பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் ஜூலை 15ம் தேதி லேப்டாபுடன் பள்ளிக்கு வர உத்தரவு

பதிவு செய்த நாள் : 13 ஜூலை 2020 20:47

சென்னை,

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் ஜூலை 15ம் தேதி  வீடியோ பாடங்களை பதிவிறக்கம் செய்ய லேப்டாபுடன் பள்ளிக்கு வருகை தர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு வெளியிட்ட சுற்றறிக்கை வருமாறு:

2020 - 21ஆம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 (+2)  மாணவர்ளுக்கு பாடபுத்தங்கள் வழங்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது, மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் வழங்கும் போது வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும், அனைத்து உயர்நிலை மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் படிக்கும் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களை ஒரு மணி நேரத்திற்கு 20 மாணவர்கள் வீதம் அழைக்கப்பட வேண்டும், எனவே நாளை மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நேரம் ஒதுக்கி அதற்கான தகவலை மாணவர்கள் அல்லது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட வேண்டும், அப்போது தான் ஜூலை 15ம் தேதி காலதாமதமின்றி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க முடியும் நோய்க்கட்டுப்பாட்டு பகுதியில் மாணவர்கள் எவரேனும் இருப்பின் அவர்களுடைய தனிமைப்படுத்தப்பட்ட கால  அளவு முடிந்த பிறகு பள்ளிக்கு வரவழைத்து புத்தகங்களை வழங்க வேண்டும்.

பாடபுத்தகங்கள் பெறுவதற்காக வரும் மாணவர்கள் பெற்றோர்கள் முகக்கவசம் அணிந்து வருமாறு தெரிவிக்க வேண்டும், பாடபுத்தகங்கள் வழங்கும்போது சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும், பள்ளிகளின் நுழைவாயிலில் கூட்டம் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் 

மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரியும்போது அவர்களுக்கு வழங்கப்பட்ட மடிக் கணினிகளை கொண்டு வர வேண்டும், மடிக்கணினியின் மேற்புறம் மாணவரின் பெயர் மற்றும் வகுப்பு விபரங்களை எழுதி ஒட்டப்பட வேண்டும், மடிக்கணினியை புல் பேட்டரி சார்ஜ் செய்து கொண்டு வரவேண்டும், இது குறித்து பொறுப்பு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு முன்னரே தெரிவிக்க வேண்டும்  ஹைடெக் லேப் மூலம் வீடியோ பாடங்களை பதிவிறக்கம் செய்யும் போது மாணவர்களோ அவர்களின் பெற்றோர்களுக்கோ உள்ளே செல்ல அனுமதி இல்லை.

மாணவர்களுக்கு பதிவிறக்கம் செய்து தருவதற்காக நியமிக்கப்பட்ட முதுகலை  பாட ஆசிரியரோ அல்லது கணினி ஆசிரியரோ  மாணவர்களிடமிருந்து  லேப் டாப்பை பெற்றுக்கொண்டு பதிவிறக்கம் செய்து தரவேண்டும்

பதிவிறக்கம் செய்யும் போது மாணவர்கல் அருகாமையில் உள்ள வகுப்பறையில் சமூக இடைவெளிப்படி அமரவைக்கப்பட வேண்டும்,  பதிவிறக்கம் செய்து முடித்த உடன் மாணவர்களின் மடிக்கணினியை அவர்களிடம் திருப்பி தந்து அவர்களை வீட்டிற்கு செல்ல அனுமதிக்க வேண்டும்,

வீடியோ பாடங்கள் பதிவிறக்கம் செய்வதில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 

ஸ்டேட் இஎம்ஐஎஸ் ஒருங்கிணைப்பாளர் சத்யா (கைபேசி 72000 71274) 

எல்அண்டு டி திட்ட இயக்குநர் கிருஷ்ணன் (கைபேசி 94450 46003) 

ஆகியோரை தொடர்பு கொள்ளலாம், மேலும் ஹைக் டெக் லேப் மாவட்ட பொறியாளர்களின் தொலைபேசி எண்களும் இணைப்பில் தரப்பட்டுள்ளது, தேவை இருப்பின் அவர்களையும் தொடர்பு கொண்டு தங்களது ஐயங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்

மேலும் ஹைடெக் லேப் மூலம் வீடியோ பாடங்களை பதிவிறக்கம் செய்து தருவதற்காக  நியமிக்கப்பட்ட பொறுப்பு ஆசிரியர்கள் இன்று (14 ம்தேதி) பள்ளிக்கு வருகை புரிந்து விடியோ பாடங்களை  பதிவிறக்கம் செய்யும் முறையை மாதிரி பயிற்சி செய்து பார்த்திட வேண்டும் அப்போது தான், நாளை (15 ம்தேதி ) வீடியோ பாடங்களை பதிவிறக்கம் செய்வதில்  எவ்வித சுணக்கமும் இன்றி பணியை விரைந்து செய்திட முடியும்.

இவ்வாறு பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அந்த சுற்றறிக்கையில் கூறியுள்ளார்,