நீட் தேர்வு : 2 பேர் 100 % மதிப்பெண் பெற்றனர்; தமிழகத்தின் சாதனை 57% ஆக உயர்வு

பதிவு செய்த நாள் : 17 அக்டோபர் 2020 00:54

புதுடெல்லி

டெல்லியைச் சேர்ந்த மாணவி அகன்ஷா சிங்கும், ஒடிசாவை சேர்ந்த மாணவர் சோயெப் அஃப்தாப்பும் நீட் தேர்வில் 100 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றனர்.

மதிப்பீட்டு முறைப்படி வயதில் மூத்த மாணவர் முதலிடம் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

நீட் தேர்வில் தமிழகம் கணிசமான முன்னேற்றம் அடைந்தது .2018ம் ஆண்டில் தமிழகத்தின் தகுதி சதவீதம் 39.6.

 2019 அது 48. சதவீதமாக உயர்ந்தது .

2020ல் தமிழகத்தின் தகுதிச் சாதனை அளவு 57 சதவீதமாக உயர்ந்தது.

ஆந்திர பிரதேசம் 71 சதவீதத்தில் இருந்து 59 சதவீதத்திற்கு சறுக்கிவிட்டது.

கட் ஆப் மதிப்பெண் உயர்வு

நடப்பாண்டில் மொத்தம் 13.6 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வில் பங்கு கொண்டனர். இவர்களில் 7.7 லட்சம் மாணவர்கள் மருத்துவ கல்வி மற்றும் பல் மருத்துவம் படிக்க தகுதி பெற்றுள்ளனர்.

எல்லாப் பிரிவினருக்குமான தகுதி மதிப்பெண்கள் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. பொதுப் பிரிவினருக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 147 ஆக உயர்ந்த்து. சென்ற ஆண்டு மதிப்பெண் 134 தான் .

பொதுப்பிரிவில் பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கான கட் ஆப் மதிப்பெண்129. மற்ற இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு கட் ஆப் மதிப்பெண் 113 ஆகும்.