சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 99,794 ஆக உயர்ந்தது

பதிவு செய்த நாள் : 01 ஆகஸ்ட் 2020 11:50

சென்னை

சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 99,794 ஆக உயர்ந்தது. 15 மண்டலங்களில் இதுவரை அதிகபட்சமாக இராயபுரத்தில் 10,979 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நோய் மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் எந்தந்த மண்டலங்களில் எத்தனை பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை சென்னை மாநகராட்சி இன்றும் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 2 லட்சத்து 45 ஆயிரத்து 859 பேர் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிப்படைந்து உள்ளனர். இதுவரை 1 லட்சத்து 83 ஆயிரத்து 956 பேர் மருத்துவ சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிக்குள் கொரோனா நோய் தொற்று பாதிப்பு நிலவரம் :

சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 1,013 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 99,794 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் நேற்று 11,376  பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

சென்னையில் தற்போது வரை கொரோனா வைரஸ் நோய் தொற்று கண்டறியப்பட்டவர்களில் 12,765 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

இதுவரை மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்தவர்கள் 84 ஆயிரத்து 916 பேர்.

சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. சென்னையில் இதுவரை 2,113 பேர் கொரோனா வைரஸ் தாக்கி இறந்துள்ளனர்.  இதனால் தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 3,935 - ஆக உயர்ந்துள்ளது.


சென்னையின் 15 மண்டலங்களில் 12,765 பேர் கொரோன வைரஸ் தடுப்பு மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் மருத்துவ சிகிச்சை பெற்றுவரும் விவரம் மண்டலவாரியாக கீழே தரப்பட்டுள்ளது: