தங்கம் வெள்ளி விலை இன்று கடும் உயர்வு

பதிவு செய்த நாள் : 22 ஜூலை 2020 16:26

சென்னை,

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.544 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.38,184-க்கு விற்பனையாகிறது.

கொரோனாவால் வைரஸ் பாதிப்பால் ஊரடங்கால் பொருளாதாரம் சரிந்துள்ள நிலையில் தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகிறன்றன.

சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் 37,736 ரூபாயாக இருந்த நிலையில் இன்று 544 ரூபாய் உயர்ந்துள்ளது. இதையடுத்து ஒரு சவரன் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் இன்று ரூ.38,184க்கு விற்பனையாகிறது.
மேலும் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 40,096 ரூபாயாக உள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.68 உயர்ந்து ரூ.4773க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.544 உயர்ந்து ரூ.38184க்கு விற்பனையாகிறது.

இதேபோல் 24 காரட் ஆபரண தங்கத்தின் விலை 8 கிராம் 40192 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று 60100 ரூபாயாக இருந்த நிலையில் இன்று 65,700 ரூபாயாக உள்ளது.