அலையாமல் ஆன்லைனில் கல்விக் கடன் பெற வழி

பதிவு செய்த நாள் : 07 அக்டோபர் 2020

கொரோனாவால் வேலையிழந்தும், சம்பளக் குறைப்பாட்டாலும் பெரும்பாலான பெற்றோர் தனியார் பள்ளிக் கூடங்களில் படித்துக்கொண்டிருந்த தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்திருக்கிறார்கள். இதனால் மாதாமாதம் தனியார் பள்ளிகளுக்குச் செலுத்துக்கொண்டிருந்த கல்விக் கட்டணத்திலிருந்து இதனால் விடுதலை பெற்றிருக்கிறார்கள். இது அவர்களுக்கு ஒரளவிற்கு பாரத்தைக்  குறைந்திருக்கலாம். ஆனால் கல்லு£ரி கட்டணத்தில் இதை எதிர்பார்க்க முடியாது. தற்போது கலை மற்றும் அறிவியல் கல்லு£ரிகளில் மாணவர் சேர்க்கை முடியும் தருவாயில் இருக்கின்றது. பொறியியல் கல்லு£ரிகளுக்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. கல்லு£ரியில் பிள்ளையை சேர்ந்த பின்னர் ஆண்டுக்கு ஆண்டு பெரும்தொகையாக கல்விக் கட்டணம் செலுத்தவேண்டிய சூழ்நிலையில் பெற்றோர் இருக்கிறார்கள். அவர்களில் குறிப்பாக நடுத்தர வர்கத்தினருக்கு வரப்பிரசாதமாக அமைந்திருப்பது வங்கிகள் அளிக்கும் கல்விக் கடன். பெற்றோரில் 68 சதவிகிதத்தினர் தங்கள் வருவாயைவிட இரண்டிலிருந்து மூன்று மடங்குக்கு அதிகமாக கல்விக் கட்டணத்தைச் செலுத்தி பிள்ளைகளை படித்து வைத்துக்கொண்டிருப்பதாக ஆய்வுகள் கூறுக்கின்றன.

வங்கியில் கல்விக் கடன் பெறுவதற்கு முன்பு வங்கிகளை நேரடியாக அணுகவேண்டி சுழல் இருந்தது. இன்று அந்த நடைமுறையில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. கல்விக் கடன் பெறுவதில் பல்வேறு சந்தேகங்கள் பெற்றோருக்கும், மாணவருக்கும் ஏறுபடுவது இயற்கைதானே. அந்த சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கிறார் பொருளாதார நிபுணர் முத்துகிருஷ்ணன்.


"கல்விக் கடன் பெறுவதில் வரைமுறை இருக்கிறது. பத்தாம் வகுப்பு தேர்வானவர்கள் ஐ,டி.ஐ., மற்றும் பாலிடெனிக் படிப்புகளில் பயிலவும் கல்விக் கடன் பெறலாம். இவை தவிர நான்காண்டு பொறியியல் படிப்புகளுக்கும் (பி.இ., பி.டெக்,), ஐந்தாண்டுகள் மருத்துவப் (எம்,பி,பி,எஸ்.,) படிப்புக்கும் கல்விக் கடன் கிடைக்கிறது. இவை தவிர மூன்றாண்டுகளான பி.ஏ., பி.எஸ்.சி., மற்றும் பட்டயக் கணக்காளர் என்ற சி.ஏவுக்கும் கல்விக் கடன் பெற முடியும்.

ஒவ்வொரு கல்லூரியின் தரத்தைப் பொறுத்து கல்விக் கடனை அரசாங்கமே நிர்ணயிக்கிறது. கல்லுரிக் கட்டணங்கள் அனைத்தும் கல்விக் கடனாக வழங்கப்படும். இந்த கல்விக் கடனில் கல்விக் கட்டணம், புத்தக் கட்டணம், விடுதி மற்றும் உணவுக் கட்டணம் மற்றும் பேருந்துக் கட்டணமும் ஆகியவை அடங்கும்.

வங்கியில் கல்விக் கடன் கிடைத்தால் பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார் கார்டு நகல், பெற்றோரின் ஆதார்டு நகல், பெற்றோரின் ஆண்டு வருமானச் சான்றிதழ், கல்லூரியில் இடம் கிடைத்திற்கான சான்றிதழ், வங்கிக் கணக்கு ஆகிய சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.

