மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்மபூமி நிலத்தை ஒப்படைக்க கோரி கிருஷ்ண விராஜ்மான் மனு தாக்கல்

பதிவு செய்த நாள் : 26 செப்டம்பர் 2020 13:18

மதுரா

அயோத்தி ராம ஜென்ம பூமி நிலத்தை கோரி வழக்கு தொடர்ந்து ராம் லாலா விராஜ் மான் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்ம பூமி 13.37 ஏக்கர் நிலத்தை தங்களிடம் ஒப்படைக்க கோரி கிருஷ்ண விராஜ் மான் மதுராவில் உள்ள சிறில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

தற்பொழுது அந்த நிலம் சாகி ஈத்கா மஜித் வசம் உள்ளது.

வழக்கு தொடர்ந்து இருப்பவர் மதுராவில் உள்ள பகவான் ஸ்ரீ கிருஷ்ண விராஜ் மான் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சார்பில் ரஞ்சனா அக்னிகோத்ரி மற்றும் 6 பக்தர்கள் மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.

ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த இடமான அந்த நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து மேல் கட்டுமானம் எழுப்பப்பட்டு இருப்பதாக வழக்கறிஞர்கள் ஹரி சங்கர் ஜெயின், விஷ்ணு சங்கர் ஜெயின் மனு தாக்கல் செய்துள்ளனர்.

1991ம் ஆண்டு

வழிபாட்டுத் தலங்களுக்கான சிறப்பு விதிகள் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுராவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண ஜென்ம பூமி நிலத்தை உத்தரப்பிரதேச மாநில சன்னி வக்பு போர்டு ஒப்புதலுடன் மஜித் ஈத்கா அறக்கட்டளை கட்டடங்களை எழுப்பியுள்ளது.

1669-1970ம் ஆண்டில் அவுரங்கசீப் கிருஷ்ணர் கோவிலின் ஒரு பகுதியை இடித்து மசூதி எழுப்ப நடவடிக்கை எடுத்ததாக ஜாதுநாத் சர்கார் என்ற வரலாற்று ஆசிரியர் கூறியுள்ளார். அதை சான்றாவணம் ஆக கொண்டு நிலத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கிருஷ்ண விராஜ்மான் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.