அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது

பதிவு செய்த நாள் : 15 செப்டம்பர் 2020 21:57

புதுடெல்லி

அத்தியாவசியப் பொருள்கள் திருத்த மசோதா மக்களவையில் இன்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

அத்தியாவசியப் பொருள்கள் திருத்த மசோதா மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய அகாலி தள எம் பி சுக்பிர்சிங் பாதல். இந்த அவசரச்சட்டம் ஏன் என்று கேள்வி எழுப்பினார் ? இந்த அவசரச்சட்டம் சட்டமாக்கப்படுவதற்கு முன்பு விவசாயிகள் அமைப்புகள் எதனுடனும் மத்திய அரசு ஆலோசனை நடத்தவில்லை. பஞ்சாபைச் சேர்ந்த விவசாயிகள் தான் இந்த அவசரச் சட்டம் காரணமாக பெரிதும் பாதிக்கப்படுவார்கள் .

விவசாயிகள் தங்களுக்கு பல சந்தேகங்கள் இருப்பதாக கூறுகிறார்கள் .முதலில் விலையை அதிகப்படுத்தி தரும் பன்னாட்டு நிறுவனங்கள் சந்தையை தங்கள் ஆதிக்கத்துக்கு கொண்டு வந்து விடுவார்கள் என்று விவசாயிகள் அஞ்சுகிறார்கள் என பாதல் தெரிவித்தார்.

ஆம் ஆத்மி கட்சியின் பகவந்த் மான் அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதாவை எதிர்ப்பதாக தெரிவித்தார்.

தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர் மசோதாவை ஆதரிப்பதாக கூறினார்.

ஆனால் வெட்டுக்கிளி படையெடுப்பு போன்ற இயற்கைப் பேரழிவுகள் ஏற்படும் பொழுது அரசு எப்படி தலையிடும் என்று அவர் சந்தேகம் எழுப்பினார்.

அத்தியாவசியப் பொருள்கள் திருத்த சட்டத்தை வேளாண் பொறியியல் துறை சந்தையில் இருக்கிற பெரும்புள்ளிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடும் அவர்களின் ஈடுபடுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுப்ரியா சுலே இந்த மசோதாவை தேசியவாத காங்கிரஸ் முறுக்கு எதிர்க்கிறது என்று கூறினார்.

மசோதா மீது காங்கிரஸ் தலைவர் ரஞ்சன் சௌதுரி பேசினார் மேற்குவங்கத்தில் ஒரு ஒரு பஞ்சம் வந்தது அப்பொழுது உணவுப்பொருள்கள் கிடைக்காத காரணத்தினால் 40 லட்சம் பேர் உயிரிழந்தார்கள்.எப்பொழுது பருக்களை சட்டை பூர்வமானதாக மாற்றுவதற்காக இந்தச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள் இந்த சட்டத் திருத்தத்தை ஏராளமான குளறுபடிகள் இருக்கின்றன பதுக்கல் பேர்வழிகள் எல்லாம் ஆத்மா நிர்பார் ஆக்குவதற்கு இந்த சட்டத்திருத்தம் உதவும் என்று அதிர் ரஞ்சன் சவுத்ரி கூறினார்..

திமுக எதிர்ப்பு

அத்தியாவசியப் பொருள்கள் திருத்த மசோதாவின் மீது திமுக உறுப்பினர் டி எம் கதிர் ஆனந்த் பேசினார் அப்போது அவர் கூறிய கருத்து ஏற்கனவே இருக்கிற ஒரு சட்டத்தில் திருத்தம் செய்வது என்றால் அது குறித்து நாடாளுமன்றத்தில் அல்லது சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டும் அந்த விவாதத்தின் அடிப்படையில் சட்டத்தை திருத்த வேண்டும் இதுதான் சட்டத்தை திருத்துவதற்கான முறை ஆனால் இங்கு ஒரு அவசரச் சட்டத்தின் மூலம் ஏற்கனவே அமலில் உள்ள ஒரு சட்டத்தை திருத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது இப்படி அவசரச் சட்டத்தின் மூலம் ஒரு ஏற்கனவே உள்ள சட்டத்தை திருத்துவதற்கு என்ன அவசியம் வந்துள்ளது என்று இந்த அரசு தெரிவிக்கவில்லை விலைவாசி உயர்ந்து அரசு தலையீடு விடுவேன் என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது அத்தகைய அசாதாரணமான சூழ்நிலை என்ன என்று மசோதாவில் விளக்கப்படவில்லை பெரிய நிறுவனங்கள் விவசாய பொருட்களை வாங்கி இருப்பு வைக்கலாம் அப்பொழுது குறைவாக இருந்தால் அவர்கள் எதிர்காலம் கருதி பொருள்களை வாங்கிக் குவித்து வைப்பார்கள் இத்தகைய வியாபாரத்தின் மூலம் விவசாயிகளுக்கு என்ன லாபம் கிடைக்கும் இந்த மசோதாவில் பல குழப்பங்கள் உள்ளன இந்த குழப்பங்கள் குறித்து அரசு விளக்கம் தரவேண்டும்.

இந்த மசோதாவில் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் பெரிய கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தான் நேரடியாக லாபம் கிடைக்கும் விவசாயிகளுக்கு நேரடியாக லாபம் கிடைக்க சந்தேகமே கிடையாது மத்திய அரசுக்கு இந்த மசோதாவின் மீது அழுத்தமான நம்பிக்கை இருந்தால் மசோதாவை எதிரிகளின் தேர்வுக் குழுவுக்கு அனுப்பலாம் தேர்வுக்குழுவில் அரசு தன்னுடைய கருத்தை விளக்கி உறுப்பினர்களின் ஏற்க செய்யலாம் என்று திமுக உறுப்பினர் கதிர் ஆனந்த் ஆலோசனை கூறினார்.

பாஜக அரசின் அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதாவுக்கு சிவசேனை ஆதரவு தருவதாக அறிவித்தது ஐக்கிய ஜனதா தளமும் திருத்தத்தை ஆதரிப்பதாக கூறியது.

பிஜு ஜனதா தளம் மசோதாவை ஆதரிப்பதாக கூறியது.

விவசாயி பொருள்கள் மீதான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று பிஜு ஜனதா தளம் உறுப்பினர் பர்த்ருஹரி மகதப் வலியுறுத்தினார் சீனா ஏழை நாடுகளுக்கு கடன் தந்து தன் பக்கம் இழுத்துக் கொள்கிறது நாம் உணவுப் பொருள்களை பயன்படுத்தி ஏழை நாடுகளை நமக்கு ஆதரவாக நிற்கச் செய்ய வேண்டும் என்று மகதப் கூறினார்.

மார்க்சிஸ்டு உறுப்பினர் அறிவிப்பும் இந்த மசோதாவை கடுமையாக எதிர்ப்பதாக கூறினார் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் குழு உறுப்பினர் முகமது பஷீர் இந்த மசோதாவை கடுமையாக குறை கூறினார் வேளாண் பொருள் சந்தை என்பது மாநில அரசுகளின் அதிகாரத்தின் கீழ் வருகின்ற விஷயமாகும் இந்த பிரச்சனை இந்த பிரச்சனை குறித்து மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்காமல் மத்திய அரசு தன் இஷ்டப்படி சட்டம் கொண்டு வந்திருக்கிறது அரசியல் சட்டத்துக்கு எதிராக மத்திய அரசு அதிகாரங்களை தன்வசம் குறித்து வைத்துக் கொள்வதற்கு மேற்கொள்ளுகின்ற நடவடிக்கை இது என்று பஷீர் குறிப்பிட்டார்.

திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் சவுக்கதா ராய் அத்தியாவசியப் பொருள்கள் திருத்த மசோதாவை கடுமையாக குறை கூறினார் இந்த மசோதாவை அவசரம் அவசரமாக கொண்டு வருவதற்கான தேவை என்ன என்று அரசு கூற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

வேளாண் விளைபொருள் சந்தை தொடர்பாக மாநில அரசுகளுக்கு உள்ள அதிகாரத்தை பறித்துக் கொள்வதற்கு மத்திய அரசு திட்டமிட்டு செயல்படுகிறது என்று ராய் குற்றம்சாட்டினார்.

 இந்த திருத்த சட்டத்தினால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் பன்னாட்டு நிறுவனங்கள் கார்ப்பரேட் கம்பெனிகள் லாபம் குவிப்பார்கள் என்று அவர் கூறினார்.

பஞ்சாப் ஹரியானா சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள அத்தியாவசியப் பொருள்கள் திருத்த அவசரச் சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள் காங்கிரஸ் எம்பி அமர்சிங் கூறினார்.விவசாய விளைபொருட்களின் விலை 100 சதவீதம் உயர்ந்தால் தான் அரசு தலையிடும் என்று மசோதாவில் கூறுகிறது.

மாநில அரசின் அதிகாரத்தை கூட இந்த திருத்தச் சட்டத்தின் மூலம் மத்திய அரசு பறித்துக் கொள்கிறது மத்திய அரசு பெரிய தவறு செய்கிறது இதனால் பெரிய கம்பெனிகள் லாபம் அடைவார்கள் என்றார் அமர்சிங்.

அத்தியாவசியப் பொருள்கள் திருத்த மசோதா மீதான விவாதத்துக்கு நுகர்வோர் விவகார அமைச்சர் ராவ் சாஹிப் பட்டீல் தண்வி பதிலளித்தார்.

இந்தியாவில் கடுமையான உணவு பற்றாக்குறை நிலவிய பொழுது 1955 ஆம் ஆண்டு அத்தியாவசியப் பொருள்கள் சட்டம் கொண்டுவரப்பட்டது இப்பொழுது இந்தியாவில் உணவுப் பஞ்சம் இல்லை நம்மிடம் கூடுதலான உணவு உள்ளது.உணவு பொருட்கள் வீணாவதைத் தடுக்க நாம் உணவுப் பொருட்களைப் பதப்படுத்த வேண்டும் குளிர்பதனக் கிடங்குகள் இல்லாத காரணத்தினால் விவசாயிகளின் வர்த்தக பொருள்கள் வீணாகின்றன.

அத்தியாவசியப் பொருள்கள் திருத்த மசோதா காரணமாக வேளாண் விளைபொருள் சந்தையில் போட்டி ஊக்குவிக்கப்படும் இதனால் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கும் நுகர்வோரும் இதனால் லாபம் அடைவார்கள் என்று கூறினார்.

உற்பத்தி அதிகரித்து இருப்பதாக அமைச்சர் கூறுகிறார் ஆனால் மக்கள் தொகையும் அதிகரித்து உள்ளது என்பதை அவர் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று சவுகான் ராய் குறுக்கிட்டுக் கூறினார்.

அமைச்சரின் பதிலுக்கு பிறகு குரல் வாக்குமூலம் அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா நிறை வேற்றப்பட்டது.