ஜப்பானின் புதிய பிரதமராக யோஷிஹைடு சுகா தேர்வு

பதிவு செய்த நாள் : 16 செப்டம்பர் 2020 12:32

டோக்கியோ

ஜப்பானின் புதிய பிரதமராக யோஷிஹைடு சுகா புதன்கிழமையன்று தேர்வு செய்யப்பட்டார்.

யோஷிஹைடு சுகா தேர்வு செய்யப்பட்டதும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

ஜப்பானின் பிரதமராக இருந்த அப்பே ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அவர் இடத்துக்கு சுகா தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இந்திய ஜப்பானிய உறவை புதிய வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்ல இணைந்து பணியாற்ற வாய்ப்பை எதிர்நோக்கி இருப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

தன்னுடைய வாழ்த்துச் செய்தியை ஜப்பானிய மொழியிலேயே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அனுப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.

யோஷிஹைடு சுகா ஜப்பானில் தற்பொழுது ஆளும் கட்சியாக உள்ள லிபரல் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்.

இதற்கு முன்னர் ஜப்பானிய தகவல்தொடர்பு குழித்துறை விவகார அமைச்சராகவும் பணியாற்றி இருக்கிறார் அத்துடன் ஜப்பானிய அமைச்சரவை செயலாளராக நீண்ட காலம் பணியாற்றியவர்.

அவரது அனுபவம் ஜப்பானிய அரசு திறம்பட நடத்த உதவும் என்று நம்பப்படுகிறது.