இந்து அறநிலையத்துறை ஆணையராக டாக்டர் பிரபாகர் நியமனம்

பதிவு செய்த நாள் : 30 ஆகஸ்ட் 2020 13:34

சென்னை,

இந்து அறநிலையத்துறை புதிய ஆணையராக  டாக்டர் பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து தலைமை செயலாளர் க. சண்முகம் வெளியிட்ட உத்தரவு

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் டாக்டர் எஸ்.பிரபாகர் மாற்றம் செய்யப்படுகிறார், அவர் இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையராக நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே இந்த பொறுப்பை பணிந்திர ரெட்டி கூடுதலாக வகித்து வந்தார், அருள் மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயில்  நிர்வாக அதிகாரி டாக்டர் ஜெயச்சந்திர பானு ரெட்டி மாற்றம் செய்யப்பட்டு கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்படுகிறார்

ஆசிரியர்கள் தேர்வாணையத்தின் தலைவர் ஜி. லதா மாற்றம் செய்யப்பட்டு சமக்கார ஷிக்சாவின் மாநில திட்ட இயக்குனராக  நியமிக்கப்பட்டுள்ளார் இந்த பொறுப்பை வெங்கடேஷ் கூடுதலாக கவனித்து வந்தார்,கோவை மாநகராட்சி கமிஷனர் சரவண்குமார் ஜடாவத் மாற்றம் செய்யப்பட்டு வேளாண்துறையின் துணைச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார், சென்னை மாநகராட்சியின் துணைக்கமிஷனர் (பணிகள்) குமாரவேல் பாண்டி.யன் கோவை மாநகராட்சி கமிஷனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்,

இவ்வாறு, தமிழக அரசு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.