எட்டாவது நாளாக பங்குச்சந்தைகள் உயர்வு.

பதிவு செய்த நாள் : 12 அக்டோபர் 2020 18:06

புதுடெல்லி

இந்திய தேசிய பங்குச் சந்தையின் குறியீடு வெற்றியும் மும்பை பங்குச் சந்தையின் குறியீடு சென்செக்ஸ் இன்று எட்டாவது நாளாக கூடுதல் புள்ளிகளைப் பெற்று முன்னேறின.

இன்று காலையில் மும்பையில் ஏற்பட்ட மின் தொடர்பு துண்டிப்பு முதலீட்டாளர்களுக்கு பெரும் கவலையைத் தந்தது இந்த மின் துண்டிப்பு காரணமாக மும்பையில் ஏற்பட்ட உற்பத்தி பாதிப்பு போக்குவரத்து பாதிப்பு பங்குச் சந்தையில் எதிரொலித்தது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று புதுடெல்லியில் அறிவித்த ரூபா 73,000 கோடிக்கான புதிய சலுகைகள் முதலீட்டாளர்களுக்கு முதலீட்டாளர்களுக்கு உற்சாகம் தரவில்லை.

முதலீடு. வங்கிகள் ஆகிய துறைகளை மத்திய அரசு முழுக்க புறக்கணித்து விட்டதாக பங்குச்சந்தையில் கருத்து நிலவியது.

திங்கட்கிழமை காலை தேசிய பங்குச் சந்தையின் வங்கிகள் பிரிவு 0.14% உயர்ந்து இருந்தது ஆனால் பிற்பகலில் சரிந்து விட்டது.

இன்று டிசிஎஸ் நிறுவனம் தனது பங்குகளை கொள்முதல் செய்ததால் ஐடி துறை நல்ல உற்சாகம் கிடைத்தது.

அத்துடன் இன்போசிஸ் நிறுவனப் பங்குகள் 2.3 சதவீதம் உயர்ந்தது ஒட்டுமொத்தத்தில் கடந்த ஒரு வார காலத்தில் ஐ டி பிரிவு விலைமதிப்பு 1.7% உயர்ந்துள்ளது குறிப்பிடத்தகுந்தது.

ஐடி துறையில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக வங்கித்துறை சரிவு வீடு கட்டப்பட்டு ஒட்டுமொத்தமாக பங்குச் சந்தையில் இன்று முன்னேற்றம் காணப்பட்டது.

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் குறியீட்டெண் 0.21% உயர்ந்து 40593 புள்ளிகளில் நிறைவடைந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிப்டி குறியீட்டெண் 0.14% உயர்ந்து 1193095 புள்ளிகளில் நிறைவடைந்தது.