ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 15 பேருக்கு 5 முதல் 10 ஆண்டுகள் சிறை : டில்லி நீதிமன்றம் தீர்ப்பு

பதிவு செய்த நாள் : 17 அக்டோபர் 2020 18:46

புதுடில்லி:

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 15 பேருக்கு 10 முதல் 5 வருடங்கள் சிறை தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

நாட்டில் பயங்கரவாத தாகுதல்களை நடத்த சதித்திட்டம் தீட்டியது, சமூக ஊடகங்கள் மூலம் இஸ்லாமிய இளைஞர்களை பயங்கரவாதத்தில் சேர்க்க முயற்சித்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டின் கீழ் 15 பேர் தேசிய புலனாய்வு அமைப்பால் (என்.ஐ.ஏ) கைது செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு எதிராக ஐபிசியின் 120-பி (கிரிமினல் சதி) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு டில்லி என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிவில் சிறப்பு நீதிபதி பர்வீன் சிங் அவர்கள் அனைவருக்கும் இன்று தண்டனைகளை அறிவித்தார்.

முக்கிய குற்றவாளி நஃபீஸ் கானுக்கு 1,03,000 ரூபாய் அபராதத்துடன் 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கினார்.

மூன்று குற்றவாளிகளுக்கு தலா ஏழு ஆண்டு சிறைத்தண்டனையும், ஒருவருக்கு ஆறு ஆண்டு சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டது.மற்ற குற்றவாளிகளுக்கு நீதிபதி ஐந்தாண்டு சிறைத் தண்டனை வழங்கி  நீதிபதி உத்தரவிட்டார்.