புது தில்லி
உலகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தலைவர்கள் பலர் வாழ்த்துச் செய்தி விடுத்துள்ளனர்.
கோவிட்-19 வைரஸ் தொற்று நோய் பரவல் காரணமாக இஸ்லாமியர்கள் வீடுகளிலேயே தொழுகையை மேற்கொண்டனர்.
பக்ரீத்தை முன்னிட்டு இஸ்லாமிய பெருமக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து பதிவிட்டுள்ளார்.
Eid Mubarak!
— Narendra Modi (@narendramodi) August 1, 2020
Greetings on Eid al-Adha. May this day inspire us to create a just, harmonious and inclusive society. May the spirit of brotherhood and compassion be furthered.
மதநல்லிணக்கம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை கட்டமைக்க இந்த நாள் தூண்டுதலாக அமையட்டும், ஈத் முபாரக், ஈத் அல் அதா.
சகோதரத்துவம் மற்றும் கருணையின் ஆன்ம பலம் மேலும் பெருகட்டும்
இவ்வாறு, பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்