மும்பை டெல்லி பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் இன்று உயர்வு

பதிவு செய்த நாள் : 09 அக்டோபர் 2020 17:05

மும்பை

வங்கிக் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று இந்திய ரிசர்வ் வங்கி என்று அறிவித்த காரணத்தினால் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு எண்ணும் டெல்லி பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு எண்ணும் இன்று கணிசமான அளவு உயர்ந்தன.

இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை கமிட்டி மூன்று நாள் கூட்டத்துக்குப் பிறகு இன்று முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்திய ரிசர்வ் வங்கி தலைவர் சக்திகாந்த தாஸ் முடிவுகளை அறிவித்தார். வங்கி கடனுக்கான வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் நிகழாது என்று அவர் குறிப்பிட்டார். அது தவிர தேவைக்கேற்ப இந்திய ரிசர்வ் வங்கி கடன் வழங்கு நடைமுறைகளில் தொழில் வர்த்தக வளர்ச்சியை உறுதி செய்ய மாற்றங்களை அறிவிக்க தயங்காது என்றும் சக்திகாந்த தாஸ் குறிப்பிட்டார்.

பொருளாதாரத் துறை நிபுணர்கள் இந்திய ரிசர்வ் வங்கி வங்கிகள் மத்தியில் பணப்புழக்கம் குறையாமல் இருப்பதற்கு என பல நடவடிக்கைகளை மேற்கொண்டது அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது என்று பாராட்டினார்கள்.

மும்பை பங்குச் சந்தையின் அதிகார பூர்வ குறியீட்டெண்ணாக கருதப்படும் சென்செக்ஸ் இன்றைய வர்த்தக நேர முடிவில் 327 புள்ளிகள் உயர்ந்தது இந்த உயர்வு புள்ளி 0. 81 சதவீதமாக கணக்கிடப்பட்டுள்ளது.

இன்றைய வர்த்தக இறுதியில் சென்செக்ஸ் புள்ளிகள் 40.509 ஆக இருந்தது.

தில்லியில் உள்ள தேசிய பங்குச் சந்தையின் நிப்டி குறியீட்டெண் 80 புள்ளிகள் உயர்ந்தது.

இன்றைய விற்பனை உயர்வு புள்ளி 67 சதவீதம் ஆகும் இன்றைய வர்த்தக இறுதியில் நிப்ட்டி குறியீட்டு எண்கள் 11 914 ஆக முடிவுற்றது.

அமெரிக்காவில் தொழில் வர்த்தகத்தை ஊக்குவிக்க மற்றொரு ஊக்குவிப்பு திட்டம் குறித்து என்று ஆளும் குடியரசுக் கட்சியும், எதிர்க் கட்சியான ஜனநாயக கட்சியின் இன்று பேச்சுவார்த்தை நடத்துவதாக இருந்தது. ஆனால் அதிபர் டிரம்ப் அந்த பேச்சுவார்த்தைகளை திடீரென்று ரத்து செய்துவிட்டார். அதன் காரணமாக ஜப்பான், ஹாங்காங், அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள பங்குச் சந்தைகள் இன்று இழப்பு மற்றும் உயர்வு கலந்த நிலையை வெளிப்படுத்தின.