எட்டு முக்கிய தொழில்துறைகளில் உற்பத்தி 15% பாதிப்பு

பதிவு செய்த நாள் : 31 ஜூலை 2020 19:10

புதுடெல்லி

உரம், நிலக்கரி, கச்சா எண்ணெய் உற்பத்தி, இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு, இரும்பு உருக்கு உற்பத்தி, சிமெண்டு தயாரிப்பு, மின்சார உற்பத்தி ஆகிய 8 துறைகளிலும் வளர்ச்சி ஜூன் மாதத்தில்15 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதே எட்டு துறைகளிலும் 2019 ஜூன் மாதத்தில் உற்பத்தி 1.2 சதவீதம் அதிகரித்திருந்தது.

2020 ஜூன் மாதத்தில் உற்பத்தி 15 சதவீதம் குறைந்துள்ளது என்று கூறும் புள்ளி விவரங்களை மத்திய தொழில் வர்த்தக துறை அமைச்சகம் வெள்ளியன்று வெளியிட்டது.

உரத்துறை நீங்களாக மீதமுள்ள 7 துறைகளிலும் 2020 ஆம் ஆண்டு மே மாதத்தில் உற்பத்தி எதிர்மறையில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நிலக்கரி -15.5%. கச்சா எண்ணெய் -6%. இயற்கை எரிவாயு-12%. எண்ணெய் சுத்திகரிப்பு பொருள்கள்-8.9%. இரும்பு -33.8%. சிமெண்ட்-6.9% மின்சாரம்-11% உற்பத்தி குறைந்துள்ளது.

கடந்த மே மாதத்தில் இந்த 8 துறைகளின் உற்பத்தி 22 சதவீதம் குறைந்திருந்தது.

2019 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் இந்த 8 துறைகளில் வளர்ச்சி 3.4 சதவீதமாக இருந்தது.

2020 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் இது 8 துறைகளில் உற்பத்தி 24.6 சதவீதம் குறைந்தது.

இந்தியாவில் ஒட்டுமொத்த தொழில்துறை உற்பத்தியில் இந்த எட்டு துறைகளில் பங்கு 40.2 7% ஆகும்.