ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டி வருமானம் 12 சதவீதம் குறைந்தது

பதிவு செய்த நாள் : 02 செப்டம்பர் 2020 14:36

புதுடெல்லி

ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருமானம் ஜூலை மாத வருமானத்தை விட 1 சதவீதம் குறைந்து, 12 சதவீதத்தில் ரூபாய் 86,449 கோடியாக உள்ளது.

கடந்த ஜூலை மாத ஜிஎஸ்டி வருமானம் ரூபாய் 87,422 கோடியாகும்.

மாநில வாரியாக ஜிஎஸ்டி வருமானத்தைக் குறித்து ஆய்வு செய்யும் பொழுது பல புதிய தகவல்கள் வெளியாகின்றன.

உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் ஜிஎஸ்டி வருமானம் கொஞ்சம் அதிகரித்துள்ளது.

ஆனால் ஹரியானா, குஜராத் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் ஜிஎஸ்டி வருமானம் கொஞ்சம் குறைந்துள்ளது. இதுதவிர ஜிஎஸ்டி வருமானம் அதிகமாக கிடைக்கக்கூடிய தொழில் மாநிலங்களாகக் கருதப்படும் மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களிலும் ஜிஎஸ்டி வருமானம் கணிசமாக குறைந்துள்ளது.

சென்ற ஆண்டு கிடைத்ததைவிட, இந்த ஆண்டு வெளிநாட்டிலிருந்து வரும் இறக்குமதி மூலமாக கிடைக்கும் ஜிஎஸ்டி வருமானம் 23 சதவீதம் குறைந்துள்ளது.

உள்நாட்டு உற்பத்தி மூலம் கிடைக்கும் ஜிஎஸ்டி வருமானம் 8 சதவீதம் குறைந்துள்ளது.

ரூபாய் 5 கோடிக்கும் குறைவாக வருமானம் உள்ள சிறு தொழில் நிறுவனங்கள் செப்டம்பர் மாதம் வரை இன்னும் தங்கள் நிதிநிலை அறிக்கைகளை தாக்கல் செய்யவில்லை

இந்த புள்ளிவிவரங்கள் எல்லாம் இந்தியப் பொருளாதாரம் மீட்சிப் பாதைக்கு திரும்பி இருப்பதை காட்டுகின்றன என்று இந்தியாவின் பங்குதாரரான எம்எஸ் மணி தெரிவித்தார்.