ஏன்னா, எனக்கு அப்பவே தெரியும் நீங்க எவ்ளோ பெரிய ஆளுன்னு, எனக்கு ஜாமீன் வாங்கி கொடுங்க அண்ணா! - பிரபல நடிகரிடம் உதவி கேட்கும் சூர்யா தேவி

04 ஆகஸ்ட் 2020, 11:32 AM

நடிகை வனிதா மூன்றாவது திருமண சர்ச்சை காரணமாக, யூடியூப் பிரபலம் சூரியாதேவி தனக்கு கொலை மிரட்டல் விடுத்தார் என்றும் வனிதா கூறியதை அடுத்து சூரியாதேவி கைது செய்யப்பட்டார். பின்னர் சூரியா தேவி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 

அவருக்கு குழந்தைகள் இருப்பதால் அவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று கூறியிருந்தார் நடிகை வனிதா.

இந்நிலையில், தனக்கு முன் ஜாமின் கிடைக்க ஏற்பாடு செய்யுமாறு நடிகர் எஸ்.வி.சேகருக்கு கோரிக்கை வைத்து வீடியோ வெளியிட்டுள்ளார் சூரியாதேவி. 

அதில் அவர் கூறியிருப்பதாவது: 

எஸ்.வி.சேகரண்ணா வணக்கம். நாம மீட் பண்ணியிருக்கோம். ரெண்டு வருஷத்துக்கு முன்னால தமிழிசை சவுந்தரராஜன் அக்காவை ஆபாசமா பேசினேன்னு, எனக்கு தண்டனை கொடுத்தாங்க. தண்டனை அனுபவிச்சுட்டு வந்த பிறகு நான் கையெழுத்து போட்டுட்டு இருக்கும்போதுதான் கோர்ட்ல உங்களை பார்த்தேன்.

அப்ப ஒரு வழக்குல உங்களுக்கு மட்டும் முன் ஜாமின் கொடுத்தாங்க. எனக்கு கொடுக்கல. என்னைய பெரிய லெவல்ல பிடிச்சுப் போட்டுட்டாங்க. நான் சாதாரண பொண்ணு.

நீங்க ஒரு நாடகத்துல வனிதா அக்காவுக்கு மெட்டி போட்ட போட்டோவை பார்த்தேன். நீங்க செலபிரிட்டியா இருந்து போட்டோ எடுத்தா தப்பில்லையாம். 

நான், செலபிரிட்டியா இருந்த நாஞ்சில் விஜயன் கூட போட்டோ எடுத்தா, பெரிய தப்பு.

என்னால வீட்டுக்கும் போக முடியலை. என் வீட்டைப் பார்த்தீங்கன்னா தெரியும். தமிழ்நாட்டுலயே சூரியாதேவி வீட்டை மட்டும் வாசலையே அடைச்சுட்டாங்கண்ணா.

பார்த்தீங்களா, எவ்வளவு பெரிய கொரோனான்னு. என் வீட்டை எப்படி அடைச்சு வச்சிருக்காங்கன்னு பாருங்க.

எனக்கு முன் ஜாமின் வேணும்.

எனக்கு ரெண்டு குழந்தைங்க இருக்காங்க.எனக்காக இந்த உதவி மட்டும் பண்ணிக் கொடுங்கண்ணா.

இவ்வாறு சூரியாதேவி கூறியுள்ளார்.