ஆரம்பத்தில் கல்விக் கடன் பெற அவரவர் வீடுகளுக்கு அருகிலுள்ள வங்கிகளை அணுக வேண்டி இருந்தது. பிறகு வார்டு வாரியாக பிரித்து அந்தந்த வார்டுகளுக்கு அருகிலுள்ள வங்கிகளை அணுக்கவேண்டும் என்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இப்போது கல்வி பயிலும் கல்வி நிறுவனம் அமைந்துள்ள பகுதியிலுள்ள வங்கியை அணுக்கவேண்டும் என்று மாற்றியமைத் திருக்கிறார்கள். இதற்கு காரணம் என்னவென்றால் அப்போதுதான் அந்த கல்வி நிறுவனத்தின் தரத்தை அறிய முடியும் என்பதால் இவ்வாறு மாற்றியமைத்து உள்ளார்கள்.

முன்பு எந்த கல்லூரியில் படித்தாலும் கல்விக் கடனுக்கான வட்டி மானியம் அளிக்கப்பட்டது. தற்போது 2019ம் ஆண்டு முதல் தேசிய அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் படித்தால் மட்டுமே வட்டி மானியம் கிடைக்கும். எடுத்துக்காட்டாக பொறியியல் படிப்பு என்றால் அந்த கல்லூரி நாக் மற்றும் என்.பி.ஏ., ஆகிய அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். மருத்துவம் என்றால் அகில இந்திய மருத்துவ அங்கீகாரம், சட்டம் என்றால் பார்கவுன்சில் அங்கீகாரம். இவ்வறான அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் படித்தால் மட்டுமே கல்விக் கடனுக்கான வட்டி மானியம் கிடைக்கும். ஆகவே கல்லூரியைத் தேர்வு செய்யும் முன் அந்தக் கல்லூரி தேசிய அங்கீகாரம் பெற்றிருக்கிறதா என்பதை முதலில் கவனிக்கவேண்டும்.

முன்பு பத்து லட்சம் வரையிலான கல்விக் கடனுக்கு வட்டி மானியம் அளிக்கப்பட்டது. 2019ம் ஆண்டு முதல் ஏழு லட்சத்து 50 ஆயிரத்திற்குள் கலவிக்கடன் இருக்கும் பட்சதில்தான் வட்டி மானியம் கிடைக்கும். இதற்கு மேல் கல்விக் கடன் பெறும் பட்சத்தில் சொத்தை பிணையம் வைப்பதடன் வட்டியும் செலுத்தவேண்டும்.

ரிசர்வ் வங்கி கல்விக் கடனுக்கான வட்டி விகிதம் 12 முதல் 16 சதவிகிதத்திற்குள் வசூலித்துக்கொள்ளலாம் என வங்கிகளுக்கு அறிவித்துள்ளது. அரசின் மானியம் பெறவேண்டுமானால் பெற்றோரின் ஆண்டு வருமானம் நான்கு லட்சத்திற்குள் இருக்க வேண்டும். அதற்கான சான்றிதழும் சமர்ப்பிக்கவேண்டும். மேலும் ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி செலுத்தியத்திற்கான சான்றும் காட்டபேண்டும்" என்றார் முத்துகிருஷ்ணன.

கல்விக்கடன் குறித்து ஆக்சிஸ் வங்கி மேலாளர் ரமேஷ் கூறுவது. " இப்போது கல்விக் கடன் பெறும் நடைமுறை எளிமையாக்கப்பட்டுள்ளது. முன்பேல்லாம் கல்விக் கடனுக்கு எந்த வங்கியை அணுகுவது என்பது தெரியாது. அப்படி அணுகினாலும் அந்த வங்கி கல்விக் கடன் அளிக்குமா  என்பதும் தெரியாது. இப்போது அத்தகைய எந்த சிக்கலும் இல்லை. இதற்காக வித்யா லட்சுமி என்ற சிறப்பு வெப்சைட் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த வெப்சைட்டில் அனைத்து வங்கிகளும் இணைக்கப்பட்டுள்ளன.

கல்விக் கடன் தேவைப்படும் மாணவன் வித்யா லட்சுமி வெப்சைட்டில் பதிவு செய்தாலே போதும். அவருடைய ஊர், அவர் படிக்கப்போகும் படிப்புக்கு எந்தெந்த வங்கிகள் சிறப்பு சலுகைகள் அளிக்கின்றன போன்றவை எல்லாம் கணக்கில்கொண்டு அவருக்கான வங்கியை பரிந்துரைப் பார்கள். அக்கடனுக்கான வட்டி விகிதம் திரும்பக் கடனைச் செலுத்துவதற்கான வழிமுறைகள் போன்ற அனைத்து விவரங்களும் கிடைக்கும்.

வெப்சைட்டில் பதிவு செய்தவுடன் அதற்கான பிரின்ட் அவுட்டை எடுத்துகொண்டு உங்களுக்காக பரிந்துரைக்கப்பட்ட வங்கிக்கு எடுத்துச் சென்று காட்டி அதன் பின்னர் மதிப்பெண் சான்றிதழ்கள், முகவரிக்கான சான்றிதழ் போன்ற தேவைப்படும் அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்கவேண்டும்.

வெப்சைட் உங்களுக்காக பரிந்துரைத்த வங்கியில் அவசியம் கணக்கு வைத்திருக்கவேண்டும் என்பது முக்கியம் அல்ல. கல்விக் கடன் கிடைக்கும் பட்சத்தில் புதிதாக வங்கிக் கணக்கை துவக்கிக்கொள்ளலாம். சில குறிப்பிட்ட வங்கிகள் சில குறிப்பிட்ட பாடங்களுக்கு கல்விக் கடன் அளிப்பதில் முன்னுரிமை அளிப்பதுண்டு. காரணம் அப் படிப்புகளை படிப்பவர்கள் ஒழுங்காக கல்விக் கடளை செலுத்தி விடுகிறார்கள் என்பதால். சில வங்கிகள் தங்களுடைய ஆண்டு ரெக்கார்டுகளை வைத்து சில படிப்புகளுக்கு கல்விக் கடன் கொடுக்க மறுக்கலாம். காரணம் இவ்வாறான படிப்புகளுக்கு கடன் பெற்ற பலர் கடனை திரும்பச் செலுத்துவதில்லை. அதனால் கடனே நாங்கள் கொடுப்பதில்லை என்கிறார்கள்".

மத்திய அரசு மாணவர்கள் எளிதாக ஆன்லைன் வழியாக கல்விக் கடன் பெறுவதற்காக https://www.vidyalakshmi.co.in/students/index  என்ற இணைய தளத்தை உருவாக்கி உள்ளது. இந்த இணைய தளத்தை தோற்றுவித்தது என்.எஸ்.டி.எல் நிறுவனம்.

இந்த இணைய தளத்தில்  கல்விக்கடன் பெற மூன்று கட்ட நடைமுறை வகுத்துள்ளனர்

கல்விக் கடன் தேவைப்படும் மாணவன் இந்த இணையதளத்தில் நிரந்தரக் கணக்கு துவக்கவேண்டும். அதற்கு மொபைல் எண், இமெயில், மாணவரின் பெயர், தந்தையின் பெயர் போன்றை இணைய தளத்தில் குறிப்பிட்டதும் பயனாளர் பெயர் மற்று பாஸ்வேர்டு கிடைக்கும். இதை பயன்படுத்தி லாக்கின் செய்து விண்ணப்பதை பூர்த்தி செய்யவேண்டும். அப்படி செய்யும்போது அருகிலுள்ள தேசிய வங்கியை குறிப்பிடவேண்டும். பின்பு எந்த துறை படிப்பு, எத்தனை ஆண்டு படிப்பு, ஆண்டுக்கு கல்விக் கட்டணம் எவ்வளவு போன்றவை எல்லாம் குறிப்பிடவேண்டும். இவையெல்லாம் குறிப்பிட்ட பிறகு பதிவு செய்யப்பட்ட எண்ணுக்கு குறுந்தகவல் வரும் அதற்கு பிறகு கல்விக் கடன் விண்ணப்பத்துக்கான விண்ணப்பதை பதிவு இறக்கம் செய்து பத்திரமாக வைத்துக்கெள்ள வேண்டும்.

