித்தும் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

தடுப்பூசி மருந்து மக்களுக்கு செலுத்தும்போது தேவைப்படும் உபகரணங்கள். சிரிஞ்சுகள் முதலியவை தயார் நிலையில்  இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

இந்தியாவில் மூன்று தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி பணிகள் நடைபெறுகின்றன.

அவற்றுக்கான மருத்துவ சோதனைகளும் நடைபெறுகின்றன. இரண்டு தடுப்புசி மருந்துக்கான சோதனைகள் இரண்டாம் நிலையில் உள்ளன. ஒரு தடுப்பூசி மருந்துக்காண சோதனை மூன்றாம் நிலையில் உள்ளது என்று ஹர்ஷ வர்தன் தெரிவித்தார்.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசி மருந்துகளை 5 பேருக்கு ஒருவர் என்ற நிலையில் வினியோகம் செய்தாலும் 26 கோடி பேருக்கு தடுப்பு ஊசி மருந்துகள் செலுத்தப்பட வேண்டும்.

ஒரு தடுப்பூசி மருந்தின் விலை ரூபாய் 600 க்குள் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே தேசிய தடுப்பூசி மருந்து திட்டத்தின் கீழ் பயன்பெறும் மக்களுக்கு கரோனா வைரஸ் தடுப்பூசி மருந்துகளையும் இலவசமாக வழங்கலாம். மற்றவர்களுக்கு உரிய கட்டணத்தை பெறலாம் என்று ஏற்கனவே மருத்துவத் துறையில் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அரசு 80 ஆயிரம் கோடி ரூபாயை தடுப்பூசி மருந்துகளை ஒதுக்கினால் இந்தியாவின் இந்திய குடிமக்களுக்கு தடுப்பூசி மருந்தை இலவசமாக வழங்க முடியும் என்று சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா தெரிவித்த கருத்தும் பரிசீலிக்கப்பட்டது.

மருத்துவ ஆராய்ச்சி திறன்களை வளர்க்க ஆப்கானிஸ்தான், பூட்டான், பங்களாதேஷ், மாலத்தீவுகள், மோவீசஸ், நேபாளம், ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளில் இந்திய நிபுணர்கள் ஒத்துழைக்கும் திட்டங்கள் அமல் செய்யப்பட்டு வருகின்றன. அந்த நாடுகளில் உள்ள ஆராய்ச்சி அமைப்புகளை வலுப்படுத்த இந்திய நிபுணர்கள் உதவி வருகிறார்கள்.

இந்நாடுகளில் சில தங்கள் நாடுகளில் கரோனா வைரஸ் தடுப்பூசி சோதனைகளை நடத்தலாம் என முன்வந்துள்ளன. அவை தொடர்பாக கோரிக்கைகளும் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இப்படி கரோனா வைரஸ் தடுப்பூசி மருந்துசோதனைகளை நடத்த பங்களாதேஷ், மியான்மர், கத்தார், பூட்டான் ஆகிய நாடுகள் முன்வந்துள்ளன.

இந்தியா மருந்துப் பொருள்களையும் தடுப்பூசி மருந்துகளையும் நமது அண்டை நாடுகளுக்கு வழங்குவதோடு நிறுத்திக் கொள்ளக் கூடாது. உலகம் முழுமைக்கும் நம்முடைய தடுப்பூசி மருந்துகளும், மருந்துகளும் கிடைக்க வகை செய்ய வேண்டும்.

நம்முடைய தடுப்பூசி மருந்துகள் விநியோகத்திற்கு ஐடி பிளாட்பாரங்கள் உருவாக்கப்படவேண்டும் என பிரதமர் மோடி குறிப்பிட்டார்

மாநிலங்களுடன் ஆலோசனை

கரோனா தடுப்பூசி மருந்து உற்பத்தி, சேமிப்பு, விநியோகம் ஆகியவை குறித்து மாநில அரசாங்கங்கள் உடனும் சம்பந்தப்பட்ட அமைப்புகளுடனும் இந்தியாவின் கோவித்து 19 தடுப்பூசி மருந்து நிர்வாகத்திற்கான தேசிய நிபுணர்குழு ஆலோசனை நடத்தி வருகிறது.

தடுப்பூசி மருந்து வினியோகம்

வினியோகத்தில் யாருக்கு முன்னுரிமை என்பது குறித்தும், இந்த நிபுணர் குழு பரிசீலனை செய்து வருகிறது என்று சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்தியா எந்த சூழ்நிலையிலும் தேர்தல் நடத்துவதற்கு திறனை பெற்றுள்ளது. பேரழிவு நிர்வாகத்திலும் நாம் சிறப்பான திறமை பெற்று இருக்கிறோம். இந்த அனுபவங்களை நாம் வெற்றிகரமாக பயன்படுத்த வேண்டும்.

தடுப்பூசி உற்பத்தி, சேமிப்பு, விநியோகம் ஆகியவற்றுக்கான உள்கட்டமைப்பு என்றும் நிலையாக இந்திய சுகாதார அமைப்புக்கு உதவுவதாக அமைய வேண்டும் அதற்கு வலுவான ஐஐடி கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் .

விழிப்புணர்வு தேவை

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவுவது குறைந்திருப்பதால் நாம் அலட்சியம் கொள்ளக்கூடாது தொடர்ந்து வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். முக கவசம் அணிதல், அடிக்கடி கை கழுவுதல், பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுதல் ஆகியவற்றை பண்டிகை காலங்களிலும் இல்லங்களிலும் பொது இடங்களிலும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று பிரதமர்  மோடி வலியுறுத்தினார்.