விடுமுறைகோரி 3 தமிழக எம்பிக்கள் கடிதம்

பதிவு செய்த நாள் : 16 செப்டம்பர் 2020 12:48

புதுடெல்லி

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடரில் கலந்து கொள்ளாமல் இருக்க தங்களுக்கு அனுமதி வழங்கும்படி கோரி மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு தமிழகத்தைச் சேர்ந்த 3 எம்பிக்கள் கடிதம் எழுதி உள்ளனர்.

அதிமுகவைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன், முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வெங்கையா நாயுடுவுக்கு கடிதம் எழுதி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இவர்களைத் தவிர திங்களன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 எம்பிக்கள் தங்களுக்கு கூட்டத்தொடர் முழுக்க கலந்து கொள்ளாமல் இருக்க அனுமதி வேண்டும் என்று கடிதம் அனுப்பியுள்ளனர்.

புதன்கிழமை அன்று தமிழக எம்பிக்கள் உட்பட 15 பேர் மாநிலங்களவைத் தலைவருக்கு விடுப்பு கோரி கடிதம் அனுப்பி உள்ளனர்.