சார்ட்டட் அக்கவுண்டண்ட் தேர்வு ரத்து

பதிவு செய்த நாள் : 13 ஜூலை 2020 18:33

புதுடெல்லி

இந்திய சார்ட்டட் அக்கவுண்டண்ட் நிறுவனம் மே மாத குழுவுக்கான தேர்வுகள் ஜூலை மாதம் 29ந்தேதி. ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி நடக்க இருந்தன. இந்தத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு விட்டன என்று உச்சநீதிமன்றத்தில் இந்திய சார்ட்டட் அக்கவுண்டண்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

மே மாத குழுவுக்கான தேர்வுகள் நவம்பர் மாத குழுவுக்கான தேர்வுடன் நினைத்து நடத்தப்படும் என்று இந்திய சார்ட்டட் அக்கவுண்டண்ட் நிறுவன வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார்.

உச்சநீதிமன்ற நீதிபதி ஏ எம் கான்வில்கர் தலைமையிலான அவரது சம்பந்தப்பட்ட வழக்கு ஒன்றை விசாரித்து வருகிறது.