தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,51,738-ஆக அதிகரித்துள்ளது

பதிவு செய்த நாள் : 01 ஆகஸ்ட் 2020 18:34

சென்னை

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,51,738-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் கோவிட்-19 தொற்று 5,879 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறை செய்தி குறிப்பில் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,51,738-ஆக அதிகரித்துள்ளது

இன்று மட்டும் கோவிட்-19 தொற்று 5,879 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது வரை கோவிட்-19 க்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 56,738 பேர்


சென்னையில் இன்று மட்டும் 1,074 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இதுவரை 1,00,877 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில் தற்போது கோவிட்-19 க்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 12,436 - பேர்


தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பாதிப்பால் இன்று ஒரே நாளில் 99 பேர் உயிரிழந்துள்ளனர். 

இவர்களில் தனியார் மருத்துவமனைகளில்  22    பேரும்  அரசுமருத்துவமனைகளில் 77    பேரும் இறந்துள்ளனர்,   

சென்னையில் மட்டும் நோய்த்தொற்று காரணமாக  27  பேர்  இறந்துள்ளனர், .

இதுவரை கோவிட்-19-னால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,034-ஆக அதிகரித்துள்ளது


தமிழகத்தில் கோவிட்-19 க்கான பரிசோதனை இன்று மட்டும் 58,243 பேருக்கு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோவிட்-19 க்கான பரிசோதனை இதுவரை 26,18,512 பேருக்கு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோவிட்-19-னால் பாதித்தவர்களில் இன்று மட்டும் 7,010-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் கோவிட்-19-னால் பாதித்தவர்களில் இதுவரை 1,90,966 - பேர் மருத்துவ சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கோவிட்-19 தொற்று அடைந்தவர்களில் இதுவரை 75.86 % பேர் மருத்துவ சிகிச்சையில் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள மொத்த கோவிட்-19  பரிசோதனை நிலையங்கள் 121 (59 அரசு + 62 தனியார்)

வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த 57 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவிட்-19 தொற்றால் பாதித்தவர்களின் விவரம் (01.08.2020) மாவட்ட வாரியாக கீழே தரப்பட்டுள்ளது.