நீதிமன்ற அவமதிப்பு சட்டத்துக்கு எதிராக மூன்று பிரபலங்கள் மனு

பதிவு செய்த நாள் : 01 ஆகஸ்ட் 2020 13:56

புதுடெல்லி

நீதிமன்ற அவமதிப்பு சட்டத்துக்கு எதிராக பிரபல பத்திரிக்கையாளர்கள் என். ராம், அருண்ஷோரி ஆகியோரும் சமூக ஆர்வலர் பிரசாந்த் பூஷனும் இணைந்து உச்ச நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர்.

நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது, பிரிட்டிஷ் காலத்தில் உருவாக்கப்பட்டது. பேச்சு சுதந்திரம், கருத்துக்களை வெளியிடும் சுதந்திரம் ஆகியவற்றுக்கு எதிரானது என்று மூவரும் தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

நீதிமன்ற அவமதிப்பு சட்டம்  தெளிவற்றது, தகுந்த காரணங்கள் இல்லாமல் ஒரு செய்தி அல்லது வெளியீடு நீதிமன்றத்தை அவமதிப்பதாகும் என்று புகார் சுமத்த இந்தச் சட்டம் வகை, தகுந்த அடிப்படை இல்லாமல் நீதிமன்ற ஆணையத்தை கேள்விக்குறியாக்குவதாகவும், இந்தச் சட்டம் புகார் பதிவு செய்ய இடமளிக்கிறது என்று அவர்கள் தங்கள் மனுவில் கூறியுள்ளனர்.

இந்த மூன்று பேர் சார்பாக வழக்கறிஞர் காமினி ஜெய்ஸ்வால் மனுதாக்கல் செய்துள்ளார். நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் பிரிவு 2 (சி)( ஐ)  அரசியல் சட்டப்படி அங்கீகரிக்க முடியாதவை என்று காமினி மனுவில் கூறியுள்ளார்.

நீதிமன்றத்தை அவமதிப்பது என்ற கருத்து பிரிட்டிஷார் இந்தியாவை ஆண்ட காலத்தில் தோன்றியதாகும். அதன் அடிப்படையில் குற்றவியல் அவமதிப்பு சட்டத்தை பாரபட்சமில்லாமல் அமல்படுத்துவது என்பது சாத்தியமில்லாத நடவடிக்கையாகும்.

சமீபத்தில் டுவிட்டரில் 2 பதிவுகளை பிரசாந்த் பூஷன் வெளியிட்டார்.

அந்த இரண்டில் ஒன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் புகைப்படம் தொடர்பானது, மற்றொன்று உச்சநீதிமன்றத்தின் இயக்கம் பற்றியது.

இந்த இரண்டு தொடர்பான விசாரணைகள் உடன் இப்பொழுது தெகல்கா பத்திரிகையில் பிரசாந்த் பூஷன் வழங்கிய பேட்டி ஒன்று தொடர்பானது. வழக்கறிஞர் ஒருவர் இந்த பேட்டி தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றினை தொடர்ந்திருந்தார். அந்த வழக்கும் இப்பொழுது முந்திய இரண்டு விளக்குகளுடன் சேர்க்கப்பட்டு 3 ஆக்கப்பட்டுள்ளது.

 நீதிமன்ற அவமதிப்பு சட்ட விதிகள் வழக்கறிஞர் பூஷனின் கருத்து வெளியிடும் உரிமையை கட்டுப்படுத்துவதாக அமைகிறது என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.