டாட்டா மற்றும் ஹுணடாய் நிறுவனங்களின் 250 மின்சார கார்களை மத்திய அரசு வாங்க முடிவு

பதிவு செய்த நாள் : 03 செப்டம்பர் 2020 18:33

புது தில்லி

டாடா நெக்ஸான் மின்சார வாகனங்கள், ஹுண்டாய் கோனா மின்சார வாகனங்கள் ஆகிய இரண்டு நிறுவனங்களிடம் இருந்தும் முறையே 150 மற்றும் 100 மின்சார கார்களை விலைக்கு வாங்க மத்திய அரசின் மின்சார வாகன கொள்முதல் நிறுவனமாகிய எனர்ஜி எஃபீஷியேன்ஸி சர்வீஸஸ் இன்று முடிவு செய்தது.

டாடா நெக்ஸான்
ஹுண்டாய் கோனா


மத்திய அரசுக்காக மின்சார கார்களை கொள்முதல் செய்ய சர்வதேச விலைப்புள்ளி கோரிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

டாடா எக்ஸான் தயாரிக்கும் மின்சார காரின் விலை ரூபாய் 14.86 லட்சம் ஆகும் இந்த காரின் விலையை 13,000 அளவுக்கு குறைத்து தர டாட்டா நிறுவனம் சம்மதம் தெரிவித்தது. மார்க்கெட்டில் டாடா எக்ஸான் மின்சார காரின் விலை ரூபாய் 14.99 லட்சம் ஆகும். அதனை ரூபாய் 14.86 லட்சத்துக்கு தர டாட்டா நிறுவனம் சம்மதித்தது.

ஹுண்டாய் கோனா தயாரிக்கும் மின்சார காரின் விலையை 11 சதவீதம் குறைத்து தர அந்நிறுவனம் சம்மதம் தெரிவித்தது 11 சதவீதம் விலை குறைக்கப்பட்ட நிலையில்ஹுண்டாய் கோனா மின்சார காரின் விலை ரூபாய் 21. 36 லட்சம் ஆகும்.

இரண்டு கம்பெனிகளும் தங்கள் காருக்கு மூன்றாண்டு கால வாரண்டி வழங்க முன்வந்துள்ளன.

மத்திய மாநில அரசுகளின் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கு பதிலாக இந்த மின்சார கார்கள் பயன்படுத்தப்படும்.

கேரள அரசின் மரபுசாரா மின் உற்பத்தி துறை 300 கார்களுக்கு ஏற்கனவே எனர்ஜி ஏஜன்ஸி சர்வீஸஸ் நிறுவனத்திடம் ஆடர் தந்துள்ளது.