பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ராஜினாமா செய்யக்கோரி 11 எதிர்க்கட்சிகள் பேரணி

பதிவு செய்த நாள் : 17 அக்டோபர் 2020 18:16

குஜ்ரான்வாலா

பாகிஸ்தான் இராணுவத்தின் கொடுமைகளைக் கண்டித்து பிரதமர் இம்ரான்கான் ராஜினாமா செய்ய கோரியும் 11 எதிர்க்கட்சிகள் சார்பில் குஜ்ரான்வாலா நகரில் ஜின்னா ஸ்டேடியத்தில் பேரணி நடந்தது.

பேரணியில் லண்டனிலிருந்து விடியோ கான்பரன்சிங் மூலம் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப் பேசினார்.

ஆட்சிப் பொறுப்பில் இருந்து இறக்கி அதில் முக்கிய பொறுப்பு ராணுவத்துக்கும் உளவுத்துறை உண்டு என்று நவாஸ் ஷெரீப் குற்றம்சாட்டினார்.

பாகிஸ்தான் பிரதமர் ராஜினாமா செய்யக்கோரி முதன்முறையாக பாகிஸ்தானில் உள்ள எதிர்க்கட்சிகள் ஜனநாயக இயக்கம் ஒன்றை அமைத்துள்ளன அதன் தலைவராக பஸ்லூர் ரஹ்மான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

எதிர்க்கட்சிகள் சார்பில் பேரணி நடத்த பாகிஸ்தான் அரசும் அனுமதி வழங்கியது.எதிர்க்கட்சிகளின் ஒட்டுமொத்த பலன் என்ன என்று அறிய நமக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது அதனை நாம் தெரிந்து கொள்வோம் என்று இம்ரான் கான் கூறினார்.

எதிர்க்கட்சிகளின் பேரணி பிரமிக்கத்தக்க அளவில் மக்களின் பங்களிப்புடன் சிறப்பாக நடந்தது.

பாகிஸ்தான் ராணுவம் என்னை துரோகி என்று குற்றம் சாட்டலாம், நாட்டைவிட்டு ஓடி விட்டது என்று குறை கூறலாம். ஆனால், எவ்வளவு என்மீது குற்றம் சாட்டினால் தண்டனை விதித்தாலும், நான் பாகிஸ்தான் மக்களுக்காக தொடர்ந்து பேசுவேன் அவர்களுக்காக தொடர்ந்து எனது கட்சி வாதாடும் என்று அவர் கூறினார்.

பாகிஸ்தான் ராணுவத்தினர் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் உட்கார வைக்கப்பட்ட இம்ரான்கான் தனது கடமைகளை ஒழுங்காக நிறைவேற்ற தவறி விட்டார் என்று நவாஸ் ஷெரீப் குற்றஞ்சாட்டினார். பாகிஸ்தானில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் எல்லோர் மீதும் அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதை தனது கடமையாக என்பதற்கான அரசு நிறைவேற்றி வருகிறது என்று நவாஸ் ஷெரீப் கூறினார்.

என்னை தேசத்துரோகி என்று குற்றம் சாட்டி வருகிறார்கள். யார் இந்த நாட்டின் உண்மையான பக்தன் என்ற கேள்விக்கு விடை என்ன. பாகிஸ்தானின் அரசியல் சட்டத்தை அழித்தவர்கள் தேசபக்தர்களா? பாகிஸ்தான் நாட்டை இரண்டாக உடைத்தவர்கள் தேசபக்தர்களா?

தேசிய அக்கவுண்டபிலிட்டி பீரோ ஒருதலைப் பட்சமாக செயல்பட்டது. எதிர்க்கட்சிகள் பக்கம் மட்டுமே அது தனது வலையை வீசியது. மற்றவர்களை அது கவனிக்கவில்லை.

பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் முதல் முறையாக ஒரு தூதர் என்று உள்ளனர். மக்கள் பலத்தை தங்களுக்கு ஆதரவாக திரட்டியுள்ளனர். இந்தப் பேரணி வெற்றி பெறுவது உறுதி இவ்வாறு நவாஸ் ஷெரீப் பேசினார். இந்தப் மரியம் உள்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் பேசினார்கள்.