ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தில் சிங்கப்பூர் நிறுவனம் முதலீடு

பதிவு செய்த நாள் : 03 அக்டோபர் 2020 14:41

மும்பை

ரிலையன்ஸ் ரீடெய்ல் என்று அழைக்கப்படும் சில்லறை வர்த்தக நிறுவனத்தில் சனிக்கிழமை அன்று சிங்கப்பூர் அரசு முதலீட்டு நிறுவனம்-ஜிஐஜி முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.

சிங்கப்பூர் முதலீட்டு நிறுவனம் 5,512.5 கோடி ரூபாயை முதலீடு செய்ய முன்வந்துள்ளது.

இந்த முதலீட்டின் மூலம் ரிலையன்ஸ் சில்லறை வர்த்தக நிறுவனத்தில் 1.22 சதவீத பங்குகள் சிங்கப்பூர் முதலீட்டு நிறுவனத்திற்கு கிடைக்கும்.

கடந்த வியாழக்கிழமை அன்று அபுதாபியில் உள்ள முபாதலா என்ற முதலீட்டு நிறுவனம் ரிலையன்ஸ் சில்லறை வர்த்தக நிறுவனத்தில் ரூபாய் 6,247.5 கோடி முதலீடு செய்வதாக அறிவித்தது.

இந்த முதலீட்டின் மூலம் அபுதாபியில் உள்ள அரசு முதலீட்டு நிதி 1.4 சதவீத பங்குகள் கிடைக்கும்.

கடந்த புதன்கிழமையன்று குளோபல் தனியார் முதலீட்டு நிறுவனம் ஆகிய ஜெனரல் அட்லாண்டிக் ரூ. 3675 கோடி முதலீடு செய்வதாக அறிவித்தது முதலீட்டுக்கு 0.84 சதவீதப் பங்குகள் கிடைக்கும்.

மேலும் புதன்கிழமை அன்று அமெரிக்காவின் பிஇ இன்வெஸ்டார் சில்வர் லேக் இரண்டாவது தவணையாக ரூபாய் 1,875 கோடி முதலீடு செய்தது இத்துடன் அந்த அமெரிக்க நிறுவனம் ரிலையன்ஸ் சில்லறை வர்த்தக நிறுவனத்தில் ரூபாய் 375 கோடி முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுவரை ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீடு எவ்வளவு வந்துள்ளது என்று அறிவிக்கவில்லை.