சென்னையில் தங்கம் விலை இன்று புதிய உச்சத்தைத் தொட்டது

பதிவு செய்த நாள் : 24 ஜூலை 2020 19:36

சென்னை

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் 1 கிராம் 5,129 ரூபாயாக உயர்ந்தது.

ஒரு பவுன் 8 கிராம் விலை இன்று இதுவரை இல்லாத அளவுக்கு 41,032 ஆக உயர்ந்தது.

22 காரட் தங்கமும் 1 கிராம் விலை 4,848 ரூபாயிலிருந்து 4 ஆயிரத்து 885 ரூபாயாக உயர்ந்தது.

22 காரட் தங்கம் 1 பவுன் விலை இன்று ரூபாய் 39,080 ஆக உயர்ந்தது.

கடந்த 15ஆம் தேதி 24 காரட் தங்கம் ஒரு கிராம் விலை 4 ஆயிரத்து 952 ஆக இருந்தது.

அன்று ஒரு பவுன் விலைரூ 39,616 ஆக இருந்தது.

இந்தியாவின் முக்கிய நகரங்களில் எல்லாம் இன்று தங்கத்தின் விலை உயர்ந்தது.