இதன் பின்னர் உங்கள் விண்ணப்பமானது வங்கி அதிகாரிக்கு மெயில் மூலம் அனுப்பப்படும். அந்த மெயிலை பெற்ற வங்கி அதிகாரி கல்விக் கடனுக்கு விண்ணப்பித்த மாணவனையும் அவரது பெற்றோரையும் தொலைபேசி வாயிலாக வர சொல்வார். வங்கி அதிகாரியைச் சந்தித்த பின் கல்விக் கடன் எந்த வங்கி கிளையில் கிடைக்கும் என்ற தகவல் முடிவாகும். ஒருவேளை கல்விக் கடன் அளிக்க வங்கி மறுத்தால், அதே இணைய தளத்தில் புகார் அளிக்கும் வசதியும் உள்ளது. இந்த இணைய தளத்தில் தேசியமயமாக்கப்பட்ட 36 வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளன.

வங்கிகள் கல்விக் கடனுக்காக வகுத்துள்ள விதிகள் என்னவெண்று இந்திய வங்கியின் முன்னாள் மேனேஜர் ராகவனிடம் கேட்டபோது. உங்கள் படிப்புக்கு கல்விக் கட்டணம் எவ்வளவு என்று அரசாங்கம் வகுத்துள்ளதோ அத்தொகை முழுவதும் கல்விக் கடனாக கிடைக்கும். ரூபாய் நான்கு லட்சம் வரை என்றால் பெற்றோரின் உத்தரவாதம் மட்டும் இருந்தால் போதுமானது. வேறு எந்தவித சொத்தை அடமானமாக வைக்க வேண்டியதில்லை. ரூபாய் நான்கு லட்சம் முதல் ஏழரை லட்சம் வரை என்றால் மூன்றாம் நபரின் ஷூரிட்டி வேண்டும். அதுவே ஏழரை லட்சத்திற்கு மேல் என்றால் வீடோ இல்லை மனையோ போன்ற அசையா சொத்துகள் அடமானம் வைக்க வேண்டிய சூழல் இருக்கும். இவ்வாறு 25 லட்சம ரூபாய் வரை கல்விக் கடன் பெறலாம். சொத்து பத்து இல்லாத ஏழை பெற்றோர் மாணவர்களுக்கு கல்விக் கடன் கிடைக்காதா என்ற சந்தேகம் வேண்டாம். அவர்களுக்கும் கல்விக் கடன் கிடைக்கும்.

கல்லு£ரியில் ஒழுங்காக படிக்கும் மாணவர்கள் கல்விக் கடனைக் குறிபிட்ட காலத்திற்குள் கட்டிவிடுகின்றனர். கல்லு£ரி முடித்து ஒராண்டு கழித்துதான் வேலை கிடைக்கிறது என்றால் வேலைக்கு சேர்ந்த அடுத்த மாதத்திலிருந்து கல்விக் கடனுக்கான தவணைத் தொகையை செலுத்த ஆரம்பிக்க வேண்டும். கல்லூரி முடித்து உடனே வேலை கிடைத்து விட்டால் அடுத்த மாதத்திலிருந்து கடனுக்கான தவணைத் தொகையை கட்ட ஆரம்பிக்கலாம். கல்லூரி முடித்து ஒராண்டாகியும் வேலை கிடைக்கவென்றால் கடன் அளித்த வஙகி மேனேஜரை அணுகி மேலும் ஆறு மாதம் வரை காலக்கெடுவை நீடித்துக் கொள்ளலாம். கல்விக் கடன் பெற்று அதனை கட்டவில்லை என்றால் பிற்காலத்தில் எந்த வங்கியிலும் அவர்களால் கடனே வாங்க முடியாது" என்றார்.

அறுபது மாதங்களுக்குள் (5 ஆண்டுகள்) கல்விக் கடனுக்கான தவணைத் தொகையை செலுத்திடவேண்டும். கூடுதலான கடன் என்றால் தவணைத் தொகையை செலுத்தி முடிக்க பத்தாண்டுகள் வரை அவகாசம் வழங்கப்படுகிறது. இதற்கு மேலும் அவகாசம் தேவை என்றால் வங்கி மேலாளரிடம் அணுகினால் கூடுதலாக ஆறு மாதங்கள் நீட்டிக்கப்படுக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் நடுத்தரக் குடும்பங்களுக்கு கல்விக் கடன் என்பது வரப்பிரசாதம். அதை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
கட்டுரையாளர்: குட்டிக் கண்ணன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Your comment will be posted after the moderation