24 கோடி மாணவருக்கும் ஸ்மார்ட் போன் வழங்க புனே எம்பி கோரிக்கை

பதிவு செய்த நாள் : 16 செப்டம்பர் 2020 13:08

புதுடெல்லி

மாநிலங்களவையில் மகாராஷ்டிர மாநிலம் புனே தொகுதி தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர் வந்தனா சவான், இந்தியா முழுவதும் உள்ள 24 கோடி மாணவர்கள் சார்பில் உருக்கமாக கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.

இந்தியாவின் இளைய தலைமுறையை சேர்ந்த மாணவர்கள் கரோனா வைரஸ் சொத்து பரவல் காரணமாக ஆன்லைன் முறையில் கல்வி கற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது இவருக்கு டிஜிட்டல் கருவிகள் அவசியமாகும்.

பத்தாவது வகுப்பு மாணவர் ஒருவருக்கு ஸ்மார்ட்போன் வாங்க முடியவில்லை என்ற காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டார்.

நமது இளைய தலை முறையினரை இப்படி மனம் நொந்து தற்கொலை செய்துகொள்ள நாம் அனுமதிக்கலாமா?

இந்தியாவில் தற்பொழுது 24 கோடி மாணவர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஆன்லைன் முறையில் கல்வி கற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதற்குத் தேவையான ஸ்மார்ட் போன் உள்பட டிஜிட்டல் கருவிகள் அவர்களுக்கு கிடைக்க செய்ய வேண்டியது அரசின் பொறுப்பாகும் . இதை இந்தியாவின் இளைய தலைமுறை மாணவர்கள் சார்பாக அரசிடம் கோருகிறேன்.

இவ்வாறு தேசியவாத காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் வந்தனா சவான் மாநிலங்களவையில் அரசுக்கு வேண்டுகோள் ஒன்றை முன்வைத்தார்.