அரசு கொள்முதல். குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் : பிரதமர் மோடி உறுதி

பதிவு செய்த நாள் : 16 அக்டோபர் 2020 16:05

புதுடில்லி,

நெல், கோதுமை போன்ற தானியங்கள் பருப்பு வகைகள் சிறுதானிய வகைகள் ஆகியவற்றை அரசு கொள்முதல் செய்வது தொடர்ந்து நடைபெறும். அவற்றுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நடைமுறையும் தொடரும் என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்திய விவசாயிகளுக்கு உறுதியளித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 75 ஆண்டு கால உறவின் முக்கியத்துவத்தை கொண்டாடும் வகையில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியில் இந்திய ஐக்கிய நாடுகள் சபையின் உணவு விவசாய அமைப்பின் 75 ஆண்டுகாலத்தை குறிக்கும் வகையில் 75 ரூபாய் நாணயத்தை இந்திய பிரதமர் மோடி வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட எட்டுவகை தானியங்களின் 17 வகையான சத்துக்கள் நிரம்பிய பயிர் வகைகளை நாட்டுக்கு இந்தியப் பிரதமர் அர்ப்பணித்தார். பின் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகையில் :

கடந்த ஆண்டுகளில் நாட்டின் தேவைக்கு ஏற்ற மிக நவீன விதைகளை உருவாக்குவது கணிசமான ஆராய்ச்சியும் முன்னேற்றமும் எட்டப்பட்டுள்ளது.

தற்பொழுது செறிவூட்டப்பட்ட சத்து வகைகளை கொண்ட 70 பயிர் வகைகள் இந்தியாவில் விளைவிக்கப்படுகின்றன.

2014 ஆம் ஆண்டுக்கு முன்னால் முன்னால் செறிவூட்டப்பட்ட சத்துக்கள் நிறைந்த தானியத்தை உற்பத்தி வகை உற்பத்தி செய்யும் விதைகள் உருவாக்கப்படவில்லை. அப்பொழுது ஒரே ஒரு வகையான விதைகள் மட்டுமே விவசாயிகளுக்கு கிடைத்து வந்தது.

விவசாயிகள் தங்கள் வேளாண்மைக்கு செலவழிக்கும் தொகையை போல 150 சதவீதம் வருமானமாக பெற வேண்டும் என்பதற்காக மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்கு மத்திய அரசு தமிழகத்தில் இயற்றிய மூன்று விவசாய சட்டங்கள் பெரிதும் உதவும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்தியாவின் உணவு பாதுகாப்பை உறுதிசெய்வது அரசின் கொள்முதல் குறைந்தபட்ச ஆதரவு விலை முக்கிய பங்காற்றுகின்றன. எனவே அவை தொடர்வது இயல்பான நடவடிக்கையாக அமையும்.

இந்தியா முழுமைக்கும் பயன்படுத்தக்கூடிய ஒரே ரேஷன் கார்டு முறை நாடு முழுக்க அமல் செய்யப்பட்டுள்ளது 28 மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் இந்த ஒற்றை ரேஷன் கார்டு முறைக்கு மாறியுள்ளன என்றும் இந்திய பிரதமர் மோடி குறிப்பிட்டார்.