ஜார்க்கண்ட்டில் கரோனா பரிசோதனை கட்டணம் ரூ 1,500 ஆக குறைப்பு

பதிவு செய்த நாள் : 16 செப்டம்பர் 2020 11:54

ராஞ்சி

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்றை உறுதி செய்வதற்கான பிசிஆர் பரிசோதனை கட்டணம்  1500 ரூபாய் ஆக குறைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஜூன் 29-ஆம் தேதி ஜார்க்கண்ட் மாநிலத்தில் கரோனா வைரஸ் (கோவிட்-19) சோதனை கட்டணம் ரூ 2,400 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

சோதனைக்கு உதவும் கருவிகள் மற்றும் சம்பந்தப்பட்ட பொருட்களின் விலை இப்பொழுது குறைந்து இருப்பதால் கட்டணத்தை மறு நிர்ணயம் பண்ண வேண்டிய தேவை ஏற்பட்டது என்று ஜார்க்கண்ட் மாநில அதிகாரிகள் தெரிவித்தனர் .

விலை குறைப்பு அடிப்படையில் மறுபரிசீலனை செய்து கரோனா வைரஸ் பிசிஆர் சோதனை கட்டணம் ரூபாய் 1500 ஆக குறைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்

அரசு நிர்ணயித்துள்ள கரோனா வைரஸ் சோதனை கட்டணமாகிய ரூபாய் 1500 க்கு அதிகமாக வசூலிக்கும் தனியார் சோதனைக் கூடங்கள் மீது அரசு உத்தரவின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜார்க்கண்ட் மாநில அதிகாரிகள் எச்சரித்தனர்.