டிக் டாக் ஆப்ஸை அமெரிக்க ராணுவ வீரர்கள் அரசு போன்களில் பயன்படுத்த தடை

பதிவு செய்த நாள் : 01 ஆகஸ்ட் 2020 16:46

நியூயார்க்

டிக் டாக் ஆப்ஸை (Tik Tok  App) அமெரிக்க ராணுவ வீரர்கள் அரசு அவர்களுக்கு வழங்கிய போன்களில் பயன்படுத்த அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது.

இந்த தகவலை புளோரிடாவில் இருந்து நியூயார்க் நகருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் பயணம் செய்யும்பொழுது செய்தியாளர்களிடம் வெள்ளியன்று  தெரிவித்தார்.

இதற்கான உத்தரவை நாளை வெள்ளை மாளிகையில் கையெழுத்திட போவதாகவும் அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார்.

அமெரிக்க அரசு - சீன தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஹுவாவெய் மற்றும் பிற கம்பெனிகளின் கருவிகளை வாங்கி அமெரிக்க தொலைத் தகவல் தொடர்பு இணைப்புகளில் பயன்படுத்தினால் அதற்கு உரிய கடன்கள் அனுமதிக்கப்பட மாட்டாது என்று அறிவித்துள்ளது.

சீன நிறுவனமான டான்ஸ் 2017 ஆம் ஆண்டு டிக் டாக் ஆப் சைட் உருவாக்கி வெளியிட்டது.

அந்த ஆப்ஸ் அமெரிக்காவிலும் ஐரோப்பிய யூனியனிலும் மற்ற நாடுகளிலும் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. ஃபேஸ்புக் மற்றும் ஸ்னாப்ஷாட் நிறுவனங்களுக்கு டிக் டாக் போட்டியாக அமையக்கூடும் என்று அமெரிக்க நிறுவனங்கள் கருதுகின்றன.

டிக் டாக் ஆப்ஸை அமெரிக்க பொதுமக்கள் பயன்படுத்தவும் தடை விதிக்க அமெரிக்கா அரசு பரிசீலித்து வரும் வேளையில் அந்த நிறுவனத்தின் பயன்பாட்டை விலைக்கு வாங்க அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையும், பாக்ஸ் தொலைக்காட்சியும் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தச் செய்தி பற்றி மைக்ரோசாப்ட் நிறுவனம் எந்த கருத்தும் வெளியிடவில்லை. டிக் டாக் நிறுவனம் செய்தியை மறுக்கவும் இல்லை, உறுதி செய்யவும் இல்லை.

 உலகு தழுவிய அளவில் டிக் டாக் ஆப்ஸை மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்க முன் வராவிட்டாலும் அமெரிக்க அளவில் அதன் பயன்பாட்டை விலைக்கு வாங்க முன் வரக்கூடும் என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.